மேலும் அறிய

நெல்லையில் விநாயகர் சதுர்த்தி விழா... கவனத்தை ஈர்த்த ஜல்லிக்கட்டு காளையை அடக்கும் விநாயகர்....!

சித்திரை மாதத்தின் முதல் மூன்று நாட்களுக்கு அதிகாலையில் சூரிய ஒளி விநாயகர் மீது பரவும் வகையில் கட்டடக்கலை அமைந்துள்ளது. 

நெல்லை பாளையங்கோட்டை அருகே சொக்கலிங்கசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் சுடலையாண்டி. இவர் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வித்தியாசமான முறையில் விநாயகர் சிலைகளை வாங்கி பிரதிஷ்டை செய்வதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் இந்த ஆண்டும் தனது வீடு அமைந்துள்ள தெரு பகுதியில் விநாயகர் சிலையை வைத்து பிரதிஷ்டை செய்ய நீதிமன்றத்தில் அனுமதி கோரினார். ஆனால் தெருவில் சிலை வைக்க நீதிமன்றம் அனுமதிக்கவில்லை. இருப்பினும் வீட்டில் வைத்து வழிபட எந்த ஆட்சேபணையும் இல்லை என நீதிமன்றம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து சுடலையாண்டி வழக்கம் போல் இந்த ஆண்டும் வித்தியாசமான விநாயகர் சிலை ஒன்றை வாங்கி வந்துள்ளார். அதாவது சுமார் நான்கு அடி உயரம் கொண்ட அந்த விநாயகர் ஜல்லிக்கட்டு காளையை அடக்குவது போன்ற வடிவத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன்படி பந்தய களத்தில் சீறி வரும் ஜல்லிக்கட்டு காளையின் கொம்பை விநாயகர் தனது கையால் பிடித்து அடக்குவது போன்று இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது. சிலையை சுடலையாண்டி தனது வீட்டின் முன்பகுதிகள் வைத்து பிரதிஷ்டை செய்துள்ளார். வித்தியாசமான முறையில் இருக்கும் இந்த விநாயகர் சிலையை அப்பகுதி மக்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.

நெல்லையில் விநாயகர் சதுர்த்தி விழா...  கவனத்தை ஈர்த்த ஜல்லிக்கட்டு காளையை அடக்கும் விநாயகர்....!

நெல்லை தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது மணிமூர்த்தீஸ்வரம் உச்சிஷ்ட கணபதி ஆலயம். 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த இத்திருக்கோவில் ராஜகோபுரத்துடன் எட்டுநிலை மண்டபங்கள், மூன்று பிரகாரங்கள், கொடிமரத்துடன் கூடிய சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் விநாயகருக்கான தனித் திருக்கோயிலாகும். இங்கு விநாயகப்பெருமான் தனது 32 தோற்றங்களில் 8வது வடிவமாக போற்றப்படும் உச்சிஷ்ட கணபதியாக நான்கு கரங்களுடனும்  தனது இடப்பக்க மடியில் ஸ்ரீநீலவாணியை அமர்த்தியபடி அருள் பாலிக்கிறார். சித்திரை மாதத்தின் முதல் மூன்று நாட்களுக்கு அதிகாலையில் சூரிய ஒளி விநாயகர் மீது பரவும் வகையில் கட்டடக்கலை அமைந்துள்ளது.  பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இத்திருக்கோவிலில் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியை விழா கடந்த 22 ம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

நெல்லையில் விநாயகர் சதுர்த்தி விழா...  கவனத்தை ஈர்த்த ஜல்லிக்கட்டு காளையை அடக்கும் விநாயகர்....!

10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் காலை யாகசாலை பூஜைகள் மற்றும் அபிஷேக தீபாரதனையும், மாலையில் விஷேச அலங்கார தீபாரதனையும், அதனைத் தொடர்ந்து மூஷிக வாகனத்தில் கோயில் பிரகார உலாவும், தீபாரதனைகளும் நடைபெற்றன. 10ம் திருநாளான இன்று சதுா்த்தி திதியில் அதிகாலை 3.00 மணிக்கு நடை திறக்கப்பட்டு கணபதி ஹோமம் நடைபெற்றது. பூா்ணாகுதியை தொடா்ந்து  உச்சிஷ்ட கணபதிக்கு மாப்பொடி, மஞ்சள்பொடி, திரவியப்பொடி, பால், தயிா், கரும்புச்சாறு, பஞ்சாமிருதம், தேன், இளநீா், வீபூதி, சந்தணம் போன்ற 16 வகை அபிஷேகப் பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னா் வெள்ளி கவசம் சாற்றி ஸ்ரீஉச்சிஷ்ட கணபதி ராஜ அலங்காரத்தில் அருள்பாலித்தாா். சிறப்பு அலங்காரத்தில் கொலுவீற்றிருந்த மூலவா் உச்சிஷ்ட கணபதிக்கு தீபாராதனைகள் காட்டப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தாிசனம் செய்தனா். மாலையில் வீதி புறப்பாடு நடைபெறுகின்றது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
"பாசிசவாதிகளை கதறவிடுபவர்" பிரகாஷ்ராஜ் குறித்து ஓப்பனாக பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி!
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vanathi Srinivasan | விஸ்வகர்மா விவகாரம்”சாதி முலாம் பூசும் திமுக”வெடிக்கும் வானதிMahavishnu Bail |’’சேவை தொடரும்’’ஜாமீனில் வந்த மகாவிஷ்ணு!சிறை வாசலில் உற்சாக வரவேற்புWoman Police Attack | ”நீ எவன்ட வேணா சொல்லு”பெண் போலீஸ் மீது தாக்குதல்..நடுரோட்டில் பரபரப்புVijay vs Prakash Raj : களத்தில் இறங்கும் பிரகாஷ்ராஜ்? விஜய்யின் அரசியல் வில்லன்! திமுக மாஸ்டர் PLAN

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
"பாசிசவாதிகளை கதறவிடுபவர்" பிரகாஷ்ராஜ் குறித்து ஓப்பனாக பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி!
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
சிறைச்சாலை என்ற பள்ளிக்கூடத்தில் படித்ததால்தான் யாருடைய அரட்டலுக்கும் பயப்படுவதில்லை - முதல்வர் ஸ்டாலின்
சிறைச்சாலை என்ற பள்ளிக்கூடத்தில் படித்ததால்தான் யாருடைய அரட்டலுக்கும் பயப்படுவதில்லை - முதல்வர் ஸ்டாலின்
சென்னையில் புதிய Nissan Magnite Facelift கார் அறிமுகம்: விலை, மைலேஜ், சிறப்பம்சங்கள் என்ன தெரியுமா?
சென்னையில் புதிய Nissan Magnite Facelift கார் அறிமுகம்: விலை, மைலேஜ், சிறப்பம்சங்கள் என்ன தெரியுமா?
Video: பாம்பை சாப்பிடும் மான்: ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் வீடியோ.!
பாம்பை சாப்பிடும் மான்: ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் வீடியோ.!
ஹரியானா சட்டப்பேரவை தேர்தல்.. வாக்குப்பதிவு நிறைவு.. பாஜகவை வீழ்த்துமா காங்கிரஸ்?
ஹரியானா சட்டப்பேரவை தேர்தல்.. வாக்குப்பதிவு நிறைவு.. பாஜகவை வீழ்த்துமா காங்கிரஸ்?
Embed widget