மேலும் அறிய
Rahul Dravid : ‘இரண்டு போட்டிகளில் தோற்றாலும் பரவாயில்லை..’ ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த ராகுல் டிராவிட்டின் பேட்டி!
இது போன்ற போட்டியில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்தால்தான், அவர்கள் உலகக் கோப்பைக்கு தகுதியானவர்களாக இருப்பார்களா என்று கூறமுடியும் - ராகுல் டிராவிட்

ராகுல் டிராவிட்
1/6

இந்திய அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் மூன்று ஒருநாள் போட்டி தொடரில் விளையாடி வருகிறது.
2/6

இதில் முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி சிறப்பாக ஆடி வெற்றி பெற்றது. இப்போட்டி இளம் வீரர்களுக்கும் வாய்ப்பளித்து அவர்களின் திறமையையும் சோதித்து பார்த்தது.
3/6

இதனை தொடர்ந்து நேற்று நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் முன்னணி வீரர்களான விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா இடம்பெறவில்லை.
4/6

இரண்டாவது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது. இதனால் பல விமர்சனங்களுக்கு உள்ளானது இந்திய அணி. விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா அணியில் இல்லாததே தோல்விக்கு காரணம் என்று பலரும் கூற ஆரம்பித்தனர்.
5/6

இதற்கெல்லாம் பதிலளித்துள்ள இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறுகையில், “முன்னணி வீரர்கள் காயம் காரணமாக தற்போது ஓய்வில் உள்ளனர். அவர்கள் ஆசிய கோப்பைக்கு முன்னர் உடல் தேறி விளையாட வந்தால் பரவாயில்லை, ஆனால் அப்படி ஆகாவிட்டல் நாம் இளம் வீரர்களையே களத்தில் இறக்கியாக வேண்டும்.”
6/6

மேலும் பேசிய அவர், “உலகக் கோப்பை போட்டியும் அடுத்து வருவதால் அணியை வலுப்படுத்த வேண்டும். இது போன்ற போட்டியில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்தால்தான், அவர்கள் உலகக் கோப்பைக்கு தகுதியானவர்களாக இருப்பார்களா என்று கூறமுடியும், இதனாலையே இந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் இளம் வீரர்களை விளையாட விட்டோம், இதில் தோல்வியடைந்தாலும் பரவாயில்லை” என்று கூறினார்.
Published at : 31 Jul 2023 01:20 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
மதுரை
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion