மேலும் அறிய

பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளினார் கள்ளழகர்... மனமுருக கள்ளழகரை தரிசித்த பக்தர்கள் !

ஆயிரக்கணக்கான பக்தர்கள் வைகையாற்றின் கரையோரங்கில் அமரந்து மொட்டையடித்து தங்களது நேர்த்திகடனை செலுத்தினர்.

லட்சக்கணக்கான பக்தர்கள் மத்தியில் கோவிந்தா பக்தி கோஷம் விண்ணதிர பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளினார் கள்ளழகர்.

சித்திரைத் திருவிழா 2026 
 
ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பௌர்ணமி அன்று மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் வழங்கும் பொருட்டு சுந்தரராஜபெருமாள் கள்ளழகர் வேடமிட்டு  வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றுவருகிறது. இந்தாண்டிற்கான கள்ளழகர் சித்திரைத் திருவிழா கடந்த 27 ஆம் தேதி தொடங்கிய நிலையில் 3வது நாள் நிகழ்வாக நேற்றைய முன் தினம் மதுரை மாவட்டம் அழகர்மலை அடிவாரத்தில் உள்ள கள்ளழகர் கோயிலில் இருந்து சுந்தராஜபெருமாள் தங்கப்பல்லக்கில் கள்ளழகர் வேடமிட்டு மதுரை நோக்கி புறப்பட்டாகினார். பதினெட்டாம்படி கருப்பணசாமி கோயில் முன்பு கண்டாங்கி பட்டுடுத்தி கள்ளழகர் வேடமிட்டு தங்க பல்லக்கில் மதுரை நோக்கி வந்த புறப்பாடாகி பல்வேறு மண்டகப்படிகளில் எழுந்தருளினார். 
 
ஆயிரம்பொன் சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
 
நேற்று அதிகாலை மதுரை நகருக்குள் வந்த கள்ளழகரை வரவேற்கும் வகையில் மூன்றுமாவடி எனுமிடத்தில் எதிர்சேவை நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து புதூர், ஆத்திகுளம், சொக்கிகுளம், தல்லாகுளம் உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த மண்டகப்படிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது வழிநெடுகிலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கைகளில் சர்க்கரை தீபத்தை ஏந்தி கள்ளழகரை வரவேற்றனர். தொடர்ந்து நள்ளிரவு  தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி பெருமாள் கோயிலில் திருமஞ்சணம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளி ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை அணிவித்துகொண்டு வெட்டிவேர் சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதனையடுத்து அதிகாலை 3 மணியளவில் மதுரை தல்லாகுளம் பகுதியிலுள்ள கருப்பணசாமி கோயில் முன்பாகவுள்ள ஆயிரம்பொன் சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
 
ஆடிப்பாடியும் உற்சாகமாக வரவேற்றனர்
 
இதை தொடர்ந்து வைகையாற்றை நோக்கி புறப்பட்ட கள்ளழகரை தமுக்கம் பகுதி தொடங்கி கோரிப்பாளையம், ஆழ்வார்புரம் பகுதிகளில் வரவேற்கும் வகையில் கள்ளழகர் மற்றும் கருப்பணசாமி வேடமிட்ட பக்தர்கள் தண்ணீர் பீச்சியடித்தும், ஆடிப்பாடியும் உற்சாகமாக வரவேற்றனர். வைகையாற்று பகுதிக்குள் கள்ளழகர் தங்க குதிரையில் வருகை தரும்போது  வெள்ளிக்குதிரையில் வீரராகவ பெருமாள் எழுந்தருளி கள்ளழகரை 
வரவேற்றார். வைகையாற்றில் எழுந்தருள வந்த கள்ளழகரை ராமர் பாதம் தாங்கிகள் முன்னே வர சக்கரை தீபம் ஏற்றி பெண்கள் வரவேற்றனர். அப்போது வைகை ஆற்றில் கூடியிருந்த லட்சக்கணக்காண பக்தர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்தும், சர்க்கரைதீபம் ஏந்தியும் கோவிந்தா, கோவிந்தா என விண்ணதிரும் வகையில் பக்தி கோஷங்களில் மத்தியில் பச்சை பட்டுடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் தாமரை இலைகள், மலர்களால் நிரப்பபட்டிருந்த வைகையாற்று பகுதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதனைத்தொடர்ந்து தங்க குதிரையில் கள்ளழகர் மூன்று முறை வரை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள இந்து அறநிலையத்துறை மற்றும் வீரராகவப்பெருமாள்  மண்டகப்படிகளில்  கள்ளழகர் மற்றும் வீர ராகவ பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தீபாராதனைகள் காட்டப்பட்டது.  ஒரு மணி நேரத்திற்கு மேலாக சிறப்பு தீபாரதனை நடைபெற்றது. இதனையடுத்து இராமராயர் மண்டகப்படியில் நடைபெறும் தீர்த்தவாரி எனப்படும் நிகழ்ச்சிக்காக கள்ளழகர் புறப்பட்டார். 
 
2 டன் வண்ண மலர்களால் மண்டகப்படி அலங்கரிக்கப்பட்டிருந்தது
 
முன்னதாக வைகையாற்றில் கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்ச்சிக்காக 2டன் வண்ண மலர்களால் மண்டகப்படி
அலங்கரிக்கப்பட்டிருந்தது. மேலும் மேம்பாலம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இரவு முதல் அதிகாலை வரை மின்னொளியில் ஜொலித்தது. கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சியையொட்டி இரும்புவேலிகள் அமைக்கப்பட்டு மாநகர காவல். ஆணையர் அபிஷேக் தீக்‌ஷித் தலைமையில் பலத்த காவல்துறையினர் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சியை காண்பதற்காக மதுரை மட்டுமின்றி பல்வேறு மாவட்ட, மாநிலங்களை சேர்ந்த பல லட்சக்கணக்கான பக்தர்களால் தல்லாகுளம் முதல் வைகை ஆறு வரை மக்கள் வெள்ளதால் நிரம்பி
மதுரை மாநகரமே விழாக்கோலம் பூண்டது. 
 
நேர்த்திக்கடன்
 
வைகையாறு முழுவதும் பக்தர்களின் வெள்ளம்போல பக்தர்களின் தலையாக காட்சியளித்தது. கள்ளழகர் எழுந்தருளியபோது வைகையாற்று நீரை தெளித்து உற்சாகத்துடன் நடனமாடினர். வைகையாற்றை சுற்றிலும், தீயணைப்புத்துறையினர் பாதுகாப்பிற்காக நிறுத்திவைக்கப்பட்டிருந்தனர். அவசரகால மருத்துவ உதவிக்காக மருத்துவ குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளியதையடுத்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வைகையாற்றின் கரையோரங்கில் அமரந்து மொட்டையடித்து தங்களது நேர்த்திகடனை செலுத்தினர்.

Advertisement

தலைப்பு செய்திகள்

Madurai ; மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு: தேதி இது தான்... உயர்நீதிமன்றத்தில் அறிவிப்பு !
Madurai ; மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு: தேதி இது தான்... உயர்நீதிமன்றத்தில் அறிவிப்பு !
விஜய்யின் 'ஜனநாயகன்' ரிலீஸ் எதிரொலி: தவெகவினர் செய்த காரியம் என்ன தெரியுமா?
விஜய்யின் 'ஜனநாயகன்' ரிலீஸ் எதிரொலி: தவெகவினர் செய்த காரியம் என்ன தெரியுமா?
மாதுளை அலங்காரத்தில் மஹாவாராஹி... தஞ்சாவூரில் பக்திப்பரவசத்தில் மிதந்த பக்தர்கள்
மாதுளை அலங்காரத்தில் மஹாவாராஹி... தஞ்சாவூரில் பக்திப்பரவசத்தில் மிதந்த பக்தர்கள்
நெருப்புப் பிழம்பாய் வந்த ஈசன், சரணடைந்த அசுரன்! திருவெண்காட்டில் மிரள வைத்த ஆடிப் பூர மகா அபிஷேகம்!
நெருப்புப் பிழம்பாய் வந்த ஈசன், சரணடைந்த அசுரன்! திருவெண்காட்டில் மிரள வைத்த ஆடிப் பூர மகா அபிஷேகம்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு
Palani temple land scam | 100 கோடி நிலம் 2 கோடிக்கு! பத்திரத்தில் ஷாக் தகவல்! பழனி கோயில் பகீர்
Bribery : ₹100 லஞ்சம்?
Salem Viral Video : ரோடு முழுக்க தீப்பொறி! 2கி.மீ சினிமா பாணி சேஸ்!சேலத்தில் பொதுமக்கள் செஞ்ச அதிரடி!
’’ஐயோ கொடுமை தாங்கல போட்டோ போட கூட PERMISSION’’அனுபமா துருவ் BREAK UP?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Nirmal kumar Vs DMK: “உங்க ஆட்சில ட்விட் போட்டதுக்கே குண்டாஸ் போட்டீங்க.?“ திமுகவை விளாசிய அமைச்சர் நிர்மல் குமார்
“உங்க ஆட்சில ட்விட் போட்டதுக்கே குண்டாஸ் போட்டீங்க.?“ திமுகவை விளாசிய அமைச்சர் நிர்மல் குமார்
Jana Nayagan: விஜய்யின் ஜனநாயகன்.. ஐ அம் வெயிட்டிங் மோடில் வட இந்தியா! வடக்கிலும் தமிழ்நாடு சிஎம்-க்கு மாஸ்!
Jana Nayagan: விஜய்யின் ஜனநாயகன்.. ஐ அம் வெயிட்டிங் மோடில் வட இந்தியா! வடக்கிலும் தமிழ்நாடு சிஎம்-க்கு மாஸ்!
EPS: இபிஎஸ்-க்கு எதிராக டெல்லிக்கு பறந்த புகார்.. அமித்ஷாவின் ரியாக்ஷன் என்ன?
EPS: இபிஎஸ்-க்கு எதிராக டெல்லிக்கு பறந்த புகார்.. அமித்ஷாவின் ரியாக்ஷன் என்ன?
Russia Ukraine War: அடப்பாவமே.! உக்ரைனில் 4 இந்தியர்கள் பலி; கப்பல் மீதான ரஷ்ய க்ரூஸ் ஏவுகணை தாக்குதலுக்கு MEA கண்டனம்
அடப்பாவமே.! உக்ரைனில் 4 இந்தியர்கள் பலி; கப்பல் மீதான ரஷ்ய க்ரூஸ் ஏவுகணை தாக்குதலுக்கு MEA கண்டனம்
Donald Trump Tariff: ட்ரம்ப்பின் புதிய முடிவால் இந்தியாவுக்கு சிக்கல்.! கச்சா எண்ணெய் இறக்குமதி பாதிக்குமா.? நடந்தது என்ன.?
ட்ரம்ப்பின் புதிய முடிவால் இந்தியாவுக்கு சிக்கல்.! கச்சா எண்ணெய் இறக்குமதி பாதிக்குமா.? நடந்தது என்ன.?
Ather Most Cheapest EV Scooter: அடி தூள்.! மிகவும் மலிவான EV ஸ்கூட்டரை இறக்கும் ஏதர்; ரூ.1000 கோடியை ஏதரில் இறக்கும் ஹீரோ நிறுவனம்
அடி தூள்.! மிகவும் மலிவான EV ஸ்கூட்டரை இறக்கும் ஏதர்; ரூ.1000 கோடியை ஏதரில் இறக்கும் ஹீரோ நிறுவனம்
நாங்களும் வர்றோம்.. பஜாஜ், ஹீரோ, டிவிஎஸ் இறக்கப்போகும் ஆஃப் ரோட் பைக்குகள் - என்னென்ன?
நாங்களும் வர்றோம்.. பஜாஜ், ஹீரோ, டிவிஎஸ் இறக்கப்போகும் ஆஃப் ரோட் பைக்குகள் - என்னென்ன?
GATE 2027: ஐஐடி சென்னை நடத்தும் கேட் தேர்வு; தேதி அறிவிப்பு; விண்ணப்பம், பாடத்திட்டம், வினாத்தாள்
GATE 2027: ஐஐடி சென்னை நடத்தும் கேட் தேர்வு; தேதி அறிவிப்பு; விண்ணப்பம், பாடத்திட்டம், வினாத்தாள்
Embed widget