மேலும் அறிய

Aadi krithigai 2023: திண்டிவனம் கிடங்கல் முருகன் கோயிலில் மிளகாய் அபிஷேகம் செய்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

(Aadi krithigai) திண்டிவனம் கிடங்கல் பகுதியில் உள்ள முருகன் கோயிலில் மிளகாய் அபிஷேகமும், பக்தர்கள் மார்பு மீது உரல் வைத்து மஞ்சள் இடித்தலும் நடைபெற்றது.

விழுப்புரம்: திண்டிவனம் கிடங்கல் கோட்டை வள்ளி, தெய்வயானை சமேத ஆறுமுகப்பெருமானுக்கு ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு பக்தர்களுக்கு மிளகாய் கரைசல் அபிஷேகமும், பக்தர்கள் மார்பு மீது உரல் வைத்து மஞ்சள் இடித்தலும் நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம், கிடங்கல் கோட்டையில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு அறம் வளர்த்த நாயகி உடனுறை அன்ப நாயக ஈஸ்வரர் சிவாலய வளாகத்தில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு வள்ளி, தெய்வயானை உடனுறை ஆறுமுகப் பெருமானுக்கு 57ம் ஆண்டு ஆடிக் கிருத்திகை விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.  ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு முதல் நாள் பரணி நட்சத்திரத்தில் கோபூஜையுடன் துவங்கிய விழாவில் கொடிமரத்திற்கு பல்வேறு அபிஷேகங்களும், மகா தீபாராதனையும் காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து நந்திகேஸ்வரர் உருவம் பதித்த கொடியானது ஏற்றப்பட்டது. பின்னர் செடல் ராட்டினத்திற்கு பூஜைகள் செய்யப்பட்டது.

'இதெல்லாம் ஒரு அரசாங்கமா..?'...அரசு வேலை கிடைக்காத ஆத்திரத்தில் சட்டமன்ற வளாகத்திற்குள் சான்றிதழை தூக்கி எறிந்த இளைஞர்

அதே போல் மூலவர் அறம் வளர்த்த நாயகி அம்மன் மற்றும் அன்ப நாயக ஈஸ்வரருக்கு பல்வேறு வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டது. தொடர்ந்து உற்சவ மூர்த்திகளுக்கு பல்வேறு வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட உற்சவருக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இரவு கிடங்கல் அகழிக் குளக்கரையிலிருந்து சக்தி கலசம் புறப்பட்டு வீதி உலா நடைபெற்றது.

இரண்டாம் நாள் நிகழ்ச்சியான இன்று காலை சக்திவேலுக்கும், காவடிகளுக்கும் அபிஷேக ஆராதனை நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு மிளகாய் கரைசல் அபிஷேகமும், பக்தர்கள் மார்பு மீது உரல் வைத்து மஞ்சள் இடித்தலும், மழுவடி சேவையும் நடைபெற்றது. தொடர்ந்து 108 வேலும், சடலும் அணிவித்தலும் மற்றும் பழங்கள் அணிவித்தலும், செடல் ராட்டினமும் நடைபெற்றது. அதனை அடுத்து தீ மிதித்து ரதமும், காவடிகளும் வீதி உலா வந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

விழுப்புரம் மாவட்ட செய்திகள் : 

Aadi Krithigai 2023: புதுச்சேரி கவுசிக பாலமுருகனுக்கு சிறப்பு அலங்காரம்... பக்தர்கள் நீண்ட வரிசையில் சாமி தரிசனம்

Crime: ஆவின் பால் பூத் வைப்பதில் தகராறு; விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற தி.மு.க. நிர்வாகி - பெரும் அதிர்ச்சி..!

துர்நாற்றத்தில் மூழ்கி இருக்கும் விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம்; கண்டுகொள்ளாத அதிகாரிகள்

விழுப்புரம்: சாதி ரீதியாக வேற்றுமை; மறு தேர்விற்கு ஹால் டிக்கெட் வரவில்லை; முதல்வர் தனி பிரிவுக்கு புகார்

புதுச்சேரி,விழுப்புரம், கள்ளகுறிச்சி பகுதியில் உள்ள பொதுமக்களின் பிரச்சனைகளை தெரிவிக்க +918508008569 என்கின்ற எண்ணில் தொடர்புகொண்டு தெரிவிக்கலாம்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

BREAKING Kuwait Fire Accident: குவைத் தீ விபத்து : சிறப்பு விமானத்தில் கொச்சி வந்தடைந்த 45 இந்தியர்களின் உடல்கள்.. ஏற்பாடுகள் தீவிரம்
Kuwait Fire Accident: குவைத் தீ விபத்து : சிறப்பு விமானத்தில் கொச்சி வந்தடைந்த 45 இந்தியர்களின் உடல்கள்.. ஏற்பாடுகள் தீவிரம்
BREAKING : காஞ்சிபுரம் : 30-க்கும் மேற்பட்டோருக்கு வயிற்றுப்போக்கு, திடீர் பாதிப்புக்கு காரணம் என்ன? சுகாதாரத்துறை என்ன சொல்கிறது?
காஞ்சிபுரம் : 30-க்கும் மேற்பட்டோருக்கு வயிற்றுப்போக்கு, திடீர் பாதிப்புக்கு காரணம் என்ன?
Breaking News LIVE: குவைத் தீ விபத்து : சிறப்பு விமானத்தில் கொச்சி வந்தடைந்த 45 இந்தியர்களின் உடல்கள்
Breaking News LIVE: குவைத் தீ விபத்து : சிறப்பு விமானத்தில் கொச்சி வந்தடைந்த 45 இந்தியர்களின் உடல்கள்
Amma Unavagam: புதுப்பொலிவு பெறும் சென்னை அம்மா உணவகங்கள்.. புதிய உணவுகளும் விரைவில் அறிமுகம்!
புதுப்பொலிவு பெறும் சென்னை அம்மா உணவகங்கள்.. புதிய உணவுகளும் விரைவில் அறிமுகம்!
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Tamilisai Vs Annamalai : தமிழிசைக்கு அழுத்தம்? மேடையில் நடந்தது என்ன? பரபரப்பு விளக்கம்Yediyurappa Arrest? | சிறுமிக்கு பாலியல் தொல்லை எடியூரப்பாவுக்கு கைது வாரண்ட்!Madurai Muthu Help Handicap People | லாரான்ஸ், பாலா வரிசையில்..   நடிகர் மதுரை முத்து!Thirupachi Benjamin | பிரபல ஹோட்டலில் விருந்து..பூரித்துபோன நரிக்குறவ மக்கள்! அசத்திய நடிகர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
BREAKING Kuwait Fire Accident: குவைத் தீ விபத்து : சிறப்பு விமானத்தில் கொச்சி வந்தடைந்த 45 இந்தியர்களின் உடல்கள்.. ஏற்பாடுகள் தீவிரம்
Kuwait Fire Accident: குவைத் தீ விபத்து : சிறப்பு விமானத்தில் கொச்சி வந்தடைந்த 45 இந்தியர்களின் உடல்கள்.. ஏற்பாடுகள் தீவிரம்
BREAKING : காஞ்சிபுரம் : 30-க்கும் மேற்பட்டோருக்கு வயிற்றுப்போக்கு, திடீர் பாதிப்புக்கு காரணம் என்ன? சுகாதாரத்துறை என்ன சொல்கிறது?
காஞ்சிபுரம் : 30-க்கும் மேற்பட்டோருக்கு வயிற்றுப்போக்கு, திடீர் பாதிப்புக்கு காரணம் என்ன?
Breaking News LIVE: குவைத் தீ விபத்து : சிறப்பு விமானத்தில் கொச்சி வந்தடைந்த 45 இந்தியர்களின் உடல்கள்
Breaking News LIVE: குவைத் தீ விபத்து : சிறப்பு விமானத்தில் கொச்சி வந்தடைந்த 45 இந்தியர்களின் உடல்கள்
Amma Unavagam: புதுப்பொலிவு பெறும் சென்னை அம்மா உணவகங்கள்.. புதிய உணவுகளும் விரைவில் அறிமுகம்!
புதுப்பொலிவு பெறும் சென்னை அம்மா உணவகங்கள்.. புதிய உணவுகளும் விரைவில் அறிமுகம்!
Latest Gold Silver Rate: மகிழ்ச்சியான செய்தி.. இன்னைக்கு தங்கம் விலை சரிவு.. விலை நிலவரம் இதோ..
Latest Gold Silver Rate: மகிழ்ச்சியான செய்தி.. இன்னைக்கு தங்கம் விலை சரிவு.. விலை நிலவரம் இதோ..
AFG Vs PNG, T20 Wolrdcup: ரசிகர்கள் ஷாக் - உலகக் கோப்பையில் இருந்து நியூசிலாந்து வெளியேற்றம் - சூப்பர் 8 சுற்றில் ஆப்கானிஸ்தான்
AFG Vs PNG, T20 Wolrdcup: ரசிகர்கள் ஷாக் - உலகக் கோப்பையில் இருந்து நியூசிலாந்து வெளியேற்றம் - சூப்பர் 8 சுற்றில் ஆப்கானிஸ்தான்
DA Hike: காலையிலேயே மகிழ்ச்சி செய்தி.. அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு - தமிழ்நாடு அரசு அறிவிப்பு!
DA Hike: காலையிலேயே மகிழ்ச்சி செய்தி.. அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு - தமிழ்நாடு அரசு அறிவிப்பு!
Tamilisai On Amit shah: ஏது, அமித்ஷா கண்டித்தாரா? - வைரல் வீடியோ தொடர்பாக தமிழிசை சொன்ன விளக்கம்..!
ஏது, அமித்ஷா கண்டித்தாரா? - வைரல் வீடியோ தொடர்பாக தமிழிசை சொன்ன விளக்கம்..!
Embed widget