ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் காயத்ரி தேவிக்கு தை அமாவாசையை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம்
காயத்ரி தேவிக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்து பிறகு ஆலயத்தின் சிவாச்சாரியார் காயத்ரி தேவிக்கு உதிரிப்பூக்களால் நாமாவளிகள் கூறினார்.
![ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் காயத்ரி தேவிக்கு தை அமாவாசையை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் Abhishekam with special materials for Thai Amavasai to Goddess Gayatri at Sri Vishwakarma Siddhi Vinayagar Temple ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் காயத்ரி தேவிக்கு தை அமாவாசையை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/10/80a4a7dc20784bd4924074ce00c3b35b1707559943083113_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கரூர் தேர் வீதி அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் காயத்ரி தேவிக்கு தை அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பொருட்களால் அபிஷேகம் மற்றும் ஆராதனை செய்யப்பட்டது.
கரூர் மாவட்டம், தேர் வீதி பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் காயத்ரி தேவிக்கு தை மாத அம்மாவாசையை முன்னிட்டு சுவாமிக்கு எண்ணெய் காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சமிரதம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், அபிஷேக பெடி, அரிசி மாவு, விபூதி, பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக காயத்ரி தேவிக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்து பிறகு ஆலயத்தின் சிவாச்சாரியார் உதிரிப்பூக்களால் நாமாவளிகள் கூறினார்.
அதை தொடர்ந்து சுவாமிக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது. தேர் வீதி அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் காயத்ரி தேவியின் தை மாத அமாவாசை நிகழ்ச்சியை காண ஏராளமான பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய சிவாச்சாரியார் வசந்த் சிறப்பான முறையில் ஏற்பாடுகளை செய்திருந்தார்.
கரூர் தேர் வீதி அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் தை மாத அமாவாசையை முன்னிட்டு தங்க தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
கரூர் தேர் வீதி அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் தைமாத அம்மாவாசை முன்னிட்டு தங்க தேரோட்ட நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை முன்னிட்டு மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, அதன் தொடர்ச்சியாக உற்சவர் மாரியம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று தங்கத்தேரில் சுவாமியை கொலுவிருக்க செய்தனர். பின்னர் மேளதாளங்கள் முழங்க ஆலயத்தில் இருந்து புறப்பட்ட மாரியம்மன் தங்க தேரோட்டம் ஆலயம் வளம் வந்த பிறகு மீண்டும் ஆலயம் குடிபுகுந்தது.
ஆலயம் குடி புகுந்த மாரியம்மனுக்கு கோவில் பூசாரி மகா தீபாராதனை காட்டிய பிறகு தங்க தேரோட்ட நிகழ்ச்சி சிறப்பாக நிறைவு பெற்றது. கரூர் தேர் வீதி அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் தைமாத அமாவாசை முன்னிட்டு நடைபெற்ற தங்க தேரோட்ட நிகழ்ச்சியில் காண ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து தங்க தேரோட்டத்தை கண் குளிர கண்டு மகிழ்ந்தனர். நிகழ்ச்சியை ஆலய பரம்பரை அறங்காவலர் மற்றும் பணியாளர்கள் சார்பாக சிறப்பாக ஏற்பாடுகளை செய்தனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)