மேலும் அறிய
Instant Carrot Dosa : இன்ஸ்டண்ட் கேரட் தோசை.. இந்த மாதிரி செய்து அசத்துங்க!
Instant Carrot Dosa Recipe : தோசை மாவு இல்லையென்றாலும், கேரட்டை பயன்படுத்தி சூப்பரான தோசை செய்யலாம்.
இன்ஸ்டண்ட் கேரட் தோசை
1/6

வீட்டில் தோசை மாவு இல்லையென்றால் கவலைப்பட வேண்டாம். வீட்டில் உள்ள சில பொருட்களை வைத்து ஆரோக்கியமான கேரட் தோசை செய்யலாம். வாங்க இந்த தோசையை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
2/6

ஒரு மிக்ஸி ஜாரில் ஒரு கப் ரவை சேர்க்கவும், இதனுடன் துருவிய முக்கால் கப் தேங்காய், 5 சின்ன வெங்காயம், ஒரு ஸ்பூன் சீரகம், தேவையான அளவு உப்பு, ரவையை அளந்த கப்பால் ஒரு கப் தண்ணீர் சேர்க்கவும்.
3/6

இதை நன்றாக அரைத்து எடுத்து, ஒரு பாத்திரத்திற்கு மாற்றிக் கொள்ள வேண்டும். இதை தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்க்கலாம்.
4/6

இந்த மாவை மூடி போட்டு அரை மணி நேரம் ஊற விடவும். இப்போது ரவை நன்றாக ஊறி மாவு சற்று கெட்டி பதத்திற்கு மாறி இருக்கும். உங்களுக்கு வேண்டுமென்றால் மேலும் சிறிது தண்ணீர் சேர்த்து மாவை கரைத்துக் கொள்ளலாம்.
5/6

இதை வழக்கம் போல் தோசை கல்லில் தோசையாக வார்த்து, தோசையின் மீது துருவிய கேரட்டை சேர்த்து, திருப்பி போட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். இதை நெய் ஊற்றி செய்தால் நல்ல வாசனையாக இருக்கும்.
6/6

அவ்வளவு தான் சுவையான இன்ஸ்டண்ட் கேரட் தோசை தயார். இதை கார சட்னி அல்லது தேங்காய் சட்னியுடன் வைத்து சாப்பிடலாம். இதன் சுவை அபாரமாக இருக்கும்.
Published at : 10 Apr 2024 05:40 PM (IST)
Tags :
Dinner Recipeமேலும் படிக்க
Advertisement
Advertisement




















