மேலும் அறிய
HBD VVS Laxman: இந்திய கிரிக்கெட்டின் ஃபாபுலஸ் ஃபைவ்-ல் ஒருவர்! ஹாப்பி பர்த்டே விவிஎஸ்!

விவிஎஸ் லக்ஷ்மன்
1/6

இந்திய கிரிக்கெட் அணியில் மிகவும் சிறப்பான பேட்ஸ்மேன்களில் ஒருவர் விவிஎஸ் லக்ஷ்மண். இந்திய கிரிக்கெட் அணியின் ஃபாபுலஸ் ஃபைவ் என்று அழைக்கப்படுபவர்களில் இவரும் ஒருவர்.
2/6

அவருக்கு மிகவும் பிடித்த அணி என்றால் அது ஆஸ்திரேலியா என்றே நாம் கண்களை மூடி கொண்டு கூறலாம். ஏனென்றால் 1990களின் பிற்பாதியில் மிகவும் பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை நொறுக்கியவர் வி.வி.எஸ் லக்ஷ்மண்.
3/6

மெக்ராத், கிலெஸ்பி, ஷேன் வார்னே, மெக்கில், பிரட் லீ ஆகியோரின் பந்துவீச்சை தன்னுடைய அசத்தலான பேட்டிங்கின் மூலம் திணறடித்து இவர் பல ரன்களை குவித்தார்.
4/6

குறிப்பாக 1998ஆம் ஆண்டு முதல் 2012ஆம் ஆண்டு வரை ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக இவர் 29 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 2434 ரன்களை அடித்துள்ளார்.
5/6

ஆஸ்திரேலிய அணி 2001ஆம் ஆண்டு இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்தது. அதில் 2ஆவது டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 445 ரன்கள் எடுத்தது. அதைத் தொடர்ந்து இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 171 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதில் லக்ஷ்மண் மட்டும் 59 ரன்கள் எடுத்தார். அதன்பின்னர் இந்திய அணி ஃபாலோ ஆன் விளையாடியது.
6/6

அதில் ராகுல் திராவிட் மற்றும் லக்ஷ்மண் ஜோடி ஆஸ்திரேலிய பந்துவீச்சை எளிதாக சமாளித்தது. திராவிட் 180 ரன்களும், விவிஎஸ் லக்ஷ்மண் 281 ரன்களும் விளாசினார். இது தான் விவிஎஸ் லக்ஷ்மண் டெஸ்ட் கிரிக்கெட்டில் அடித்த அதிகபட்ச ஸ்கோராகும். இந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.
Published at : 01 Nov 2021 07:14 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement