மேலும் அறிய

நவராத்திரி நிறைவு விழா.. ஊஞ்சல் சேவையில் காட்சியளித்த காஞ்சி காமாட்சி ...!

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் மூலஸ்தான அம்பாள் திருக்கோலத்தில் அங்குச பாசத்துடன் ஊஞ்சல் சேவையில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

சக்தி பீடங்களில் ஒன்றான காஞ்சிபுரம் அன்னை  காமாட்சி ஆலயத்தில் நவராத்திரி உற்சவம் விமர்சையாக நடைபெற்று வருகிறது. காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலின் நவராத்திரி நிறைவு விழாவாக ஊஞ்சல் உற்சவம் விமர்சையாக நடைபெற்றது. இதில் அம்பாள் மூலஸ்தான அம்பாள் திருக்கோலத்தில், அங்குச பாதத்துடன் லட்சுமி, சரஸ்வதி, தேவிகளுடன் ஊஞ்சல் சேவையில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
 
நவராத்திரி நிறைவு விழா.. ஊஞ்சல் சேவையில் காட்சியளித்த காஞ்சி காமாட்சி ...!
 
இதில் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஊஞ்சலில் எழுந்தருளிய அம்பாளுக்கு சிறப்பு தூப தீப ஆராதனைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்பாளின் பேரருளை பெற்று சென்றனர். இதில் கலந்துகொண்ட பக்தர்கள் அனைவருக்கும் குங்குமப்பிரசாதங்களும் வழங்கப்பட்டது.

நவராத்திரி நிறைவு விழா.. ஊஞ்சல் சேவையில் காட்சியளித்த காஞ்சி காமாட்சி ...!
 
காஞ்சி காமாட்சி வரலாறு
 
காமாட்சி என்றால் கருணையும், அன்பும் நிறைந்த கண்களையுடையவள் என்றும் பொருள் உண்டு. இத்தகு பெருமைகளைத் தன்னகத்தே கொண்ட காஞ்சி மாநகரத்தில் அன்னை காமாட்சி தேவி எழுந்தருளிய சம்பவம் ஒரு ஆற்றல்மிக்க வரலாறாக விரிகின்றது. முன்னொரு காலத்தில், பந்தகாசுரன் என்ற ஓர் அசுரன் வாழ்ந்து வந்தான். அவன் மிகக் கடுமையான தவங்களை மேற்கொண்டு, பிரம்ம தேவரிடமிருந்து அரிய பல வரங்களைப் பெற்றிருந்தான்.
 
நவராத்திரி நிறைவு விழா.. ஊஞ்சல் சேவையில் காட்சியளித்த காஞ்சி காமாட்சி ...!
 
அந்த வரங்கள் அளித்த சக்தியாலும், ஆணவத்தாலும் அவன் மூவுலகங்களையும் கைப்பற்றித் தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் பலவித துன்பங்களை உண்டாக்கி வந்தான். பந்தகாசுரனின் கொடுமைகள் நாள்தோறும் அதிகமாகி வந்ததால், அதிக துன்பமுற்ற தேவர்களும், முனிவர்களும் சிவபெருமானிடம் சென்று தங்கள் துன்பத்தைக் கூறி முறையிட்டார்கள். பிரம்மாவின் வரங்களைப் பெற்றதால் பந்தகாசுரன் மிகுந்த வலிமை பெற்றிருப்பதை உணர்ந்த சிவபெருமான், “அந்தப் பந்தகாசுரனை அழிக்கும் ஆற்றல் அன்னை பராசக்தி தேவிக்குதான் உள்ளது“ என்று கூறி, அவர்களைப் பராசக்தியிடம் அனுப்பி வைத்தார். அத்தருணம், அன்னை பராசக்தி தேவி, காம கோட்டம் என்று அழைக்கப்படும் காஞ்சிபுரத்தில், கிளி வடிவம் கொண்டு, ஒரு செண்பக மரத்தில் அமர்ந்து சிவபெருமானைக் குறித்து தவம் செய்து கொண்டிருந்தாள்.
 
தேவர்களும், முனிவர்களும் அன்னை இருக்கும் இடத்துக்கு வந்து, அவளை வழிபட்டுத் தங்கள் துயரங்களைக் கூறினார்கள். அவர்களின் துன்பத்தைக் கண்டு மனம் இரங்கிய அன்னை, பந்தகாசுரனைக் கொன்று, அவர்களின் துயரத்தைத் தீர்ப்பதாக உறுதியளித்தாள். அத்தருணம், பந்தகாசுரன் கயிலாயத்தில், ஒரு இருண்ட குகையினுள்ளே, ஆழ்ந்த தூக்கத்தில் இருப்பதை அறிந்து, அவனைக் கொல்ல அதுவே தருணம் என்று முடிவு செய்த அன்னை, பதினெட்டுக் கரங்களில், பதினெட்டு வகையான ஆயுதங்களைத் தாங்கிய பைரவ ரூபிணியாக, உக்கிர உருவம் கொண்டாள்.
 
பந்தகாசுரனின் கழுத்தில் ஒரு பாதத்தையும், மார்பில் ஒரு பாதத்தையும் வைத்து, அவனது தலையை அறுத்து, ஒரு கையில் தூக்கிப் பிடித்தபடி காஞ்சிபுரம் வந்தடைந்தாள். உக்கிர கோப ரூபத்தில் வந்த அன்னையைக் கண்ட தேவர்களும், முனிவர்களும் பயத்தில் நடுங்கி மயங்கி வீழ்ந்தனர். அவர்களின் பயத்தைப் போக்க விரும்பிய அன்னை, உடனே, அழகிய பட்டாடை அணிந்த சிறு பெண்ணின் உருவத்தில், புன்னகை தவழும் முகத்துடன் அவர்களுக்குக் காட்சியளித்தாள்.

நவராத்திரி நிறைவு விழா.. ஊஞ்சல் சேவையில் காட்சியளித்த காஞ்சி காமாட்சி ...!
 
காஞ்சிபுரத் திருத்தலத்திலுள்ள எல்லா சிவாலயங்களுக்கும் காமாட்சி அம்பாளே மூலவர் அம்பாளாக விளங்குகிறாள். இதனால் காஞ்சீபுரத்தில் உள்ள சிவாலயங்களில், அம்பாளுக்குத் தனி சந்நிதிகள் இருப்பதில்லை. அம்பாளின் உற்சவ மூர்த்திகள் மட்டுமே எல்லா சிவாலயங்களிலும் காட்சியளிக்கின்றனர். மூல மூர்த்தியான காமகோடி காமாட்சியின் இடது பக்கத்தில் வட திசை நோக்கியவாறு அரூப லட்சுமியாகிய அஞ்சன காமாட்சி காட்சியளிக்கின்றாள். இது அன்னையின் சூட்சும வடிவமாகும். இந்த அன்னைக்கு வடிவம் கிடையாது.
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மேலும் ஒரு மகுடம்.. பிரதமர் மோடிக்கு விருது கொடுக்க லைன் கட்டும் உலக நாடுகள்!
மேலும் ஒரு மகுடம்.. பிரதமர் மோடிக்கு விருது கொடுக்க லைன் கட்டும் உலக நாடுகள்!
TVK Protest: உத்தரவிட்ட தவெக தலைவர் விஜய்... ஓடிவந்த தொண்டர்கள்... ஸ்தம்பித்த சேலம் மாநகர்..
TVK Protest: உத்தரவிட்ட தவெக தலைவர் விஜய்... ஓடிவந்த தொண்டர்கள்... ஸ்தம்பித்த சேலம் மாநகர்..
"பதஞ்சலி உணவு பூங்கா.. விவசாயிகளுக்கு வரப்பிரசாதம்" தேவேந்திர பட்னாவிஸ் புகழாரம்!
அதிர்ச்சி.. 2 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு ஆப்சென்ட்- முறைகேடு செய்து பிடிபட்ட 29 பேர்!
அதிர்ச்சி.. 2 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு ஆப்சென்ட்- முறைகேடு செய்து பிடிபட்ட 29 பேர்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

EX MLA Kathiravan: ”EX MLA கிட்டயே கட்டணமா?” போலீசாருடன் வாக்குவாதம் காரை குறுக்கே நிறுத்தி சண்டைPrashant Kishor On Vijay: விஜய்க்கு 15% - 20% வாக்கு? TWIST கொடுத்த PK! குழப்பத்தில் தவெகPetrol Bunk Scam: ”நீங்க போடுறது பெட்ரோல்லா” வெளுத்துவாங்கிய டாக்டர் BUNK-ல் முற்றிய தகறாறுலேடி கெட்டப்பில் நானா? கோபமான விக்ரமன்! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மேலும் ஒரு மகுடம்.. பிரதமர் மோடிக்கு விருது கொடுக்க லைன் கட்டும் உலக நாடுகள்!
மேலும் ஒரு மகுடம்.. பிரதமர் மோடிக்கு விருது கொடுக்க லைன் கட்டும் உலக நாடுகள்!
TVK Protest: உத்தரவிட்ட தவெக தலைவர் விஜய்... ஓடிவந்த தொண்டர்கள்... ஸ்தம்பித்த சேலம் மாநகர்..
TVK Protest: உத்தரவிட்ட தவெக தலைவர் விஜய்... ஓடிவந்த தொண்டர்கள்... ஸ்தம்பித்த சேலம் மாநகர்..
"பதஞ்சலி உணவு பூங்கா.. விவசாயிகளுக்கு வரப்பிரசாதம்" தேவேந்திர பட்னாவிஸ் புகழாரம்!
அதிர்ச்சி.. 2 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு ஆப்சென்ட்- முறைகேடு செய்து பிடிபட்ட 29 பேர்!
அதிர்ச்சி.. 2 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு ஆப்சென்ட்- முறைகேடு செய்து பிடிபட்ட 29 பேர்!
Rajinikanth: அந்த ஸ்டைலை பாருங்கய்யா.. நாட்டுக்கே ரஜினிகாந்த்தான் நாட்டாமை! இது எப்போ நடந்துச்சு?
Rajinikanth: அந்த ஸ்டைலை பாருங்கய்யா.. நாட்டுக்கே ரஜினிகாந்த்தான் நாட்டாமை! இது எப்போ நடந்துச்சு?
அப்பா இந்து.. அம்மா முஸ்லிம்..கிறஸ்துமஸில் பிறந்த பிரபலம்! யாரு அந்த ஹீரோயின்?
அப்பா இந்து.. அம்மா முஸ்லிம்..கிறஸ்துமஸில் பிறந்த பிரபலம்! யாரு அந்த ஹீரோயின்?
சாட்டையை சுழற்றிய அமைச்சர் அன்பில்; பள்ளிகளில் பாலியல் குற்றம் செய்த 23 பேர் டிஸ்மிஸ்!
சாட்டையை சுழற்றிய அமைச்சர் அன்பில்; பள்ளிகளில் பாலியல் குற்றம் செய்த 23 பேர் டிஸ்மிஸ்!
Pakistan Train Hijack: ரயிலை கடத்திய தீவிரவாதிகள்.. பணயக்கைதியாக பிடிக்கப்பட்ட பயணிகள்.. பாகிஸ்தானில் ஷாக்!
ரயிலை கடத்திய தீவிரவாதிகள்.. பணயக்கைதியாக பிடிக்கப்பட்ட பயணிகள்.. பாகிஸ்தானில் ஷாக்!
Embed widget