மேலும் அறிய
Draupadi Murmu : குடியரசுத் தலைவர் முர்முவிற்கு அழைப்பிதழ் விடுத்த முதல்வர் ஸ்டாலின்!
முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு தொடக்க விழாவினையொட்டியும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிற்கு அழைப்பு விடுத்தார்.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்த ஸ்டாலின்
1/6

ஜூன் மாதம் 5ஆம் தேதி கிண்டி பன்னோக்கு மருத்துவமனையை திறந்து வைக்கிறார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு. முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் விடுத்த அழைப்பை ஏற்று சென்னை வந்து மருத்துவமனையை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு திறந்து வைக்கிறார்.
2/6

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (28.4.2023) மாண்புமிகு இந்திய குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு அவர்களை குடியரசுத் தலைவர் மாளிகையில் சந்தித்து, சென்னை, கிண்டியில் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை திறந்து வைத்திட அழைப்பு விடுத்தார்.
3/6

முன்னதாக முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 97-வது பிறந்தநாளை முன்னிட்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், சென்னை பெருநகரத்தில் உள்ள கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை ஒன்று அமைக்கப்படும் என அறிவித்திருந்தார்.
4/6

முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு தொடக்க விழாவினையொட்டியும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை மேற்கண்ட விழாக்களில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தார்.
5/6

தமிழ்நாடு முதலமைச்சரின் அழைப்பினை ஏற்று குடியரசுத் தலைவர் 5.6.2023 அன்று சென்னை கிண்டியில் அதிநவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை திறப்பு விழாவிற்கு வருகை தரவுள்ளார்.
6/6

நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறவுள்ள முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு தொடக்க விழாவில் கலந்து கொள்ள இசையளித்துள்ளார்.
Published at : 28 Apr 2023 01:28 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
மதுரை
கல்வி
கிரிக்கெட்
Advertisement
Advertisement






















