கரூர் சுக்காலியூர் காளியம்மன் ஆலய ஆனி மாத திருவிழா; மாவிளக்கு எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
காளியம்மனுக்கு பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று வண்ண மாலைகள் அணிவித்து சந்தன காப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தார்.
கரூர் சுக்காலியூர் அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் ஆலயத்தில் ஆனி மாத திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் மாவிளக்கு எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட சுக்காலியூர் பகுதியில் குடிக்கொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் ஆலயத்தில் ஆனி மாத திருவிழாவை முன்னிட்டு ஏராளமான ஆன்மீகப் பெருமக்கள் மாவிளக்கு எடுத்து வந்து நேர்த்திக்கடனை செய்தனர்.
இந்நிகழ்ச்சியை முன்னிட்டு காளியம்மனுக்கு பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று வண்ண மாலைகள் அணிவித்து தொடர்ச்சியாக சந்தன காப்பு அலங்காரத்தில் காளியம்மன் காட்சி அளித்தார்.
அதைத் தொடர்ந்து மேல தாளங்கள் முழங்க ஏராளமான பக்தர்கள் சுக்காலியூர் விநாயகர் ஆலயத்தில் இருந்து ஊர்வலமாக மாவிளக்கு தட்டை எடுத்து வந்து காளியம்மன் ஆலயத்தில் வைத்து வழிபாடு நடத்தினர்.
அதைத் தொடர்ந்து காளியம்மனுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டு அனைத்து பக்தர்களுக்கும் விபூதி பிரசாதம் , தீர்த்தம் தெளிக்கப்பட்டு ஆனி மாத திருவிழா சிறப்பாக நிறைவு பெற்றது.
இந்த நிகழ்ச்சியின் ஏற்பாட்டை காளியம்மன் ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்