மேலும் அறிய
Protein Balls Recipe : ' சின்ன உருண்டை..பெத்த ப்ரோடீன்..’ ஒருநாளுக்கு தேவையான மொத்த ப்ரோடீனும் இதில் இருக்கு!
Protein Balls Recipe : தினமும் உங்கள் ப்ரோடீன் தேவையை பூர்த்தி செய்ய இந்த ப்ரோடீன் பால்ஸை வீட்டில் செய்து உண்ணுங்கள்.

ப்ரோடீன் பால்ஸ்
1/6

ஜிம் செல்பவர்கள் கவனத்திற்கு..! தினமும் உங்கள் ப்ரோடீன் தேவையை பூர்த்தி செய்ய சிக்கன், மட்டன், முட்டை என்று சாப்பிட்டு சலித்து விட்டதா..? கவலை வேண்டாம்..இதோ இந்த ப்ரோடீன் பால்ஸை வீட்டில் செய்து உண்ணுங்கள்.
2/6

தேவையான பொருட்கள் : 3 டீஸ்பூன் வேர்க்கடலை, 1 கப் எள், ¾ கப் ஆளிவிதைகள், 300 கிராம் பேரீச்சம்பழம், ¾ கப் பாதாம், 2 டீஸ்பூன் பிஸ்தா நறுக்கியது, 2 டீஸ்பூன் பூசணி விதைகள், 2 டீஸ்பூன் சூரியகாந்தி விதைகள், 2 டீஸ்பூன் சியா விதைகள், ½ தேக்கரண்டி ஏலக்காய் தூள்.
3/6

செய்முறை : முதலில் ஒரு பேனில் 3 டீஸ்பூன் வேர்க்கடலை, 1 கப் எள், ¾ கப் ஆளிவிதைகள் சேர்த்து மொறு மொறுவென அரைத்து கொள்ளவும். அதன் பிறகு இதனை நன்றாக ஆற வைத்து கொர கொரப்பாக அரைத்து எடுத்து கொள்ளுங்கள்.
4/6

அதன் பின் 300 கிராம் பேரிட்சம்பழத்தை மிக்ஸியில் தண்ணீர் சேர்க்காமல் மென்மையாக அரைத்து ஏற்கனவே அரைத்து வைத்த பொடியுடன் சேர்த்து கலந்து கொள்ளவும்.
5/6

மீண்டும் ஒரு பேன் எடுத்து அதில் ¾ கப் பாதாம், 2 டீஸ்பூன் பிஸ்தா நறுக்கியது, 2 டீஸ்பூன் பூசணி விதைகள், 2 டீஸ்பூன் சூரியகாந்தி விதைகள், 2 டீஸ்பூன் சியா விதைகள் சேர்த்து மிதமான சூட்டில் வறுத்து எடுத்து கொள்ளவும்.
6/6

தற்போது இந்த வறுத்த விதைகளுடன் ஏலக்காய் தூள் சேர்த்து ஏற்கனவே அரைத்து வைத்திருந்த பொடியுடன் சேர்த்து பிசைந்து உருண்டையாக பிடித்து கொள்ளுங்கள் அவ்வளவு தான் சுவையான ப்ரோடீன் பால்ஸ் தயார்.
Published at : 11 Aug 2023 05:40 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
க்ரைம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion