சிவபெருமானுக்கு அன்னத்தால் அபிஷேகம்! தரிசனம் செய்தால் கிடைக்கும் பலன்கள் என்ன தெரியுமா?
annabishekam 2025 : இறைவன் சிவபெருமானுக்கு 1 வருடத்தில் செய்யப்படும் அபிஷேகத்தில் மிகவும் விசேஷமானது "அன்னாபிஷேகம்" எல்லாவற்றையும் விட அற்புதமானது என்கிறது வேதம்

Annabishekam 2025: அனைத்திற்கும் ஆதியாய் பக்தர்களால் போற்றி வணங்கப்படுபவர் சிவபெருமான். சிவபெருமானுக்கு உகந்த மாதங்களில் ஐப்பசி மாதமும் ஒன்றாகும். குறிப்பாக, இந்த ஐப்பசி மாதத்தில் வரும் பெளர்ணமி மிகவும் தனித்துவம் வாய்ந்ததாக கொண்டாடப்படுகிறது. ஏனென்றால், இந்த ஐப்பசி பெளர்ணமியில்தான் அன்னாபிஷேகம் நடைபெறும்.
அன்னாபிஷேகம்
ஐப்பசி மாதம் பௌர்ணமியில் வரும் அன்னாபிஷேகம் மிகவும் சிறப்பானது. அன்னமும் சிறப்பு- அபிஷேகமும் விசேஷம். இறைவன் சிவபெருமானுக்கு 1 வருடத்தில் செய்யப்படும் அபிஷேகத்தில் மிகவும் விசேஷமானது "அன்னாபிஷேகம்" எல்லாவற்றையும் விட அற்புதமானது என்கிறது வேதம்.
ஐப்பசி மாத முழுநிலவு நாளில் முதலில் ஐந்து வகைப் பொருட்களால் இறைவனுக்கு அபிஷேகம் செய்து, பின்னர் நன்கு வடித்து ஆறவைத்த அன்னத்தைக் கொண்டு, தேவையானால் சற்று நீர் கலந்து அன்னாபிஷேகம் செய்யப்படும். சமீபகாலமாக அன்னாபிஷேகத்தின் போது அப்பம், வடை உள்ளிட்ட பலகாரங்களையும் காய்கறி, கனி வகைகளையும் கொண்டு அலங்காரம் செய்கிறார்கள்.சிவலிங்கத் திருமேனியின் மேலிருந்து அன்னத்தை வைத்துக் கொண்டே வருவார்கள்.
அன்னத்தின் சிறப்பு
அன்னம் என்பதற்கு இரண்டு பொருள் உண்டு. ஒன்று அன்னப் பறவை. இன்னொன்று உணவு. சோறு. இந்த இரண்டினாலும் செய்யப்படும் அபிஷேகம்தான் அன்னாபிஷேகம். உணவு என்பது ஒரு வருக்கு உயிர் காக்கும் பொருளாக இருக்கிறது. அந்த உணவை எல்லோருக்கும் வழங்குபவன் ஈசன். கல்லினுள் தேரைக்கும் கருப்பை உயர்க்கும் புல்லுணவே தந்து போற்றும் தயாபரன் என்று அவனைச் சொல்லுவார்கள் இறைவா!
இது நீ தந்த உணவு! நீ தந்த அன்னம் என வருடத்தின் ஒரு நாள், ஐப்பசி மாதத்தில், பௌர்ணமி அன்று, சிவபெருமானுக்குச் சமர்ப்பிக்கின்றனர். அன்னத்தால் இறைவனுக்கு அபிஷேகம் செய்கின்ற பொழுது வேத கோஷம் உண்டு. அந்த வேதத்தின் பிரதிநிதியாக அன்னப்பறவையை உருவகப்படுத்துவர். உற்சவ காலங்களில் பகவான் அன்ன வாகனத்தில் உலா வருவதுண்டு. இரண்டு அன்னமும் இறைவனோடு தொடர்புடையது தான்.
அன்னாபிஷேக நேரம்
பஞ்சபூதங்களால் ஆன இந்த அன்னம் மனிதனுக்கு இன்றியமையாத உணவாக விளங்குகிறது. சிவபெருமானுக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்து வழிபடுவதே அன்னாபிஷேகம் ஆகும். இன்றைய தினம் நாம் அபிஷேகம் செய்யும் ஒவ்வொரு பருக்கை அன்னத்திலும் சிவபெருமான் எழுந்தருளி காட்சி தருவதாக ஐதீகம் ஆகும். இந்த வருடம் 04.11.2025 இரவு 9.43 மணிக்கு தொடங்கி மறுநாள் 05.11.2025 இரவு 7.27 மணிக்கு முடிவடைகிறது.காலை 10.15 மணிவாரை அஸ்வினி நட்சத்திரம் பரணி நட்சத்திரம் அமைந்திருப்பது விசேஷம்.
கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே சிவலிங்கத்திற்கு கோவிலில் செய்யப்படும் அனைத்து பூஜைகளும் செய்து அணன்னாபிஷேகம் செய்யலாம், லிங்கம் இல்லாதவர்கள் சிவன் புகைப்படத்தை வைத்து, அன்னத்தை வைத்து நெய்வேத்தியம் செய்யலாம். அதுவும் முடியாத நபர்கள் அன்றைய நாளில் இரண்டு நபர்களுக்காவது அன்னதானம் வழங்கினால் கூடுதல் சிறப்பாக இருக்கும்.
அன்னாபிஷேக பலன்கள்:
அன்னாபிஷேக தரிசனம் கண்டால், பல கோடி லிங்கங்களை ஒரே நேரத்தில் வழிபட்ட பலன் நமக்கு . இதனால் கடன் தீரும், வறுமை நீங்கும், பாவங்கள் தீரும், செல்வ வளம் சேரும். முக்கியமாக தலைமுறைக்கு உரிய அண்ணன் குறை நீங்கும். அன்னாபிஷேகத்தை கண்டால் மிகவும் சிறப்பானது எனவும் இந்த அன்னத்தை வாங்கி உன்னால் நோய்நொடி நீங்கி, குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் எனவும் அனைத்து செல்வங்களும் வந்து சேரும் என கூறப்படுகிறது.
பஞ்ச பூதங்களும் அன்னமும்
நம் உடல் பஞ்சபூதங்களால் ஆனது. அன்னமும் பஞ்ச பூதங்களால் ஆனது. இறைவன் பஞ்ச பூதங்களுக்கு நாயகன். அன்னத்தை அன்னத்தால் பரிபாலிக்கிறோம். அன்னம் எப்படி பஞ்ச பூதங்களின் சேர்க்கையால் உண்டாகிறது என்பதைப் பார்ப்போம். நிலத்தில் விழும் நெல், ஆகாயத்திலிருந்து பெய்யும் மழை நீரின் உதவியால் வளர்ந்து, காற்றினால் கதிர்பிடித்து, சூரியனின் வெப்பத்தீயினால் பால் இறுகி விளைச்சலைத் தருகிறது. காற்றின் உதவியுடன் கதிரடித்து எடுக்கப்படும் நெல், உமி நீக்கப்பட்டு அரிசியான பிறகு, மண்ணால் ஆன பானையில் நீரில் இடப்பட்டு, காற்றின் துணையால் எரியும் நெருப்பில் வெந்து, அன்னமாகி ஆகாயத்தின் கீழேயுள்ள அனைத்து உயிர்களுக்கும் உணவாகிறது. அந்த அன்னத்தினால் செய்யப்படுவதால்தான், அன்னாபிஷேகம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகப் போற்றப்படுகிறது.





















