மேலும் அறிய
ஆருத்ரா விழாவையொட்டி களைகட்டிய காஞ்சிபுரம்..! கூடிய பக்த கோடிகள்..!
ஆருத்ராவையொட்டி புகழ்பெற்ற காஞ்சிபுரம் கச்சபேஷ்வரர் கோவிலில் 9 அடி உயரமுடைய ஐம்பொன் நடராஜர் சிலைக்கு 48 வகை வாசனாதி திரவியங்கள், 23 பழ வகைகள் ஆகியவை கிலோ கணக்கில் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

ஆருத்ரா தரிசனம்
ஆருத்ராவையொட்டி புகழ்பெற்ற காஞ்சிபுரம் கச்சபேஷ்வரர் கோவிலில் 9அடி உயரமுடைய ஐம்பொன் நடராஜர் சிலைக்கு 48 வகை வாசனாதி திரவியங்கள், 23பழ வகைகள், பால், தயிர், இளநீர், சந்தனம் ஆகியவை கிலோ கணக்கில் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

கோவில் நகரம் என்று அழைக்கப்படக்கூடிய காஞ்சிபுரம் மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள உலகப் பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இத்திருத்தளத்தில் பெருமாள் மச்ச அவதாரத்தில் சிவனை வழிபட்டதாக வரலாறு. இத்தகைய புகழுக்கூரிய இக்கோவிலில் ஆருத்ராவையொட்டி, ஆண்டுதோறும் நள்ளிரவில் அங்குள்ள நடராஜருக்கும் சிவகாமி அம்மையாருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுவது வழக்கம்.

ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா நோய் தொற்றின் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் இவ்விழாவானது நடைபெற்று வந்தது. இந்த நிலையில் நள்ளிரவு ஆருத்ராவையொட்டி 9 அடி உயரம் கொண்ட ஐம்பொன் நடராஜர் சிலைக்கு 48 வகை வாசனாதி திரவியங்கள், 23பழ வகைகள், பால், தயிர், இளநீர், சந்தனம், தேன் மற்றும் மலர்கள் ஆகியவை கிலோ கணக்கில் கொண்டு அபிஷேகமானது நடைபெற்றது. பின்னர் ஆராதனை நிகழ்வும் நடைபெற்றது. இரண்டு ஆண்டுகளுக்கு பின் பக்தர்கள் அனுமதியுடன் நடைபெற்ற இந்த ஆருத்ரா விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு நடராஜரை வணங்கி வழிபட்டு சென்றனர்.

ஆருத்ரா தரிசனம்
ஒவ்வொரு மாதத்திலும் இறைவன் சிவ பெருமானுக்கு திருவாதிரை நட்சத்திரத்தில் சிறப்பு பூஜைகள் மேற்கொள்கிறார்கள். திருவாதிரை தின ஆருத்ரா தரிசனத்தில், கணவனுக்கு ஆயுள் நீள வேண்டும் என சிவனுக்கு விரதமிருந்து பெண்கள் வழிபடுவர். சிறப்பு அலங்காரங்களோடு சிவனை காண்பதற்கு புண்ணியம் செய்திருக்க வேண்டும். அன்றைய தினத்தில் சிவனை காண கண் கோடி வேண்டும் என்பது போல அவர் அருள்பாலிப்பார். இந்த விஷேச திருவாதிரை தின ஆருத்ரா தரிசனத்தில், கணவனுக்கு ஆயுள் நீள வேண்டும் என சிவனுக்கு விரதமிருந்து பெண்கள் வழிபடுவர்.

அந்த விரதம் குடும்ப அமைதி, பொருளாதார நிலை போன்ற அனைத்து நன்மைகளையும் வாய்க்கப் செய்யும். நாம் தமிழில் திருவாதிரை எனச் சொல்லும் நட்சத்திரத்தை தான் வடமொழியில் ஆருத்ரா என்கிறார்கள். ஆருத்ரா தரிசன நாளில் நன்மை வேண்டும் என நினைப்பவர்கள் களி, கூட்டு ஆகியவற்றை மனப்பூர்வமாக செய்து ஸ்ரீ நடராஜப் பெருமானுக்கு நைவேத்தியமாக வைக்க வேண்டும். அன்றைய தினம் சிவ ஸ்தோத்திரங்களை அதிகம் உச்சரிக்க வேண்டும். இந்த விஷேச நாளை எதிர்நோக்கி விரதம் இருக்கும் பெண்களும், மற்றவர்களும் மார்கழி திருவாதிரையில் நோன்பை ஆரம்பிக்க வேண்டும். அதன் பின்னர் வரும் ஒவ்வொரு திருவாதிரை நட்சத்திரம் அன்றும் நோன்பிருந்து ஓராண்டு காலத்தில் நிறைவு செய்ய வேண்டும். குறிப்பாக மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை நட்சத்திர தினத்தில், எல்லா சிவன் ஆலயங்களிலும் ஆருத்ரா தரிசனம் விமரிசையாக நடைபெறும். இன்று தமிழகம் முழுவதும் உள்ள சிவ ஆலயங்களில் கோலகலமாக கொண்டாடப்பட்டது. அங்குள்ள நடராஜருக்கு சிறப்பு அபிஷேகங்களும், அதனைத் தொடர்ந்து சிவபெருமானின் பஞ்ச சபைகளில் நடந்த ஆருத்ரா தரிசனத்தையும் ஏராளமான பக்தர்கள் நேரில் தரிசனம் செய்தனர்.

அதன்படி சிதம்பரம் (பொற்சபை), மதுரை (வெள்ளி சபை), திருநெல்வேலி (தாமிர சபை), குற்றாலம் (சித்திர சபை), திருவாலங்காடு (இரத்தின சபை) ஆகிய பஞ்ச சபைகளிலும் சிவபெருமானுக்கு திருவாதிரை களி படைக்கப்பட்டு ஆருத்ரா தரிசனம் விழா கொண்டாடப்பட்டது. பஞ்ச சபைகளில் ஆருத்ரா தரிசனம் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். மேலும் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயில், போடி சுப்பிரமணிய சுவாமி கோயில், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில், திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில், கும்பகோணம் நாகேஸ்வரர் கோயில் ஆகிய இடங்களில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு நடராஜருக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது.
மேலும் படிக்கவும்





















