மேலும் அறிய
Toor Dal Rasam : வீடு மணக்க மணக்க துவரம் பருப்பு ரசம்.. செய்முறை இதோ!
Toor Dal Rasam : வீட்டில் எப்போதும் தக்காளி ரசம் செய்து போர் அடித்து விட்டதா ? அப்போ இந்த துவரம் பருப்பு ரசம் செய்து பாருங்க சுவை அற்புதமாக இருக்கும்.

துவரம் பருப்பு ரசம்
1/6

தேவையான பொருட்கள்: துவரம் பருப்பு - 1/2 கப், தக்காளி - 2 நறுக்கியது , பச்சை மிளகாய் - 3 நறுக்கியது , இஞ்சி நறுக்கியது , மஞ்சள்தூள் - 1/4 தேக்கரண்டி , கல் உப்பு - 1 தேக்கரண்டி , தண்ணீர் - 1 1/2 கப், எலுமிச்சைபழச்சாறு, கொத்தமல்லி இலை ,நெய் - 1 மேசைக்கரண்டி, உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி, கடலை பருப்பு - 1 தேக்கரண்டி, கடுகு - 1/2 தேக்கரண்டி, சீரகம் - 1/2 தேக்கரண்டி, காய்ந்த மிளகாய் - 3 , பெருங்காய தூள் - 1/4 தேக்கரண்டி, கறிவேப்பிலை.
2/6

செய்முறை: முதலில் துவரம் பருப்பை ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். அதன் பிறகு பிரஷர் குக்கரில் ஊறவைத்த பருப்பு, தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி, மஞ்சள் தூள் மற்றும் கல் உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
3/6

அடுத்தது பருப்பு முழுகும் அளவிற்கு தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி வைத்து அடுப்பை மிதமான தீயில் வைத்து நான்கு விசில் வரும் வரை வேகவிடவும்.
4/6

அடுத்தது கடாயை நெய் ஊற்றி சூடானதும், உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு , கடுகு, சீரகம் சேர்த்து வதக்கவும்.
5/6

கடுகு பொரிந்த பிறகு, காய்ந்த மிளகாய், பெருங்காயம் மற்றும் கறிவேப்பிலையை சேர்த்து, அடுப்பிலிருந்து இறக்கி ரசத்தில் சேர்த்துவிடவும்.
6/6

கடைசியாக எலுமிச்சை பழச்சாறு மற்றும் நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து கலக்கினால் சுவையான துவரம் பருப்பு ரசம் தயார்
Published at : 02 Aug 2024 11:39 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
சென்னை
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion