Aadi krithigai 2023: ஆடிக்கிருத்திகை: பழனியில் குவிந்த பக்தர்கள்..... காவடிகள் எடுத்தும் , பெண்கள் தீபம் ஏற்றியும் சாமி தரிசனம்
Aadi Krithigai 2023: பழனி முருகன் கோயிலில் ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் காவடிகள் எடுத்தும், படிப்பாதையில் சூடம் ஏற்றியும் , பெண்கள் தீபம் ஏற்றியும் சாமி தரிசனம் செய்ய குவிந்துள்ளனர்.
உலகப் புகழ்பெற்ற பழனி முருகன் கோயில் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடாகும். இங்கு தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழா காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகின்றனர். மேலும் விசேஷ நாட்கள், வாரவிடுமுறை, தொடர்விடுமுறை நாட்களிலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்கின்றனர்.
இந்த நிலையில் இன்று ஆடி கிருத்திகையை(Aadi Krithigai) முன்னிட்டு மலைக்கோவிலில் அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கபட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கபட்டனர். மலையடிவாரம் பாத விநாயகர் கோவில் , படிப்பாதை , யானைப்பாதை , மின் இழுவை ரயில் , ரோப்கார் நிலையங்களிலும் , முடிகாணிக்கை செலுத்தும் இடங்களிலும் பக்தர்கள் கூட்டம் மலைக்கோவிலுக்கு செல்ல குவிந்தனர்.
Aadi Krithigai: இன்னும் திருமணமாகவில்லையா? கவலைப்படாதீங்க.. இன்றே உகந்தநாள்...! இதை செய்யுங்க
பெண்கள் ஆடிகிருத்திகையை முன்னிட்டு தீபங்கள் ஏற்றியும் , படிபாதைகளில் உள்ள படிகளில் சூடம் ஏற்றி கொண்டே மலைக்கோவிலுக்கு சென்றும் , காவடிகள் எடுத்தும் மலைக்கோவிலுக்கு சென்றனர். அதேபோல பொது தரிசனம் , சிறப்பு கட்டண வழிகளிலும் ஏராளமான பக்தர்கள் மூன்று மணி நேரம் வரை நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களின் பாதுகாப்பு வசதிக்காக அனைத்து இடங்களிலும் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பக்தர்களுக்கு குடிநீர், நிழற்பந்தல்கள் அமைக்கப்பட்டு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகம் செய்துள்ளது.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்