(Source: ECI/ABP News/ABP Majha)
கரூர் தாந்தோணி ஆதி மாரியம்மன் ஆலயம் : 20 ஆம் ஆண்டு நடைபெற்ற திருவிளக்கு பூஜை.
திருவிளக்கு பூஜைகள் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கு திருவிளக்கு பூஜைக்கு தேவையான அனைத்து பொருட்களையும் ஆதி மாரியம்மன் நண்பர்கள் நற்பணி மன்றத்தின் சார்பாக வழங்கினர்.
கரூர் தாந்தோணி ஆதி மாரியம்மன் நண்பர்கள் நற்பணி மன்றம் நடத்தும் 20 ஆம் ஆண்டு திருவிளக்கு பூஜை நூற்றுக்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம்.
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தாந்தோணி குடித்தெரு ஆதி மாரியம்மன் ஆலயத்தில் ஆடி 5ஆம் வெள்ளியை முன்னிட்டு ஆதி மாரியம்மன் நண்பர்கள் நற்பணி மன்றம் நடத்தும் 20 ஆம் ஆண்டு திருவிளக்கு மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியை முன்னிட்டு இன்று ஆதி மாரியம்மன் சாமிக்கு பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று அதன் தொடர்ச்சியாக காலை கோ பூஜையும் ,மதியம் அன்னதானமும் நடைபெற்றது. பின்னர் ஆதி மாரியம்மன் சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்த நிலையில் ஆலயத்தின் பூசாரி சுவாமிக்கு மகா தீபாராதனை காட்டினார். தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
அதை தொடர்ந்து இரவு ஆதி மாரியம்மன் ஆலய அருகே நூற்றுக்கு மேற்பட்ட பெண் பக்தர்கள் கலந்து கொண்ட திருவிளக்கு பூஜை சிறப்பாக நடைபெற்றது. திருவிளக்கு பூஜைகள் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கு திருவிளக்கு பூஜைக்கு தேவையான அனைத்து பொருட்களையும் ஆதி மாரியம்மன் நண்பர்கள் நற்பணி மன்றத்தின் சார்பாக வழங்கிய பிறகு திருவிளக்கு பூஜை சிறப்பாக நிறைவு பெற்றது.
அதை தொடர்ந்து அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. ஆதி மாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற 20 ஆம் ஆண்டு திருவிளக்கு பூஜை ஏற்பாட்டை ஆதி மாரியம்மன் நண்பர்கள் நற்பணி மன்றத்தின் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.
கரூர் அருகே உலக நன்மை வேண்டி மாபெரும் திருவிளக்கு பூஜையில் 500 க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்பு | ஸ்ரீ அன்னைகாமாட்சியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மஹா ஹோமங்களும் நடத்தப்பட்டது.
கரூர் அருகே காக்காவாடி பஞ்சாயத்திற்குட்பட்ட , காமாட்சியம்மன் நகர் தோட்டத்தில் உலக நன்மை வேண்டியும், உலக அமைதிக்காகவும் மாபெரும் திருவிளக்கு பூஜை நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடைபெற்றது. கரூரில் உள்ள 24 மனை தெலுங்கு செட்டியார்கள் இளைஞர் அணி சார்பில் நடைபெற்ற இந்த திருவிளக்கு பூஜை நிகழ்ச்சியில், மாபெரும் அலங்காரத்தில் அம்மன் காட்சியளிக்க, அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீ அன்னை காமாட்சியம்மனுக்கு விஷேச தீபாராதனைகள் காட்டப்பட்டது.
பின்னர் சுமார் 500 க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்ட இந்த குத்துவிளக்கு பூஜையில், உலக நன்மைகள் வேண்டியும், உலக அமைதிக்காகவும் மாபெரும் யாகசாலை அமைக்கப்பட்டு, விஷேச ஹோமங்களும் அதனை தொடர்ந்து மாபெரும் திருவிளக்கு பூஜை நிகழ்ச்சியும் சிறப்பாக நடைபெற்றது.
இதற்கான முழு ஏற்பாடுகளை 24 மனை தெலுங்கு செட்டியார்களின் இளைஞரணியினர் மற்றும் இரும்பு வியாபாரிகள் சிறப்பாக செய்திருந்தனர். இதனை தொடர்ந்து மாபெரும் அன்னதானமும் நடைபெற்றது.