மேலும் அறிய
Chapathi Noodles Recipe : சப்பாத்தி மீந்து போச்சா? அப்போ குப்பையில் போடாமல் இதை செய்து பாருங்க!
Chapathi Noodles Recipe : மீந்து போன சப்பாத்தியை வைத்து சுவையான சப்பாத்தி நூடுல்ஸ் செய்யலாம்.

சப்பாத்தி நூடுல்ஸ்
1/6

தேவையான பொருட்கள் : சப்பாத்தி - 4, எண்ணெய் - 1 மேசைக்கரண்டி, கேரட் - 1 கப் துருவியது, பச்சை குடைமிளகாய் - 1/2 மெல்லியதாக நறுக்கியது, முட்டைகோஸ் - 1/2 கப் மெல்லியதாக நறுக்கியது, வெங்காயம் - 1 நறுக்கியது, இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
2/6

தேவையான பொருட்கள் : இஞ்சி - 1 துண்டு பொடியாக நறுக்கியது, பூண்டு - 4 பற்கள் மெல்லியதாக நறுக்கியது, உப்பு, மிளகு - 1 தேக்கரண்டி, சோயா சாஸ் - 1 தேக்கரண்டி, டொமேட்டோ கெட்சப் - 2 தேக்கரண்டி, கொத்தமல்லி இலை
3/6

முன்கூட்டியே செய்த சப்பாத்தி அல்லது மீதமுள்ள சப்பாத்தியை சமையலறை கத்தரிக்கோலைப் பயன்படுத்தி, நூடுல்ஸ் போல வெட்டி கொள்ளவும்.
4/6

ஒரு அகலமான கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சை குடைமிளகாய், முட்டைக்கோஸ் சேர்த்து வதக்கவும்.
5/6

அடுத்து இஞ்சி பூண்டு விழுது, கேரட் சேர்த்து கலக்கவும். இப்போது சோயா சாஸ், தக்காளி கெட்சப், உப்பு, மிளகு தூள் சேர்த்து நன்கு கலந்து விடவும்.
6/6

பிறகு நூடுல்ஸ் போல வெட்டிய சப்பாத்தியை சேர்த்து நன்கு கலந்து விடவும். சப்பாத்தி நூடுல்ஸ் தயார். உங்களுக்கு வேண்டுமென்றால், மஷ்ரூம், முட்டை, சிக்கன், உள்ளிட்டவற்றில் ஏதேனும் ஒன்றை சேர்த்துக்கொள்ளலாம். இதனுடன் சால்னா அல்லது குருமா ஊற்றி சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.
Published at : 06 Feb 2024 01:03 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
கிரிக்கெட்
இந்தியா
கல்வி
Advertisement
Advertisement