ஐப்பசி பிரதோஷம்; கோடீஸ்வரன் ஆலயத்தில் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்; பக்தர்கள் பரவசம்
கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஐப்பசி மாத பிரதோஷ விழா நந்தி பகவானுக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம் -வெள்ளி காப்பு அலங்காரம்.
கரூர் கோடீஸ்வரன் ஆலயத்தில் ஐப்பசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ஐந்து ரோடு பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் பாலபிகா சமேத கோடீஸ்வரன் ஆலயத்தில் ஐப்பசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை முன்னிட்டு நந்தி பகவானுக்கு எண்ணெய் காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், அபிஷேக பொடி, அரிசி மாவு, பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
அதன் தொடர்ச்சியாக நந்திபகவானுக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்த பிறகு ஆலயத்தின் சிவாச்சாரியார் சுவாமிக்கு தீபங்கள் காட்டி, நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது. நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்தனர்.
கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஐப்பசி மாத பிரதோஷ விழா நந்தி பகவானுக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம் -வெள்ளி காப்பு அலங்காரம்.
தென் தமிழகத்தில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, சௌந்தரநாயகி உடனுறை ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஐப்பசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு எண்ணெய் காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், அபிஷேகப் பொடி, அரிசி மாவு, பண்ணீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
அதன் தொடர்ச்சியாக நந்தி பகவானுக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்த பிறகு வெள்ளிக்கவசம் சாத்தப்பட்டு, ஆலயத்தில் சிவாச்சாரியார் உதிரிப் பூக்களால் நாமாவளிகள் கூறினார். அதை தொடர்ந்து சுவாமிக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு,பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது.
கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் நடைபெற்ற ஐப்பசி மாத பிரதோஷ விழாவை காண கரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய செயல் அலுவலர் மற்றும் பணியாளர்கள் சார்பாக சிறப்பாக செய்தனர்.