மேலும் அறிய
Advertisement
அரூரில் இருந்து நடைபயணமாக சபரிமலைக்கு சென்ற ஐயப்பன் பக்தர்கள்
இன்று காலை நடை பயணமாக புறப்பட்ட ஐயப்பன் பக்தர்களை, ஐயப்ப பக்தர்கள் பஜனை பாடி உற்சாகமாக வழியனுப்பினர்.
அரூரில் இருந்து 13 நாட்கள் நடைபயணமாக சபரிமலைக்கு சென்ற ஐயப்பன் பக்தர்களை, பொதுமக்கள் வணங்கி வழியனுப்பி வைத்தனர்.
தருமபுரி மாவட்டம் அரூர் பாட்ஷாப்பேட்டையில் 50க்கும் மேற்பட்ட ஐயப்பன் பக்தர்கள் கடந்த நவம்பர் மாதம் 17ஆம் தேதி முதல் மாலை அணிந்து, 48 நாள் விரதம் இருந்து டிசம்பர் 28ஆம் தேதி சபரிமலைக்கு புறப்பட உள்ளனர். தொடர்ந்து ஜனவரி 2ஆம் தேதி சபரி மலையில் ஐயப்பனை தரிசிக்க உள்ளனர். இந்நிலையில் அரூர் பாட்ஷா பேட்டையில் உள்ள ஐயப்பன் பக்தர்கள் ஒரு சிலர் 13 நாட்கள் நடை பயணமாகவே சென்று ஐயப்பனை தரிசிக்க உள்ளனர். இதில் நடைபயணமாக செல்லும் ஐயப்பன் பக்தர்கள் இன்று காலை இருமுடி கட்டிக் கொண்டு, அரூரிலிருந்து சபரிமலை புறப்பட்டனர். ஒரு நாளுக்கு 50 கிலோ மீட்டர் நடந்து சென்று வழியில் தங்க திட்டமிட்டுள்ளனர். மேலும் டிசம்பர் 28ஆம் தேதி அரூரில் இருந்து புறப்படும் பக்தர்களோடு இணைந்து ஜனவரி 2ஆம் தேதி சபரிமலையில் ஐயப்பனை தரிசிக்க உள்ளனர். இன்று காலை நடை பயணமாக புறப்பட்ட ஐயப்பன் பக்தர்களை, ஐயப்ப பக்தர்கள் பஜனை பாடி உற்சாகமாக வழியனுப்பினர். அப்பொழுது வழி நெடுகிலும் பொதுமக்கள் வணங்கி, வழி அனுப்பி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் அரூர் சட்டமன்ற உறுப்பினர் சம்பத்குமார் அதிமுக நகர செயலாளர் பாபு மற்றும் ஐயப்பன் பக்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வந்த மழை குறைந்ததால், காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து சரிந்து வினாடிக்கு 10,000 கன அடியிலிருந்து 8,000 கன அடியாக குறைந்தது.
காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பொழிந்து வந்தது. இதனால் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வந்த மழையால், காவிரி ஆற்றில் நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வந்தது. இதனால் தமிழக எல்லையன பிலிகுண்டுலுவுக்கு, நீர்வரத்து தொடர்ந்து ஒரு வாரமாக சரிந்து வருகிறது. இன்று காலை வினாடிக்கு 10,000 கன அடியிலிருந்து 8,000 கன அடியாக குறைந்தது.காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்தாலும், ஒகேனக்கல் பிரதான அருவி, ஐந்தருவி, சினி அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி பார்ப்பதற்கு ரம்மியமாக காட்சியளித்து வருகிறது. மேலும் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால், தொடர்ந்து நீர்வரத்து குறையும் என மத்திய நீர் வள ஆணைய அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
பொழுதுபோக்கு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion