Chitra Pournami: கண் கோடி வேண்டும் சித்திரகுப்தரை தரிசிக்க...! ஓடோடி வந்த பக்தர்கள் கூட்டம்..!
Chitra Pournami 2024: காஞ்சிபுரத்தில் சித்ரா பௌர்ணமி விழாவை முன்னிட்டு சித்திரகுப்தர் கோவிலில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர்.
சித்திரகுப்தர் ( Shri Chitragupta Swamy )
இந்து மத நம்பிக்கையில், எமதர்மன் முக்கிய அங்கம் வகிக்கிறார் . இந்துவாக வாழ்கின்ற ஒவ்வொருவரின் உயிரும் எமதர்ம ராஜாவால் எடுக்கப்படும் என்பது நம்பிக்கையாக உள்ளது. பூலோகத்தில் ஒருவர் செய்யும் பாவ, புண்ணியங்களை வைத்து எமதர்மர் அவர்களுக்கு சொர்க்கமா அல்லது நரகமா என்பது தீர்மானிப்பார் என்பது நம்பிக்கை. இதையெல்லாம் கண்காணிக்கும் பொறுப்பு, சித்திரகுப்தர் பணி என்பது நம்பிக்கையாக உள்ளது.
காஞ்சிபுரம் சித்திரகுப்தர் கோயில் ( Kanchipuram Chitragupta Temple )
வரவு செலவு கணக்குகளைப் பார்க்கும் மிக முக்கிய கடவுளாக பார்க்கப்படும் சித்தரகுப்தருக்கு உலகில் எங்கும் கோவில் கிடையாது. ஒரே ஒரு கோவில் மட்டுமே சித்திரகுப்தருக்கு என உள்ளது. அந்த கோவில் காஞ்சிபுரத்தில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சுமார் ஒன்பதாம் நூற்றாண்டில் இடைக்கால சோழர்களால் இந்தக் கோயில் கட்டப்பட்டு இருக்கலாம் என நம்பப்படுகிறது. தொடர்ந்து பல்வேறு காலங்களில் இந்த கோவிலில் புனரமைப்பு பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வந்துள்ளன.
1911-ஆம் ஆண்டு கோவில் சீரமைப்பு பணியின்பொழுது சித்திரகுப்தர் மற்றும் அவரது மனைவி கர்ணிகாம்பாள் ஆகியோரின் இரண்டு உலோக சிலைகளும் கண்டுபிடிக்கப்பட்டது. சித்திர குப்தரை பூஜை செய்து வழிபட்டால் உயரிய பதவிகளை பெறலாம் என்பது நம்பிக்கை. தொடர்ந்து சித்திரகுப்தரிடம் தங்களுடைய வரவு மற்றும் செலவு கணக்குகளை ஒரு சீட்டில் எழுதி வைத்து, வேண்டிக்கொண்டால் நினைத்தல் லாபம் தொழிலில் கிடைக்கும் என்பது ஐதீகமாக உள்ளது.