Singaperumal Kovil: துவங்கியது பிரம்மோற்சவம்..! தேர் திருவிழா, முக்கிய உற்சவங்கள் எப்பொழுது தெரியுமா ?
Singaperumal Kovil: வைகாசி மாத பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்- திரளானபக்தர்கள் பங்கேற்பு
சிங்க பெருமாள் கோயில் அருகே நரசிம்ம பெருமாள் கோயிலில் வைகாசி மாத பிரமோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவில் ( Singaperumal Kovil Arulmigu Padalathiri Narasimma Perumal Temple )
செங்கல்பட்டு ( Chengalpattu News ) : செங்கல்பட்டு மாவட்டம் ' சென்னை ' புறநகர் பகுதியில் மிக முக்கிய கோவில்களில் ஒன்றாக அருள்மிகு பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் திருக்கோயில் உள்ளது. இக்கோவில் ஒரு குடவரைக் கோவிலாகும் பெருமாளின் திருமேனியே மலையாக விளங்குவதால் நாம் மலையைச்சுற்றி வலம் வர வேண்டும். பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவிலில் வைகாசிப் பிரம்மோற்சவம் பெருவிழா மேல தாளங்கள் முழங்க, வான வேடிக்கையுடன், கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது. சுமார் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பல்லவர்கால குடைவரைக்கோவிலில் திருவிழா இன்று 13ஆம் தேதி துவங்கி வரும் 27ஆம் தேதி வரை மொத்தம் 15 நாட்கள் நடைபெறும் .
அந்த வகையில் இன்று கோவிலில் வேத மந்திரங்கள் முழங்க மேல தாளங்களுடன் கொடியேற்று விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. பின்பு அலங்கரிக்கப்பட்ட சிம்ம வாகனத்தில் பெருமாள் கோவில் பிரகாரத்தை சுற்றி வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இந்த நிகழ்வில் சிங்க பெருமாள் கோயில் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கொடியேற்று விழாவில் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
வைகாசி மாத பிரமோற்சவ விழா 2024
வைகாசி 01 ( 14-05-2024 ) - காலை சூரிய பிரபை வாகன உற்சவம் நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து, மாலை அம்ச வாகன உற்சவம் நடைபெறுகிறது.
வைகாசி 02 தேதி ( 15 - 05 -2024 ) : வைகாசி பிரம்மோற்சவத்தில் மிக முக்கிய உற்சவமாக இருக்கக்கூடிய கருட சேவை உற்சவம் நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து அன்று மாலை அனுமந்த வாகனத்தில் பெருமாள் பக்தர்களுக்கு காட்சித் தருகிறார்.
வைகாசி 03 தேதி ( 16 - 05 -2024 ) : காலை சேஷ வாகன உற்சவம் நடைபெறுகிறது. காலை வேளையில் தொடர்ந்து ஏகாந்த சேவை நடைபெறுகிறது. பகல் வேளையில் விசேஷ திருமஞ்சனம் நடைபெறுகிறது. மாலை வேளையில் சந்திர பிரபை உற்சவம் நடைபெறுகிறது.
வைகாசி 04 தேதி ( 17 - 05 -2024 ) : காலையில் நாச்சியார் திருக்கோலத்தில் சுவாமி உற்சவம் நடைபெறுகிறது. தொடர்ந்து இரவில் விழாவில் முக்கிய நிகழ்வான வான வேடிக்கை மற்றும் யாளி வாகன உற்சவம் நடைபெறுகிறது.
வைகாசி 05 தேதி ( 18 - 05 -2024 ) : காலை பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வுகளின் ஒன்றான சொர்ண அபிஷேகம் விழா காலை நடைபெறுகிறது. இரவு வேளையில் வானவேடிக்கையுடன் யானை உற்சவம் நடைபெறுகிறது .
வைகாசி 06 தேதி ( 19 - 05 -2024 ) : வைகாசி பிரம்மோற்சவ விழாவில், தலைமை நிகழ்வாக கருதக்கூடிய திருத்தேர் உற்சவம் நடைபெறுகிறது. இன்றைய மாலை மண்டகப்படி நிகழ்வு நடைபெறுகிறது . இரவு அனுமார் சன்னதி வரை பெருமாள் எழுந்தருளுதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
வைகாசி 07 தேதி ( 20 - 05 -2024 ) : காலை பல்லாக்கு உற்சவம் இருந்து மாலை குதிரை வாகனம் உற்சவம் நடைபெறுகிறது. இரவு புஷ்ப பள்ளியறை ஜோடிக்கும் நடைபெற இருக்கிறது.
வைகாசி 08 தேதி ( 21 - 05 -2024 ) : தீர்த்த வாரி உற்சவம் நடைபெறுகிறது அதனை தொடர்ந்து தீர்த்தவாரி திருமஞ்சனம் நடைபெறுகிறது . இரவு புஷ்ப பல்லாக்கு உற்சவம் நடைபெறுகிறது.
வைகாசி 09 தேதி ( 22- 05 -2024 ) : துவாதசாராதனம் திருமஞ்சனம் உற்சவம் நடைபெறுகிறது.
இதனைத் தொடர்ந்து மே மாதம் 23ம் தேதி முதல் இரவு விடையாற்றி உற்சவம் நடைபெறுகிறது