மேலும் அறிய
Orange Phirni Recipe: பக்ரீத்துக்கு சூப்பரான ஆரஞ்சு பிர்னி செய்து அசத்துங்க..! ரெசிபி இதோ..!
புதிய சுவை நிறைந்த ஆரஞ்சு பிர்னியை செய்து உங்கள் பெருநாளை கூடுதல் சிறப்பானதாக மாற்றுங்கள்!

ஆரஞ்சு பிர்னி
1/6

இந்த பக்ரீத்க்கு என்ன ஸ்வீட் செய்யலாம் என்று யோசிக்கிரீர்களா?..இதோ புதிய, சுவை நிறைந்த ஆரஞ்சு பிர்னியை செய்து உங்கள் பெருநாளை கூடுதல் சிறப்பானதாக மாற்றுங்கள்!
2/6

தேவையான பொருட்கள்: பாஸ்மதி அரிசி - 1/2 கப், ஆரஞ்சு - 2, காய்ச்சிய பால் - 1 லிட்டர், சர்க்கரை - 3/4 கப், ஏலக்காய் தூள் - 1 தேக்கரண்டி, குங்குமப்பூ, ஆரஞ்சு தோல், பிஸ்தா நறுக்கியது, பாதாம் நறுக்கியது.
3/6

செய்முறை: முதலில் பாஸ்மதி அரிசியை நன்கு கழுவி 1 மணி நேரம் ஊறவைக்கவும். ஊறிய அரிசியை நன்கு வடிகட்டி, மிக்ஸியில் போட்டு கொர கொரப்பாக அரைக்கவும்.
4/6

கடாயில் பாலை சூடாக்கி, அரைத்த அரிசியை போட்டு வேகவைக்கவும். அரிசி நன்கு வெந்ததும், இதில் சர்க்கரை சேர்த்து கிளறவும். பின் இதில் ஏலக்காய் தூள், குங்கும பூ, சேர்த்து கிளறவும்.
5/6

பிறகு அடுப்பை அணைத்து , பிர்னியை நன்கு ஆறவிடவும். பிர்னி நன்கு ஆறியபின், இதில் ஆரஞ்சு தோலை துருவி சேர்க்கவும்.
6/6

அடுத்து இதில் ஆரஞ்சு ஜூஸ் ஊற்றி கிளறவும். இறுதியாக இதில் நறுக்கிய பாதாம், நறுக்கிய பிஸ்தா தூவி பரிமாறவும்.
Published at : 27 Jun 2023 06:05 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
கல்வி
இந்தியா
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion