யாரிந்த அசோக் எல்லுசாமி? எலன் மஸ்கின் டெஸ்லா ஆட்டோ பைலட் குழுவின் தலைவரான பாதை!
சென்னை கிண்டியில் உள்ள மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப பொறியியல் கல்லூரியில் இளநிலைப் பட்டமும் அமெரிக்காவில் ரோபோ தொழில்நுட்ப படிப்பும் படித்தவர் அசோக் எல்லுசாமி என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்காவில் வாழும் தமிழர் அசோக் எல்லுசாமி என்பவர் டெஸ்லா நிறுவனத்தின் ஆட்டோ பைலட் வடிவமைப்பு குழுவுக்கு தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த தகவலை எலான் மஸ்க் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் மூலம் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே கூகுள் உள்பட பல நிறுவனங்களில் தமிழர்கள் முக்கிய பொறுப்பில் இருந்து வரும் நிலையில் தற்போது உலகின் நம்பர் ஒன் கோடீஸ்வரரான எலான் மஸ்க் அவர்களின் டெஸ்லா நிறுவனத்தின் தமிழர் ஒருவர் முக்கிய பதவியில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Ashok was the first person recruited from my tweet saying that Tesla is starting an Autopilot team!
— Elon Musk (@elonmusk) December 29, 2021
சென்னை கிண்டியில் உள்ள மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப பொறியியல் கல்லூரியில் இளநிலை பட்டமும் அமெரிக்காவில் ரோபோ தொழில்நுட்ப படிப்பும் படித்தவர் அசோக் எல்லுசாமி என்பது குறிப்பிடத்தக்கது. டெஸ்லாவில் சேருவதற்கு முன்பு, அசோக் எல்லுஸ்வாமி வோக்ஸ்வேகன் எலக்ட்ரானிக் ரிசர்ச் லேப் மற்றும் வாப்கோ வாகனக் கட்டுப்பாட்டு அமைப்பில் இருந்தார். அசோக் எல்லுஸ்வாமியின் CMU பேராசிரியரான ஜான் டாலனின் லிங்க்ட்இன் ஒப்புதலின்படி, அவர் சிறந்த மாணவர்களில் ஒருவராக இருந்தார் என்றும், பலதரப்பட்ட தலைப்புகளைக் கற்றுக்கொள்வதில் முனைப்பு காட்டினார் என்றும் தெரிகிறது.
Ramping up the Autopilot software team at Tesla to achieve generalized full autonomy. If interested, contact autopilot@teslamotors.com.
— Elon Musk (@elonmusk) November 20, 2015
டெஸ்லா ஹார்ட்கோர் செயற்கை நுண்ணறிவு (AI) பொறியாளர்களைத் தேடுகிறது என்று எலன் மஸ்க் 2015-இல் ட்வீட் செய்தார். இது மக்களின் வாழ்க்கையை நேரடியாகப் பாதிக்கும் சிக்கல்களைத் தீர்ப்பதில் அக்கறை கொண்டுள்ளது. வேலை விண்ணப்பம் எளிமையாக இருக்கும் என்றும், ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் பெயர், மின்னஞ்சல், மென்பொருள், வன்பொருள் அல்லது AI ஆகியவற்றில் செய்த சிறப்பம்சம் உடைய வேலைகள் இருந்தால் விண்ணப்பத்தில் நிரப்புமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர். மற்றும் அவர்களின் விண்ணப்பத்தை PDF வடிவத்தில் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது. 2014-இன் நேர்காணலில், மஸ்க் ஒரு மதிப்புமிக்க பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவரை தேடுவதற்கு பதிலாக, தரமான பணியாளரிடம் "தனிச்சிறப்புடய திறனுக்கான சான்றுகளை" தேடுவதாகக் கூறினார்.
"கல்லூரிப் பட்டம் நிரப்ப வேண்டிய அவசியமில்லை, அல்லது உயர்நிலைப்பள்ளி மதிப்பெண்கள் கூட தேவையில்லை" என்று மஸ்க் ஜெர்மன் வாகன வெளியீட்டு நிறுவனமான ஆட்டோ பில்டிற்கு அளித்த பேட்டியின்போது தனது பணியமர்த்தல் விருப்பங்களைப் பற்றி மேலும் விரிவாகக் கூறியிருந்தார். அப்போது வேலைக்கு சேர்ந்தவர்தான் அசோக் எல்லுசாமி, தற்போது டெஸ்லா ஆட்டோபைலட் தலைவர் ஆகி இருக்கிறார்.