எனாமல் இல்லை.. கண்ணாடி போல நொறுங்கும் பல்! அறுவை சிகிச்சை வரை சென்ற பெண்ணின் பல் பிரச்னை!
”அறுவை சிகிச்சை முடிந்து வந்து என்னைப் பார்த்தபோது நான் சிரித்துக்கொண்டே அழுதேன், நான் அதிர்ச்சியில் உறைந்திருந்தேன். இறுதியாக இது நடந்துவிட்டது" என்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
குழந்தைப் பருவம் முதல் எனாமல் இன்றி Transparent Teeth எனும் உடைந்த கண்ணாடி போன்ற பற்களுடன் வலம் வந்த பெண், அறுவை சிகிச்சை மூலம் தன் பற்களை மாற்றியமைத்து இணையத்தில் பேசுபொருளாகியுள்ளார்.
கண்ணாடி போன்று உடையும் பற்கள்
அமெரிக்காவின் ஓக்லஹோமாவைச் சேர்ந்த மிஹாலி ஒலிவியா கிரேஸ் ஷ்லேகல் எனும் 19 வயது பெண் தன் சிறு வயது தொடங்கியே பல் பிரச்சனைகளால் அவதிப்பட்டு வந்துள்ளார். அவருடைய பற்கள் கிட்டத்தட்ட முற்றிலும் எனாமல் இன்றி கண்ணாடி போன்று உடையும் நிலையில் இருந்து வந்துள்ளது.
”அப்போதிருந்து, நான் இந்தப் பற்களையே பெற்று வருகிறேன். அவை மிகவும் உடையக்கூடியவையாக இருந்தன. என் பற்களின் வழியாக மற்றொருபக்கம் இருப்பதைப் பார்க்கலாம்” என மிஹாலி தெரிவித்தார்.
#HealthNewsFlash: Woman born with transparent teeth 'finally feels beautiful' after huge dental surgery.... | https://t.co/x4O18HwsW4 pic.twitter.com/e3Jj2Yus3P
— STAYWELLWORLD (@staywellworld) September 8, 2022
தொடர்ந்து காலப்போக்கில் மிஹாலியின் பற்கள் வலுவிழந்து சரியாக சாப்பிட முடியாமல் தவித்து வந்துள்ளார். மேலும், மிஹாலி ‘சுறா பல்’ என்ற அடைமொழியுடன் கேலி செய்யப்பட்டும் வந்தார்.
மோசமாக உணரவைத்த மக்கள்
"நான் சிரிக்கும்போதெல்லாம் மக்கள் மோசமான ரியாக்ஷனைத் தருவார்கள். எனக்கு வயதாக வயதாக இதை நான் அதிகம் கவனிக்கத் தொடங்கினேன். ஒருகட்டத்தில் நான் சிரிப்பதையும் சாப்பிடுவதையும் கூட குறைத்துவிட்டேன்” என வேதனைத் தெரிவித்தார்.
தனது 13ஆம் வயதில் செயற்கைப் பற்களைப் பயன்படுத்த அவர் பரிந்துரைக்கப்பட்ட நிலையில், இவரது சிக்கலான வழக்கை கையாள டென்டிஸ்டுகளுக்கு கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் ஆகியுள்ளது.
எனக்கு ஆஸ்டியோஜெனெசிஸ் இம்பர்ஃபெக்டா எனப்படும் உடையக்கூடிய எலும்பு நோய் இருப்பதால், என் தாடை உடைந்து விடுமோ என மருத்துவர்கள் அஞ்சினார்கள். இதுவரை என் 117 எலும்புகள் உடைந்துள்ளன. 36 அறுவை சிகிச்சைகள், கால் முன்னெலும்புகள் மற்றும் தொடையில் ராடுகள் பொருத்தப்பட்டன.
இது ஒரு பயங்கரமான நேரம், ஆனால் எனது நிலையைக் கையாளும் சிறந்த அற்புதமான குழுவைக் கண்டுபிடித்தது மகிழ்ச்சியை அளித்துள்ளது" என மிஹாலி தெரிவித்துள்ளார்.
அழகாக உணர்கிறேன்!
முன்னதாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பற்களை மாற்றியமைக்கும் நேரடி பல் அறுவை சிகிச்சையை இவர் செய்து கொண்டுள்ளார். "அறுவை சிகிச்சை முடிந்து வந்து என்னைப் பார்த்தபோது நான் சிரித்துக்கொண்டே அழுதேன், நான் அதிர்ச்சியில் உறைந்திருந்தேன். இறுதியாக இது நடந்துவிட்டது" என்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
இந்த அறுவை சிகிச்சைக்கு காப்பீட்டுக்குப் பிறகு 9,500 டாலர்கள் செலவாகியுள்ளன. "மக்கள் என்னை இப்போது எதிர்கொள்வதில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. நான் சிரிக்கும்போது மக்கள் மோசமாக என்னை உணர வைப்பதில்லை, என் பற்களில் என்ன பிரச்சனை என்று என்னிடம் கேட்பதில்லை.
"புதிய பல்வரிசை எனக்கு பல வழிகளில் பயனளித்துள்ளது. முன்பு சாப்பிட முடியாத பொருள்களையும் என்னால் இப்போது சாப்பிட முடிகிறது. ஒருவழியாக நான் சிரிக்கும்போது அழகாக உணர முடிகிறது"
என மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.