ஆன்மீகம்: உலக நன்மை வேண்டி பிரத்தியங்கிரா காளி கோயிலில் அக்னிதோஷ நிவர்த்தி 24 மணி நேர தொடர் அபிஷேகம்
இந்த அபிஷேகத்தில் கலந்து கொண்டால் மக்கள் நோய் நொடியின்றி நீண்ட ஆயுளுடன் வாழ்வார்கள் அதுமட்டுமின்றி சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
விழுப்புரம்: மொரட்டாண்டி மகா பிரத்தியங்கிரா காளி கோவிலில் உலக நன்மை வேண்டி அக்னிதோஷ நிவர்த்தி 24 மணி நேர தொடர் அபிஷேகத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அடுத்த மொரட்டாண்டி பகுதியில் உலகிலேயே மிக உயரமான மொரட்டாண்டி மகா பிரத்தியங்கரா காளி கோவில் அமைந்துள்ளது. இங்கு வருடம் தோறும் அக்கினி வெயில் நிறைவையொட்டி அக்னிதோஷ நிவர்த்தி அபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த வருடமும் உலக நன்மை வேண்டியும் அக்னி வெயிலில் இருந்து பொதுமக்களை காக்க வேண்டியும் பிரத்தியங்கிரா காளிக்கு அக்னிதோஷ நிவர்த்தி 24 மணி நேர பிரம்மாண்ட அபிஷேகம் நடைபெற்றது.
ஆலய பீடாதிபதி நடாத்தூர் ஜனார்த்தன சுவாமிகள் தலைமையில் நடைபெற்ற அபிஷேகம் நேற்று அதிகாலை 5 மணிக்கு துவங்கி இன்று காலை 7 மணிக்கு நிறைவடைந்தது. இதில் 1008 லிட்டர் தயிர், பால், நெய், மற்றும் 1008 இளநீர், நுங்கு மற்றும் 108 கிலோ, மஞ்சள், குங்குமம், விபூதி, சந்தனம் உட்பட 108 பொருட்களைக் கொண்டு இடைவிடாது அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து காளிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு மகா தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டது. இந்த அபிஷேகத்தில் கலந்து கொண்டால் மக்கள் நோய் நொடியின்றி நீண்ட ஆயுளுடன் வாழ்வார்கள் அதுமட்டுமின்றி சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம் என்பதினால் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்