Sabarimala: ஐய்யப்ப பக்தர்களே! இனி விமானத்திலும் இரு முடியுடன் பயணிக்க அனுமதி
2024ஆம் ஆண்டு ஜனவரி 15ம் தேதி வரை செல்ல மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள விமான போக்குவரத்து அமைச்சகம் விமானத்தில் இருமுடியுடன் பயணிக்க அனுமதி அளித்துள்ளது.

சபரிமலைக்கு ஐயப்ப பக்தர்கள் தங்கள் இருமுடிகளுடன் உள்ளிட்ட பூஜை பொருட்களுடன் வரும் 2024ஆம் ஆண்டு ஜனவரி 15ஆம் தேதி வரை செல்ல மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள விமான போக்குவரத்து அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
சபரிமலை ஐயப்ப கோவில்:
மண்டலம்-மகரவிளக்கு சீசனில் ஜனவரி 15, 2024 வரை எக்ஸ்ரே, இடிடி மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் நடத்தும் உடல் பரிசோதனைக்குப் பிறகு பக்தர்கள் தேங்காய் மற்றும் நெய்யுடன் இருமுடிகளை எடுத்துச் செல்ல அனுமதி அளித்துள்ளது. ஏற்கனவே ஐய்யப்ப பக்தர்களுக்கு ஏதுவாக இருக்க வேண்டும் என அமைச்சகம் அதன் விதிகளை ஏற்கனவே மாற்றியது. கடந்த முறை ஜனவரி 20ஆம் தேதிவரை இந்த விதித் தளர்வுகள் நடைமுறையில் இருந்தது.
இந்த விதித் தளர்வுகள் கொண்டு வருவதற்கு முன்னர் பாஜக தலைவர் மொசலகண்டி சுரேஷ், YSRC தலைவர்கள் சுங்கர வித்யா சாகர் மற்றும் எஸ். மாதவ கிருஷ்ணா உள்ளிட்டோர், தேங்காய் மற்றும் நெய் அடங்கிய இருமுடிகளுடன் தங்கள் விமானத்தில் ஏற முயன்றபோது, விமானத்தில் பயணம் செய்யவிடாமல் தடுக்கப்பட்டனர்.
சுரேஷ், மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் வி.முரளிதரனிடம், ஐயப்ப பக்தர்கள் இருமுடியுடன் பறக்க அனுமதிக்க வேண்டும் என்று அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியிருந்தார். அதன் பின்னர்தான் இந்த விதித் தளர்வுகள் கொண்டு வரப்பட்டது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

