மேலும் அறிய
Chandrayaan 3 : உலகமே உற்று நோக்கும் சந்திரயான் 3-ன் தரையிறக்கம் - சாதனை படைக்குமா இஸ்ரோ?
நாளை மாலை நிலவின் தென் துருவத்தில் தரையிறங்க, சந்திரயான் 3 தயாராக உள்ளது.

சந்திரயான் 3
1/6

நிலவின் தென்துருவத்தை ஆராயும் நோக்கில் கடந்த மாதம் 14ம் தேதி சந்திரயான் 3 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது.
2/6

இவ்விண்கலம் 39 நாட்கள் பயணம் செய்து நிலவை நெருங்கியுள்ள அந்த விண்கலத்தின் விக்ரம் லேண்டர், நிலவின் மேற்பரப்பில் தரையிறங்க தயாராக உள்ளது. (Photo Credits : ISRO Website)
3/6

நிலவிலிருந்து குறைந்தபட்ச தூரமாக 25 கிலோ மீட்டர் தொலைவிலும், அதிகபட்சமாக 134 கிலோ மீட்டர் தொலைவிலும் தற்போது லேண்டர் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. (Photo Credits : ISRO Website)
4/6

நாளை மாலை 6.04 மணிக்கு லேண்டரை நிலவின் மேற்பரப்பில் தரையிறக்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இதற்கு இரண்டு மணி நேரம் முன்பாக சோதனை செய்யப்படும் அப்போது சூழல் சரியாக இருந்தால் நிலவின் மேற்பரப்பில் மென்மையாக தரையிறக்கம் செயல்படுத்தப்படும்.
5/6

சூழல் சாதகமாக இல்லை எனத் தோன்றினால், ஆகஸ்ட் 27-ம் தேதி சந்திரனில் லேண்டர் தரையிறக்கப்படும் என இஸ்ரோ தரப்பில் கூறப்படுகிறது.
6/6

இதனிடையே லூனா-25 என்ற விண்கலத்தை ரஷ்யா 47 ஆண்டுகள் கழித்து நிலவுக்கு ஆகஸ்ட் 11ஆம் தேதி ஆய்விற்கு அனுப்பியது. அதையடுத்து ஆகஸ்ட் 21ம் தேதி நிலவின் தென் துருவத்தில் தரையிறக்கும் போது தொடர்பை இழந்து நொறுங்கி சிதறியது குறிப்பிடத்தக்கது.
Published at : 22 Aug 2023 04:14 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
பொழுதுபோக்கு
பொழுதுபோக்கு
இந்தியா
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion