மேலும் அறிய
LKK Vs DD: புள்ளி பட்டியலில் முதலில் இருந்த திண்டுக்கல் அணியை அபராமாக வீழ்த்திய கோவை கிங்ஸ்!
இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய திண்டுக்கல் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஆட்டம் ஆரம்பிக்கும் போதே ஆட்டம் கண்டனர்.

வெற்றி பெற்ற லைகா கோவை கிங்ஸ்
1/6

7 வது சீசன் டி.என்.பி.எல் போட்டியின் 3வது கட்ட லீக் ஆட்டங்கள் சேலம் அருகே உள்ள வாழப்பாடியில் நடந்து வருகிறது. நேற்று மதியம் 3:15 மணி அளவில் நடந்த போட்டியில் திண்டுக்கல் அணியை எதிர்கொண்டது கோவை கிங்ஸ். டாஸ் வென்ற திண்டுக்கல் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
2/6

தொடக்க ஆட்டகாரர்களான எஸ்.சுஜய் ,சுரேஷ் குமார் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இவர்களுடைய பார்ட்னர்ஷிப் 49 ரன்களில் முறிந்தது. பின்னர் களம் இறங்கிய சாய் சுதர்சன் அதிரடிகாக ஆட ஆரம்பித்தார்.
3/6

சாய் சுதர்சன் அதிரடியான ஆட்டத்தால் ரன்கள் மளமளவென குவிய ஆரம்பித்தது. சிறப்பாக ஆடிய சாய் சுதர்சன் 4 சிக்சர்கள் 8 பவுண்டரிகளுடன் 83 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்கள் குவித்தது கோவை கிங்ஸ்.
4/6

இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய திண்டுக்கல் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஆட்டம் ஆரம்பிக்கும் போதே ஆட்டம் கண்டனர்.சிவம் சிங்கை தவிர மற்ற வீரர்களான ராகுல், பாபா இந்திரஜித், ஆதித்யா கணேஷ் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
5/6

சிவம் சிங் மட்டும் ஒருபுறம் நிதானமாக ஆடி ரன்களை அணிக்காக சேர்த்துக் கொண்டிருந்தார். இவருக்கு உறுதுணையாக யாரும் களத்தில் செயல்படவில்லை.
6/6

பின்னர் வந்த சரத் குமார் சற்று ரன்களை சேர்க்க 19.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து திண்டுக்கல் டிராகன்ஸ் அணி தோல்வியை தழுவியது. 83 ரன்கள் அடித்து அசத்திய சாய் சுதர்சனுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.
Published at : 26 Jun 2023 11:46 AM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement