மேலும் அறிய
Republic Day Parade 2025: குடியரசு தின அணிவகுப்பு - ஒத்திகை நிகழ்ச்சி - புகைப்பட தொகுப்பு!
Republic Day Parade 2025 குடியரசு தின விழா அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சியின் புகைப்பட தொகுப்பை இங்கே காணலாம்.

குடியரசு தின விழா - அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி
1/5

நாட்டின் 76-வது குடியரசு தினம் தலைநகர் டெல்லியில் வரும் 26-ம் தேதி வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் குடியரசு தின விழா அணிவகுப்புக்கான முழு ஆடை ஒத்திகை கடமைப் பாதையில் விஜய் சவுக் முதல் செங்கோட்டை வரை நேற்று நடைபெற்றது.
2/5

இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோ (Indonesian President Prabowo Subianto) நாளை மறுநாள் (26.01.2025) காலை தலைநகர் புதுடெல்லியில் நடைபெறும் பிரம்மாண்ட குடியரசு தின அணிவகுப்பில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்
3/5

டெல்லியில் குடியரசு தின அணிவகுப்பை முன்னிட்டு முப்படைகளின் பிரம்மாண்ட அணிவகுப்பு, முப்படை வீரர்களின் சாகசங்களும் நடைபெற உள்ளது. ஒட்டுமொத்த டெல்லியும் பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.
4/5

அணிவகுப்பு ஒத்திகை காரணமாக இந்தியா கேட் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் மற்றும் மாற்றங்கள் குறித்து அறிவிப்பை டெல்லி போலீஸார் வெளியிட்டிருந்தனர்.
5/5

ஆண்டுதோறும் காமராஜர் சாலையில் உள்ள காந்தி சிலை எதிரே குடியரசு தின விழா நடைபெறும். ஆனால், தற்போது அந்த பகுதிகளில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருவதால், மாற்று இடமாக உழைப்பாளர் சிலை எதிரே குடியரசு தின விழா நடைபெற உள்ளது. அணிவகுப்பு ஒத்திகையை முன்னிட்டு, ஒத்திகை நிறைவடையும் வரை காமராஜர் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.
Published at : 24 Jan 2025 07:34 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
உலகம்
இந்தியா
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion