மேலும் அறிய
Ashes : மீதமுள்ள 174 ரன்கள்.. இன்றைய ஆட்டத்தை வெல்லுமா ஆஸ்திரேலியா?
நேற்றைய ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 107 அடித்திருந்தது ஆஸ்திரேலியா அணி. கடைசி நாளான இன்று 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்க உள்ளது அஸ்திரேலியா அணி.

இங்கிலாந்தில் நடக்கும் ஆஷஸ் தொடரில் எடுக்கப்பட்ட புகைப்படம்
1/6

5 போட்டிகளை கொண்ட ஆஷஸ் டெஸ்ட் கோப்பை தொடருக்காக இங்கிலாந்தில் உள்ளது ஆஸ்திரேலியா அணி. முதல் இன்னிங்சில் 393 ரன்கள் அடித்து டிக்ளேர் செய்ததது இங்கிலாந்து. பின்னர் களம் இறங்கிய ஆஸ்திரேலியா சிறப்பாக ஆடி 386 ரன்கள் அடித்திருந்தது.
2/6

இரண்டாம் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பாக ஆடவில்லை. ஜாக் கிராவ்லி 7 ரன்னிலும் பென் டக்கெட் 19 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர்.
3/6

பின்னர் களம் இறங்கியவர்களும் சிறப்பாக ஆடாமல் போக ஜோ ரூட்டும் ,ஹாரி புரூக் நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தனர்.
4/6

இருவரும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பொறுமையாக அடி 43 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.
5/6

சிறப்பாக பந்து வீசிய ஆஸ்திரேலிய அணி 66.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 274 ரன்கள் எடுத்திருந்தது.
6/6

இதன் மூலம் 281 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது ஆஸ்திரேலியா. நேற்றைய ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 107 அடித்திருந்தது ஆஸ்திரேலியா அணி. கடைசி நாளான இன்று 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்க உள்ளது அஸ்திரேலியா அணி.
Published at : 20 Jun 2023 12:26 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
தமிழ்நாடு
தமிழ்நாடு
கிரிக்கெட்
Advertisement
Advertisement