மேலும் அறிய

அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப திருவிழா; முகூர்த்த பந்த கால் நடப்பட்டது

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா வருகிற 27ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்க உள்ள நிலையில் பூர்வாங்க பணிகள் செய்திட இன்று முகூர்த்த பந்தகால் நடும் விழா நடைபெற்றது.

நினைத்தாலே முக்தி தரும் தலமாகவும், பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாகவும் விளங்கக் கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் ஆண்டுதோறும் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவனது தொடர்ந்து 10 நாட்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த திருவிழாவிற்கு தமிழகம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து சுமார் 25 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்வர். இந்நிலையில் இந்த பிலவ ஆண்டு திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் கொடியேற்ற விழா வருகின்ற நவம்பர் மாதம் 27-ஆம் தேதி காலை திருக்கோவிலில் அண்ணாமலையார் சன்னதியின் முன்புறம், 64 அடி உயரம் கொண்ட தங்க கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முக்கிய விழாவான கற்கபக விற்சகம் தேர், வெள்ளித் தேர் திருவிழா, மகா ரதம் என்னும் பஞ்ச மூர்த்திகளின் மகா தேரோட்டம் மற்றும் அதனைத் தொடர்ந்து டிசம்பர் மாதம் 6-ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு திருக்கோவில் கருவறையில் பரணி தீபமும் அன்று மாலை 6 மணிக்கு திருக்கோவில் பின்புறம் உள்ள சிவனே மலையாக காட்சி அளிக்க கூடிய 2,668 அடி உயரம் கொண்ட மலையின் மீது மகா தீபமும் ஏற்றப்பட்ட உள்ளது.

அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப திருவிழா; முகூர்த்த பந்த கால் நடப்பட்டது

இந்தத் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் 10 நாட்களும் காலை இரவு என இரு வேளைகளிலும் சுவாமி, அம்பாள் மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பர். திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு பூர்வாங்க பணிகளுக்காக பந்தல் அமைத்தல், சுவாமி வீதி உலா வரும் வாகனங்கள் பழுது பார்த்தல் மற்றும் வர்ணம் தீட்டுதல், தேர்கள் பழுதுபார்த்தல் உள்ளிட்ட திருவிழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்வதற்காக இன்று காலை திருக்கோவிலில் உள்ள சம்பந்த விநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது.

அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப திருவிழா; முகூர்த்த பந்த கால் நடப்பட்டது

பின்னர் சம்மந்த விநாயகர் சந்நதியில் பந்தக்காலுக்கு பால், தயிர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் செய்யப்பட்டது. திருக்கோவிலின் உள்ளே ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு, தமிழகத்திலேயே இரண்டாவது உயரமான ராஜகோபுரம் முன்புள்ள 16 கால் மண்டபம் வளாகத்தில் காலை 06:30 மணிக்கு சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க உத்திராட நட்சத்திரம் சிம்ம லக்னத்தில், பந்தக்கால் முகூர்த்தம் விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் சிவாச்சாரியார்கள், கோவில் பணியாளர்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு பந்தக்கால் முகூர்த்தம் விழாவினை நடத்தினர். இந்த விழாவில் திருக்கோவில் இணை ஆணையர் அசோக்குமார் , நகர துணை காவல் கண்காணிப்பாளர் குணசேகரன் மற்றும் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Gold Rate New Peak: அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
TATA Sierra EV: அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
ABP Premium

வீடியோ

தர்காவில் சந்தனக்கூடு விழா! ”இந்துக்களை விட மாட்டீங்களா” திருப்பரங்குன்றத்தில் மோதல்
”5 வருசம் நான் தான் CM
விஜய்யுடன் 3 மணி நேரம் மீட்டிங்செங்கோட்டையன் கொடுத்த IDEA! MISS ஆன ஆனந்த்
Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gold Rate New Peak: அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
TATA Sierra EV: அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
செவிலியர்கள் போராட்டம் ; பொங்கலுக்கு முன்பு இது நடக்கும் !! அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
செவிலியர்கள் போராட்டம் ; பொங்கலுக்கு முன்பு இது நடக்கும் !! அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
H-1B Visa Renewal Issue: அமெரிக்கா கெடுபிடி; தள்ளி வைக்கப்பட்ட விசா நேர்காணல்; H-1B-ஐ புதுப்பிக்க இந்தியா வந்தவர்கள் தவிப்பு
அமெரிக்கா கெடுபிடி; தள்ளி வைக்கப்பட்ட விசா நேர்காணல்; H-1B-ஐ புதுப்பிக்க இந்தியா வந்தவர்கள் தவிப்பு
Government employees Old Pension: அரசு ஊழியர்களுக்கு பொங்கலுக்கு முன் குட் நியூஸ்.! அமைச்சர்களோடு பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன.?
அரசு ஊழியர்களுக்கு பொங்கலுக்கு முன் குட் நியூஸ்.! அமைச்சர்களோடு பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன.?
Embed widget