Chaithra Navathri : மார்ச்சில் வரும் சைத்ர நவராத்திரி.. விரதத்தில் என்னென்ன உணவுகளை சேர்க்கலாம்?
சைத்ரா நவராத்திரி மார்ச் அல்லது ஏப்ரலில் கொண்டாடப்படுகிறது. நவராத்திரி இந்து சமய மக்களுக்கு மிகவும் முக்கியமான விழாவாகக் கொண்டாடப்படுகிறது.
சைத்ரா நவராத்திரி மார்ச் அல்லது ஏப்ரலில் கொண்டாடப்படுகிறது. நவராத்திரி இந்து சமய மக்களுக்கு மிகவும் முக்கியமான விழாவாகக் கொண்டாடப்படுகிறது. இந்து நாட்காட்டியில் மொத்தம் நான்கு நவராத்திரிகள் உள்ளன. சைத்ரா மற்றும் ஷரதிய நவராத்திரி தவிர இரண்டு குப்த நவராத்திரிகளும் உள்ளன.
சைத்ரா நவராத்திரி என்பது சைத்ர மாத சுக்ல பக்ஷத்தில் அனுசரிக்கப்படுகிறது. 'நவ' என்றால் ஒன்பது மற்றும் 'ராத்திரி' என்றால் இரவு என்பதால், நவராத்திரி ஒன்பது நாட்கள் இரவுகளில் கொண்டாடப்படுகிறது.
சைத்ரா மாதத்தின் பிரதிபத திதி மார்ச் 21 அன்று காலை 10.52 மணிக்கு தொடங்குகிறது. இந்த ஆண்டு, அது அடுத்த நாள், மார்ச் 22, 2023 அன்று இரவு 8.20 மணிக்கு முடிவடையும். சைத்ரா நவராத்திரி 2023 மார்ச் 22 அன்று தொடங்கி மார்ச் 30 அன்று முடிவடையும் என்று உதய திதி கணித்துள்ளது. வட இந்தியா முழுவதும், மக்கள் ஒன்பது நாட்கள் விரதம் இருந்து, ஒன்பதாம் நாளில், அவர்கள் கடவுளை வணங்கி சைத்ர நவராத்திரி சடங்குகளை முடிக்கிறார்கள்.
சைத்ரா நவராத்திரிக்கான 9 வகை சிற்றுண்டிகள்
1. பன்னீர் ரோல்ஸ்:
சைத்ரா நவராத்திரி விரதம் மேற்கொள்பவர்களுக்காகவே இவ்வித பன்னீர் ரோல்ஸ் செய்யப்படுகிறது. துருவிய பன்னீர், உருளைக்கிழங்கு, உப்பு, சில மசாலா பொருட்களைக் கொண்டு இந்த ரோலை செய்கின்றனர். இதனை பேனில் நெய்யில் பொரித்து எடுத்து பரிமாறுகின்றனர். இதை சட்னியுடன் சாப்பிட ருசி அள்ளுமாம்.
2. சாமை அரிசி தோக்லா:
சாமை அரிசியில் செய்யப்படும் இந்த வகை தோக்லா சைத்ரா நவராத்திரி விரதம் மேற்கொள்பவர்களுக்கு உகந்த உணவாக கருதப்படுகிறது. இது மிகுவும் சத்தானது ஆனால் ரொம்பவே எளிமையான உணவு. அரிசி, ரவைக்கு பதிலாக சாமையுடன் தயிர், இஞ்சி, மிளகாய், சீரகம், கரிவேப்பிளை, நெய் சேர்த்து இதனை செய்வார்கள்.
3. கருணைக்கிழக்கு கோஃப்தா
ஆர்பி கோஃப்தா எனப்படும் உணவு மிகவும் எளிமையான உணவு. லோ கலோரி உணவும் கூட. இதை மல்லிச் சட்னியுடன் சாப்பிட சுவை அட்டகாசமாக இருக்கும். கருணைக்கிழங்கு கொண்டு செய்யப்படும் கோஃப்தா தான் இது. கிழங்கை நன்றாக வேகவைத்து தோல் உரித்து மசித்துக் கொண்டு. அதில் சீரகம், மிளகாய், ஓமம், இஞ்சி பூண்டு விழுது, மசாலா பொருட்கள் சேர்த்து பிசைந்து குச்சியில் குத்திக் கொள்ள வேண்டும். பேனில் நெய் ஊற்றி பொன்னிறமாக பொரித்து எடுத்தால் ஆர்பி கோஃப்தா தயார்.
4. ஷக்கர்கண்டி சேட்
இதை சொன்னாலே வாய் ஊறும் என்றளவும் இனிப்பு புளிப்பு லேசான காரம் கொஞ்சம் துவர்ப்பு என அட்டகசமான சுவையில் இருக்கும். இதனைச் செய்ய தேவையான முக்கிய மூலப்பொருள் சக்கரைவல்லிக் கிழங்கு. இந்த கிழங்கை பேனில் வதக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் அதில் கொஞ்சம் அனார்தனா பவுடன், சீரகத்தூள், சாட் மசாலா, உப்பு, பச்சை மிளகாய் சட்னி, புளி சட்னி, இஞ்சி, மாதுளை விதைகள், வறுத்த வேர்க்கடலை, எள் ஆகியனவற்றை சேர்க்க வேண்டும். பின்னர் அதில் கொஞ்சம் லெமன் ஜூஸும் கூடவே மல்லி இலைகளும் சேர்க்க வேண்டும். அவ்வளவு தான் சுவையான சத்தான ஷக்கர்கண்டி சேட் தயார். இதில் புரதச்சத்து, இரும்புச்சத்து, வைட்டமின் சத்து, மினரல்கள் என எல்லாம் நிறைவாக இருக்கும்.
5. வறுத்த மக்கானாக்கள்
வறுத்த மக்கானாஸ் இல்லாத சைத்ரா நவராத்திரி விரதமே கிடையாது எனும் அளவிற்கு இந்த ஸ்நாக் ரெஸிபி ரொம்பவே பிரபலம். இது புரதச் சத்து நிறைந்தது. வறுத்த சோளப்பொரி தான் இது. இதை நெய்யில் வறுத்து கொஞ்சம் உப்பு மிளகு அல்லது உப்பு மிளகாய் தூவி செய்வர். பாப் கார்ன் போல் அல்லாமல் கொஞ்சம் கடிக்க கடினமாக இருந்தாலும் வேற லெவல் சுவையில் இருக்கும் இந்த வறுத்த மக்கானாஸ்.
6. பழ சாட் வகைகள்
ஃபரூட் சேட் செய்வது மிகவும் எளிது. ஒரு வாழைப்பழத்தை சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். அரை கப் பப்பாளி பழம், அரை கப் தர்ப்பூசணி, அரை கப் சிறு துண்டுகளாக நறுக்கிய பைன் ஆப்பிள், அரை மாதுளை, அரை ஆப்பிள், பாதியளவு ஸ்டார் ஃப்ரூட், சாட் மசாலா, ப்ளாக் சால்ட், எலுமிச்சை சாறு ஆகியன சேர்க்கவும். பின்னர் அதில் ஒன்றரை தேக்கரண்டி சீரகத் தூள் சேர்க்கவும். அரை டீஸ்பூன் பவுடர்ட் சுகர் கூட சேர்க்கலாம். சர்க்கரை கட்டாயம் சேர்க்க வேண்டுமென்று இல்லை. அது விருப்பத்தின் பேரில் சேர்க்கலாம். இல்லாவிட்டால் அப்படியே பரிமாறலாம்.
7. பேரீச்சம்பழம் உலர்பழங்கள் லட்டு
மிகவும் ஆரோக்கியமான பேரீச்சம்பழம் உலர்பழ லட்டு செய்வது எளிது. இதற்கு 20 பெரிய கொட்டை நீக்கிய பேரீச்சம்பழங்கள் தேவை. கூடவே கொஞ்சம் பாதாம், முந்திரி, வால்நட், பிஸ்தா, நிலக்கடலை ஆகியனவும் தேவை. விரும்பினால் துருவிய தேங்காயும் சேர்க்கலாம். பேரீச்சம்பழங்களை ஒரு பேனில் போட்டு மிதமான சூட்டில் வதக்கிக் கொள்ளவும். பின்னர் அதனை ஆறவிட்டு ப்ளெண்டரில் போட்டு மையாக அரைத்துக் கொள்ளவும். தண்ணீர் ஊற்றக்கூடாது. அரைத்த பேரீச்சம்பழத்தை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும். பாதாம், முந்திரி, வால்நட், பிஸ்தா, நிலக்கடலை ஆகியனவற்றை மிக்ஸரில் கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். அதன் உருவம் முழுவதும் சிதையாமல் ஒன்றிரண்டாக அரைத்துக் கொள்ளவும். அதை அரைத்து வைத்த பேரீச்சம்பழத்தில் கொட்டவும். பின்னர் கையில் நெய் தடவிக் கொண்டு அதை சிறு சிறு உருண்டைகளாகப் பிடிக்கவும். அந்த உருண்டைகளை துருவிய தேங்காயில் தோய்த்து எடுத்து பரிமாறவும்.