மேலும் அறிய
Natarajan Cricket academy: ’கையிலே ஆகாசம் கொண்டு வந்த உன் பாசம் காலமே போனாலும் வாழ்ந்திடும் ராசா..’ நடராஜனின் கனவு மைதானத்தை திறந்து வைத்த தினேஷ் கார்த்திக்!
நடராஜன் கிரிக்கெட் மைதானத்தை இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் திறந்து வைத்தார்.

நடராஜன் கிரிக்கெட் அகாடமி
1/7

சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டியில் பிறந்து தனது விடாமுயற்சி மற்றும் தன்னம்பிக்கை மூலமாக இந்திய கிரிக்கெட்டில் கால் பதித்தவர் சின்னராசு நடராஜன்.
2/7

இடது கை வேகப்பந்து வீச்சாளரான இவர், தனது அசாத்தியமான யார்க்கர் வீசும் திறமையைக் கொண்டு ஐ.பி.எல் மற்றும் டி.என்.பி.எல் போட்டிகளில் ஜொலித்து வருகிறார்.
3/7

இந்நிலையில் தனது சொந்த ஊரான சின்னப்பம்பட்டியில் மைதானம் தொடங்கி பல திறமையுள்ள வீரர்களை புகழ் வெளிச்சத்திற்கு எடுத்து வர வேண்டும் என்பது நடராஜனின் கனவாகவே இருந்தது.
4/7

கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக இந்த மைதானம் கட்டும் பணிகளை தொடங்கிய நடராஜன், கடந்த மாதம் தனது மைதானத்தின் புகைப்படங்களை பகிர்ந்து ’ஓப்பனிங் விரைவில்’ என்று பதிவிட்டுருந்தார்.
5/7

அதனை தொடர்ந்து இன்று நடராஜன் கிரிக்கெட் மைதானத்தை இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் திறந்து வைத்தார்.
6/7

மேலும் இந்த மைதான திறப்பு விழாவில் தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியசனின் தலைவர் அஷோக் சிகாமணி, தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியசனின் செயலாளர் ஆர்.ஐ.பழனி, சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் சி.இ.ஒ கே.எஸ்.விஸ்வநாதன், நடிகர் யோகி பாபு, கிரிக்கெட் வீரர் விஜய் சங்கர், கே.பி.ஒய் புகழ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
7/7

இவ்வாறு தனது சொந்த ஊரில் மைதானத்தை திறந்து எளிய வீரர்களின் கிரிக்கெட் கனவிற்கு கைக்கொடுக்க நினைக்கும் நடராஜனுக்கு வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளன.
Published at : 23 Jun 2023 12:10 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
உலகம்
கிரிக்கெட்
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion