மேலும் அறிய
SL Vs AFG : ஆப்கானிஸ்தானுக்கு பதிலடி கொடுத்த இலங்கை.. சரிக்கு சமமாக இருக்கும் இரு அணிகள்!
நேற்று இலங்கைக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடந்தது. இதில் சிறப்பாக ஆடிய இலங்கை அணி வெற்றிபெற்றது.

இலங்கை Vs ஆப்கானிஸ்தான்
1/6

இலங்கைக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று பன்டோட்டாவில் நடந்தது. முதல் போட்டியில் தோல்வியை தழுவிய இலங்கை அணி இரண்டாவது போட்டியில் அதிரடி மாற்றத்தை காட்டியது.
2/6

டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது.தொடக்க ஆட்டகாரர்கள் பதும் நிசாங்கா (43) திமுத் கருணாரத்னே (52) ஆகிய இருவரும் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
3/6

களம் இறங்கிய குசல் மெண்டிஸ் 78 ரன்கள் அடித்து அசத்தினார். கடைசியாக 50 ஓவர் முடிவில் 323 ரன்களை அடித்தது இலங்கை .
4/6

பின்னர் களம் இறங்கிய ஆப்கானிஸ்தான் அணியின் ரஹ்மானுல்லா குர்பாஸ் 12 பந்துகளுக்கு 2 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்தார்.
5/6

போராடி ஆடிய இப்ராகிம் (54) ரமத் ஷா(36) ஹஷ்மத்துல்லா (57) அடித்து ஆட்டம் இழந்தனர். இவர்களை தொடர்ந்து களம் இறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர்.
6/6

42.1 ஓவரில் 191 ரன்கள் அடித்து அனைத்து விக்கெட்டையும் இழந்தது ஆப்கானிஸ்தான். இலங்கை 132 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்றது . இதுவரை நடந்த இரண்டு போட்டியில், ஆப்கானிஸ்தான் ஒரு வெற்றியையும் இலங்கை ஒரு வெற்றியையும் பெற்றுள்ளது.
Published at : 05 Jun 2023 12:07 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement