பேச்சுவாக்குல சம்பள விவரத்தை வெளியே சொன்ன பெண்! வேலையை விட்டு நீக்கிய நிறுவனம்!
அமெரிக்காவை பொறுத்தவரை, அங்கு அமலில் உள்ள தேசிய தொழிலாளர் உறவுகள் சட்டத்தின் கீழ், ஊழியர்கள் தங்கள் சக ஊழியர்களுடன் தங்கள் சம்பள விவரம் குறித்து பேச அனுமதிக்கப்படுகிறார்கள்.
அமெரிக்காவில் பெண் ஒருவர் தனது சம்பள விவரத்தை வெளிப்படையாக சொன்னதால் பணி நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக ஒரு நிறுவனத்தில் புதிதாக வேலைக்கு சேரும் போது உங்களுடைய சம்பள விவரத்தை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளக்கூடாது என மேலிட அதிகாரிகள் தெரிவிப்பது வழக்கம். காரணம் அதே இடத்தில் பணிபுரியும் மற்ற பணியாளர்களின் சம்பள விவரங்கள் ஏற, இறங்க இருப்பதும், சம்பள உயர்வு கோரிக்கை போன்ற காரணங்களால் அதை படுசீக்ரெட் ஆக வைக்க சொல்வார்கள்.
காஞ்சிபுரம்: தனியார் பள்ளி மாணவன் தற்கொலை முயற்சியா ? காவல் கண்காணிப்பாளர் விசாரணை
இதனிடையே அமெரிக்காவில் பெண் ஒருவர் தனது சம்பள விவரத்தை வெளிப்படையாக சொன்னதால் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அந்நாட்டின் டென்வரைச் சேர்ந்த லெக்ஸி லார்சன் என்ற பெண் கடந்த மாதம் தான் முன்பு வேலைப் பார்த்த அக்கவுண்டிங் பணியில் இருந்து டெக்னிக்கல் சார்ந்த பணிக்கு மாறினார். அப்போது தனது வருமானம் 70 ஆயிரம் டாலரில் இருந்து 90 ஆயிரம் டாலர் வரை உயர்ந்ததை வெளிப்படுத்தும் வகையில் ஒன்றை டிக்டாக்கில் வீடியோவாக பதிவிட்டதாக கூறப்படுகிறது.
இந்த வீடியோவை அவர் பணிபுரியும் நிறுவனத்தின் உரிமையாளர் பார்த்ததால் தான் பணி நீக்கம் செய்யப்பட்டதாக லெக்ஸி லார்சன் கூறியுள்ளார். அமெரிக்காவை பொறுத்தவரை, அங்கு அமலில் உள்ள தேசிய தொழிலாளர் உறவுகள் சட்டத்தின் கீழ், ஊழியர்கள் தங்கள் சக ஊழியர்களுடன் தங்கள் சம்பள விவரம் குறித்து பேச அனுமதிக்கப்படுகிறார்கள். குறிப்பாக சம்பளம் தொடர்பான விவாதத்தை தடை செய்யும் கொள்கைகள் சட்டவிரோதமானது என்று தொழிலாளர் குழுக்கள் கூறி வருகிறது.
ஆனால் சில நிறுவனங்கள் சமூக வலைத்தளங்களில் சம்பளம் பற்றி பேச கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இரண்டு வாரங்கள் மட்டுமே பணிபுரிந்த லெக்ஸி லார்சன் பணிநீக்கம் செய்யப்பட்டது கடுமையான நடவடிக்கை என அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். மேலும் லார்சன் தனது முதலாளிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கலாம் என கூறப்படுகிறது. இந்த விவகாரம் அமெரிக்காவில் பணிபுரியும் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்