மேலும் அறிய

திருக்கடையூரில் அபிராமி பட்டருக்காக அமாவாசையை பவுர்ணமியாக மாற்றிய விழா

திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் அபிராமி பட்டருக்காக அமாவாசையை பவுர்ணமியாக மாற்றிய விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூர் உலக பிரசித்தி பெற்ற அபிராமி அம்மன் உடனாகிய அமிர்தகடேஸ்வரர்  ஆலயம் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு முன்பு ஒரு காலத்தில் தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னர் அமிர்தகடேஸ்வரர் மற்றும் அபிராமி அம்மனை தரிசனம் செய்ய வந்தார். அப்போது மன்னர் வந்ததை கூட கவனிக்காமல் மன்னருக்கு உடைய மரியாதை செய்யாமல் அபிராமி பட்டர் தியான நிலையில் இருந்துள்ளார். இதனை கண்ட சரபோஜி மன்னர் அருகில் இருந்தவர்களில் இவர் யார்? என்று கேட்டார். அப்போது அவர்கள் அபிராமி பட்டரை பற்றி அவதூறாக அவர்கள்  மன்னரிடம் கூறியுள்ளார். 

திருக்கடையூரில் அபிராமி பட்டருக்காக அமாவாசையை பவுர்ணமியாக மாற்றிய விழா

ஆனால், சரபோஜி மன்னர், அவர்களின் வார்த்தைகளை நம்பாமல், பட்டரின் உள்ளுணர்வை அறிய விரும்பிய சரபோஜி மன்னர், பட்டரே இன்று என்ன திதி என்று கேட்டார். அதற்கு, அம்பிகையின் தியான நிலையில் இருந்த அபிராமி பட்டர் வாய் தவறி பவுர்ணமி என கூறியுள்ளார். அமாவாசையை, பவுர்ணமி என்று தவறுதலாக கூறியதால் மன்னர் சினம் கொண்டார். அதனை தொடர்ந்து அபிராமி பட்டர், ‘உதிக்கின்ற செங்கதிர்‘ என்று ஆரம்பிக்கும் அபிராமி அந்தாதி பாடல்களை பாட தொடங்கினார். இதில் 79 -வது பாடலை பாடிய உடன், அபிராமி அம்மன் பட்டருக்கு நேரில் தோன்றி அமாவாசையை பவுர்ணமியாக மாற்றியதாக புராணங்கள் செல்லப்படுகிறது.

திருக்கடையூரில் அபிராமி பட்டருக்காக அமாவாசையை பவுர்ணமியாக மாற்றிய விழா

இந்த சிறப்புமிக்க நிகழ்வுவை ஆண்டுதோறும் தை மாதம் அமாவாசை அன்று அபிராமி பட்டருக்காக அமாவாசையை பவுர்ணமியாக மாற்றிய விழாவாக இங்கு கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி  தை மாத அமாவாசை தினமான நேற்றிரவு ஓதுவா மூர்த்திகள் அபிராமி அந்தாதி பாடல்கள் பாடினர். அப்போது ஒவ்வொரு பாட்டுக்கும் தீப நைவேத்தியம் செய்யப்பட்டது. மேலும் தருமபுரம் ஆதீனம் 27 -வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள், பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.  

Republic Day parade: டெல்லியில் குடியரசு தின விழாவுக்கு செல்கிறீர்களா? மெட்ரோ இரயிலில் இலவசமாக பயணிக்கலாம்..! முழு விவரம்

திருக்கடையூரில் அபிராமி பட்டருக்காக அமாவாசையை பவுர்ணமியாக மாற்றிய விழா

பின்னர் அபிராமி அம்மனுக்கு பால், தேன், இளநீர், பன்னீர், சந்தனம், விபூதி மற்றும் வாசனை திரவிய பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் அபிராமி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து அர்ச்சனை நடைபெற்றது. தொடர்ந்து வேதமந்திரங்கள் முழங்க அபிராமி பட்டருக்காக அமாவாசையை பவுர்ணமியாக மாற்றிய நிகழ்வு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அபிராமி அம்மனுக்கு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Intranasal Vaccine: குடியரசு தினத்தில் இந்தியாவில் அறிமுகமாகிறது மூக்கு வழி செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்து

திருக்கடையூரில் அபிராமி பட்டருக்காக அமாவாசையை பவுர்ணமியாக மாற்றிய விழா

முன்னதாக திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் உள்ள அபிராமி அம்மனுக்கு தை அமாவாசையையொட்டி பால்குட விழா நடைபெற்றது. இதையொட்டி தருமபுரம் ஆதீனம் 27 -வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் அருளாசியின்படி திருக்கடையூர் ஆணைக்குளத்து கரையில் அமைந்துள்ள எதிர்காளஸ்வரர் கோயிலில் இருந்து 1008 -க்கும் மேற்பட்ட பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில் பால்குடங்களை ஊர்வலமாக எடுத்து சென்று அமிர்தகடேஸ்வரர் கோயிலை அடைந்தனர். அங்கு அபிராமி அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ரூ.9 ஆயிரம் கோடியில் டாடா கார் ஆலை; 5 ஆயிரம் பேருக்கு வேலை- அடிக்கல் நாட்டிய முதல்வர்
ரூ.9 ஆயிரம் கோடியில் டாடா கார் ஆலை; 5 ஆயிரம் பேருக்கு வேலை- அடிக்கல் நாட்டிய முதல்வர்
Breaking News LIVE 28th Sep 2024: கூகுள் மேப்பை பயன்படுத்தி ஏடிஎம் தேர்வு செய்த மேவாட் கொள்ளையர்கள்: வெளியான தகவல்
Breaking News LIVE 28th Sep 2024: கூகுள் மேப்பை பயன்படுத்தி ஏடிஎம் தேர்வு செய்த மேவாட் கொள்ளையர்கள்: வெளியான தகவல்
2000 போலீஸ் பாதுகாப்பு; 30,000 பேர் பங்கேற்பு - களைகட்டப்போகும் திமுக பவள விழா பொதுக்கூட்டம்
2000 போலீஸ் பாதுகாப்பு; 30,000 பேர் பங்கேற்பு - களைகட்டப்போகும் திமுக பவள விழா பொதுக்கூட்டம்
ஒடிசாவில் வெடித்த மதக்கலவரம்.. பேஸ்புக் பதிவால் வந்த வினை.. தொடரும் பதற்றம்!
ஒடிசாவில் வெடித்த மதக்கலவரம்.. பேஸ்புக் பதிவால் வந்த வினை.. தொடரும் பதற்றம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul Gandhi | கேள்வி கேட்டா அசிங்க படுத்துவீங்களா? நான்வருவேன் அப்போ தெரியும்! நாள் குறித்த ராகுல்!Thrissur ATM Robbery | GUNSHOT.. CHASING.. ஹரியானா கொள்ளையர்கள் சிக்கியது எப்படி? Namakkal ContainerThiruchendur temple : முருகனை பார்க்க ஆயிரமா? கொந்தளிக்கும் பக்தர்கள்!திருச்செந்தூரில் நடப்பது என்ன?Rowdy John : ”கேட்ட இழுத்து மூடு டா” நீதிமன்றத்துக்குள் புகுந்த போலீஸ்! தட்டி தூக்கப்பட்ட ரவுடி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரூ.9 ஆயிரம் கோடியில் டாடா கார் ஆலை; 5 ஆயிரம் பேருக்கு வேலை- அடிக்கல் நாட்டிய முதல்வர்
ரூ.9 ஆயிரம் கோடியில் டாடா கார் ஆலை; 5 ஆயிரம் பேருக்கு வேலை- அடிக்கல் நாட்டிய முதல்வர்
Breaking News LIVE 28th Sep 2024: கூகுள் மேப்பை பயன்படுத்தி ஏடிஎம் தேர்வு செய்த மேவாட் கொள்ளையர்கள்: வெளியான தகவல்
Breaking News LIVE 28th Sep 2024: கூகுள் மேப்பை பயன்படுத்தி ஏடிஎம் தேர்வு செய்த மேவாட் கொள்ளையர்கள்: வெளியான தகவல்
2000 போலீஸ் பாதுகாப்பு; 30,000 பேர் பங்கேற்பு - களைகட்டப்போகும் திமுக பவள விழா பொதுக்கூட்டம்
2000 போலீஸ் பாதுகாப்பு; 30,000 பேர் பங்கேற்பு - களைகட்டப்போகும் திமுக பவள விழா பொதுக்கூட்டம்
ஒடிசாவில் வெடித்த மதக்கலவரம்.. பேஸ்புக் பதிவால் வந்த வினை.. தொடரும் பதற்றம்!
ஒடிசாவில் வெடித்த மதக்கலவரம்.. பேஸ்புக் பதிவால் வந்த வினை.. தொடரும் பதற்றம்!
பூர்வீக சொத்தில் பங்கு தராத ஆத்திரம்: மாமியாரை அரிவாளால்  வெட்டி கொன்ற மருமகனுக்கு ஆயுள் தண்டனை
பூர்வீக சொத்தில் பங்கு தராத ஆத்திரம்: மாமியாரை அரிவாளால் வெட்டி கொன்ற மருமகனுக்கு ஆயுள் தண்டனை
October Launch Cars: அக்டோபரில் வெளியாக உள்ள புதிய கார்கள், எஸ்யுவிக்கள்..! லிஸ்ட் இதோ, உங்க சாய்ஸ் எது?
October Launch Cars: அக்டோபரில் வெளியாக உள்ள புதிய கார்கள், எஸ்யுவிக்கள்..! லிஸ்ட் இதோ, உங்க சாய்ஸ் எது?
Fire cracker Accident: சாத்தூர் பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து - ஆட்கள் சிக்கியுள்ளனரா?
சாத்தூர் பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து - ஆட்கள் சிக்கியுள்ளனரா?
Hosur Fire Accident: ஓசூரில் டாடா செல்போன் உற்பத்தி ஆலையில் பயங்கர தீ விபத்து - பதறி ஓடிய தொழிலாளர்கள்
Hosur Fire Accident: ஓசூரில் டாடா செல்போன் உற்பத்தி ஆலையில் பயங்கர தீ விபத்து - பதறி ஓடிய தொழிலாளர்கள்
Embed widget