மேலும் அறிய

Aadi perukku 2024: ஆடிப் பெருக்கு விழா; பேரூர் பட்டீஸ்வரர் கோயிலில் குவிந்த பக்தர்கள்

தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் நேற்று மாவட்ட நிர்வாகம் பொதுமக்களின் நலன் கருதி நொய்யல், பவானி ஆறு மற்றும் நீர் நிலைகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளனர்.

ஆடிப் பெருக்கை முன்னிட்டு கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் இன்று அதிகாலை முதலே திரண்ட பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்தினர்.

இன்று ஆடிப் பெருக்கு விழா தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆடிப்பெருக்கு விழா கோவை மாவட்டத்தில் பேரூர் நொய்யல் ஆற்றில் ஒவ்வொரு ஆண்டும் களைகட்டும். ஆனால் கடந்த ஆண்டில் தண்ணீர் இல்லாததால் ஆடிப்பெருக்கு விமரிசையாக கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆற்றில் தற்போது வரை தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் நேற்று மாவட்ட நிர்வாகம் பொதுமக்களின் நலன் கருதி நொய்யல், பவானி ஆறு மற்றும் நீர் நிலைகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளனர்.

பக்தர்கள் வழிபாடு

இதைத் தொடர்ந்து இன்று பக்தர்கள் ஆற்றில் இறங்கி நீராடாமல், அருகில் உள்ள குளியல் அறைகள் மற்றும் தண்ணீர் தொட்டிகளில் இருந்து குளித்து சென்றனர். ஆற்றின் படித்துறையில் சுமங்கலி பெண்கள், புதுத்தாலி கயிறு மாற்றி கொண்டனர். இதே போல் ஏராளமான ஆண்களும், பெண்களும் தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபட்டனர். தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அண்டை மாநிலமான கேரளா  மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் இங்கு வந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டு செல்வது வழக்கம். இன்று காலை அதிக அளவில் பொதுமக்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்து, காகத்திற்கு உணவு வைத்து வழிவட்டனர். மேலும் முன்னோர்களை நினைத்து ஆற்றில் வாழை இலையில் விளக்கு வைத்து அனுப்பி வழிபாடு நடத்துவது வழக்கம். ஆனால் நீர் நிலைகள் மாசு அடைவதால் பழைய ஆடைகள், மாலை மற்றும் விளக்குகள் போன்றவற்றை ஆற்றில் அனுப்ப அனுமதி இல்லை என்பதால் படித் துறையில் உள்ள விநாயகர் கோவில் அரச மரத்தடியில் விளக்குகளை பொதுமக்கள் வைத்து சென்றனர். இதேபோல ஆடிப்பெருக்கை முன்னிட்டு பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

மாசாணியம்மன் கோவில்

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலையில் பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோவில் உள்ளது. இங்கு உள்ளூர் மட்டுமல்லாமல் வெளியூர் வெளி மாநிலத்திலிருந்தும் அதிகளவில் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். அந்த வகையில் இன்று ஆடிப்பெருக்கை  முன்னிட்டு அம்மனுக்கு 18 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது. இன்று அதிகாலையில் இருந்தே பக்தர்கள் அதிக அளவில் வருகை புரிந்து, கொடிமரம் அருகே தங்கள் வேண்டுதலை நிறைவேற்றுவிதமாக தீபங்கள் ஏற்றி வழிபாடு செய்தனர். மேலும் அம்மனை தரிசிக்க ஆயிரக்கணக்கான பக்தர்கள்  நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களின் கூட்ட நெரிசலை குறைக்க மற்றும் பாதுகாப்பு நலன் கருதி தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கூட்ட நெரிசல் அதிகமாக இருப்பதால் நூற்றுக்கணக்கான காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஒரு கொடி கம்பம் நடுவதற்கு ஒரு யுத்தம் செய்ய வேண்டியுள்ளது - பொங்கிய திருமாவளவன்
ஒரு கொடி கம்பம் நடுவதற்கு ஒரு யுத்தம் செய்ய வேண்டியுள்ளது - பொங்கிய திருமாவளவன்
TN Rain: இன்று இரவு 11 மாவட்டங்களில் மழை இருக்கு: எந்தெந்த மாவட்டங்கள்.. லிஸ்ட் இதோ.!
இன்று இரவு 11 மாவட்டங்களில் மழை இருக்கு: எந்தெந்த மாவட்டங்கள்.. லிஸ்ட் இதோ.!
டிரம்ப் பேசும்போது
டிரம்ப் பேசும்போது "மோடி, மோடி" என பறந்த கோஷம்?. ஆனால் உண்மையில் என்ன நடந்தது?
"ஆணாதிக்கம் ஒன்னும் உங்களை தடுக்கிறதில்ல" நிர்மலா சீதாராமன் நறுக்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Salem Prisoner Attacks Police : ’’எனக்கு சிகரெட் வேணும்’’போலீஸை அடிக்க பாய்ந்த கைதி..Gujarat Car Funeral Ceremony : ’லக்கி’ காருக்கு இறுதிச்சடங்கு! வியக்க வைத்த விவசாயிTVK Vijay Meet Army Officers | ராணுவ வீரர்களுடன் விஜய் திடீர் சந்திப்பு ஏன்? கதறும் பாஜகவினர்Muthusamy | முத்துசாமியின் உள்ளடி வேலை! ஷாக்கில் ஈரோடு திமுக! யாரும் எதிர்பார்க்காத அறிவிப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஒரு கொடி கம்பம் நடுவதற்கு ஒரு யுத்தம் செய்ய வேண்டியுள்ளது - பொங்கிய திருமாவளவன்
ஒரு கொடி கம்பம் நடுவதற்கு ஒரு யுத்தம் செய்ய வேண்டியுள்ளது - பொங்கிய திருமாவளவன்
TN Rain: இன்று இரவு 11 மாவட்டங்களில் மழை இருக்கு: எந்தெந்த மாவட்டங்கள்.. லிஸ்ட் இதோ.!
இன்று இரவு 11 மாவட்டங்களில் மழை இருக்கு: எந்தெந்த மாவட்டங்கள்.. லிஸ்ட் இதோ.!
டிரம்ப் பேசும்போது
டிரம்ப் பேசும்போது "மோடி, மோடி" என பறந்த கோஷம்?. ஆனால் உண்மையில் என்ன நடந்தது?
"ஆணாதிக்கம் ஒன்னும் உங்களை தடுக்கிறதில்ல" நிர்மலா சீதாராமன் நறுக்!
ISRO Sivan:
"2040 ஆம் ஆண்டில் நிலவில் இந்திய ஆராய்ச்சியாளர்கள் கால் பதிப்பார்கள்" - இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன்
"அம்பேத்கரை அவமானப்படுத்திட்டாங்க.. இந்த இடஒதுக்கீட்டை ஏத்துக்க மாட்டோம்" அமித் ஷா அதிரடி
4B movement: ட்ரம்புக்கா ஓட்டு போட்டீங்க..! நோ டேட்டிங், நோ கல்யாணம், உடலுறவு - ஆண்களுக்கு எதிராக அமெரிக்க பெண்கள் போராட்டம்
4B movement: ட்ரம்புக்கா ஓட்டு போட்டீங்க..! நோ டேட்டிங், நோ கல்யாணம், உடலுறவு - ஆண்களுக்கு எதிராக அமெரிக்க பெண்கள் போராட்டம்
‘திமுகவிற்கு முட்டு கொடுக்கிறியா’... விஜய் வந்தவுடன் எவ்வளவு ஹைப் - திருமாவின் ஆதங்க பேச்சு
‘திமுகவிற்கு முட்டு கொடுக்கிறியா’... விஜய் வந்தவுடன் எவ்வளவு ஹைப் - திருமாவின் ஆதங்க பேச்சு
Embed widget