ஒருவேளை இறந்துட்டா.? அதுவரை தம்பதியா வாழணும்.. உக்ரைன் போருக்கு நடுவே நெகிழ்ச்சி திருமணம்
போரின் காரணமாக தற்போது முன்னரே திருமணம் செய்துகொண்டுள்ளனர். "நாங்கள் ஒருவேளை இறந்துவிடலாம்..அதற்கெல்லாம் முன்பு நாங்கள் இருவரும் கணவன் மனைவியாக ஒன்றாக இருக்க விரும்பினோம்," என்று யரினா கூறியுள்ளார்.

உக்ரைன் தலைநகர் நகர சபையில் துணைப் பணியாளராக பணிபுரியும் யரினா அரீவா என்ற 21 வயது பெண், ரஷ்யாவுடனான உக்ரைன் போரின் முதல் நாளில் தலைநகரின் வான்வழி தாக்குதல் மற்றும் சைரன் ஒலிக்கு மத்தியில் திருமணம் செய்து கொண்டுள்ளார். யரினா மற்றும் ஸ்வட்லேவ் ஃப்ர்சின் இருவருக்கும் முதலில் மே 6ம் தேதி திருமணம் செய்ய திட்டமிடப்பட்டது. அதனால் போரின் காரணமாக தற்போது முன்னரே திருமணம் செய்துகொண்டுள்ளனர். "நாங்கள் ஒருவேளை இறந்துவிடலாம்..அதற்கெல்லாம் முன்பு நாங்கள் இருவரும் கணவன் மனைவியாக ஒன்றாக இருக்க விரும்பினோம்," என்று யரினா கூறியுள்ளார்.
இது குறித்து பதிவு வெளியிட்டுள்ள திருமணத்தை நடத்தி வைத்த தேவாலயம், ‘உக்ரைன் தொடர்ந்து போர் பயத்தை எதிர்கொண்டு வருகிறது. இந்த சமயத்தில் இறைவன் மீது உங்கள் நம்பிக்கையை வைப்பது முக்கியம். இருண்ட காலங்களில் கூட மகிழ்ச்சியடைய காரணங்கள் பல உண்டு. அந்த மகிழ்ச்சிதான் இந்த திருமணம் எனவே, உக்ரைனின் உள்ளூர் ஆர்த்தடாக்ஸ் தேவாலயத்தைச் சார்ந்த அத்தனைக் குடும்பங்களும் யரினா மற்றும் ஸ்வயடோஸ்லாவ் ஆகிய இருவரையும் வாழ்த்துகிறோம். கோவிலின் நுழைவாயிலில், கோயிலின் நுழைவு வாயிலில் எதிரொலிக்கும் குண்டுச் சத்தங்களுக்கு எங்கள் புறாக்களின் கர்ஜனைதான் பதில்.
இந்த இளம் ஜோடியை கடவுள் ஆசீர்வதிக்கட்டும். நாம் தொடர்ந்து தைரியமாக இருந்து, நம் நாட்டிற்காகவும், நம் மக்களுக்காகவும், நமது பாதுகாவலர்களுக்காகவும் ஜெபிப்போம்’ எனப் பதிவிட்டுள்ளனர்.
இதற்கிடையே,
உக்ரைன் ராணுவம் சண்டையிடுவதை நிறுத்தினால் பேச்சுவார்த்தைக்குத் தயார் என்று ரஷ்யா திடீர் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பை ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கி லாவ்ரோவ் வெளியிட்டுள்ளார்.
உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுப்பதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் நேற்று அறிவித்தார். அவரின் அறிவிப்பைத் தொடர்ந்து உக்ரைன் தலைநகர் மீது, மற்ற சில பகுதிகளிலும் ரஷ்யா தாக்குதல் நடத்தியது ரஷ்யாவின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதனால் ஏராளமான சேதம் ஏற்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார். இந்தியா இந்த விவகாரத்தில் நடுநிலை வகித்து வருகிறது.
உக்ரைன் மீது குண்டு மழை பொழியும் வீடியோக்களும், அதிரும் கட்டிடங்களின் வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும், ரஷ்ய படையெடுப்பில் இதுவரை 10 இராணுவ அதிகாரிகள் உட்பட 137 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், 316 பேர் காயமடைந்துள்ளதாகவும் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்தார்.
உக்ரைன் நடத்திய பாதுகாப்புத் தாக்குதலில் 800 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. மேலும், 30க்கும் மேற்பட்ட ரஷ்ய டாங்கிகள், ஏழு ரஷ்ய விமானங்கள் மற்றும் ஆறு ஹெலிகாப்டர்கள் அழிக்கப்பட்டு விட்டதாகவும் தகவல் தெரிவித்துள்ளது.
நேற்றைய தாக்குதலை தொடர்ந்து இன்று ரஷ்யா, உக்ரைனில் 2வது நாள் தாக்குதலை நடத்தி வருகிறது. இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.
இந்நிலையில் உக்ரைன் ராணுவம் சண்டையிடுவதை நிறுத்தினால் பேச்சுவார்த்தைக்குத் தயார் என்று ரஷ்யா திடீர் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பை ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கி லாவ்ரோவ் வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்துப் பேசிய அவர், ''அடக்குமுறையில் இருந்து உக்ரைனை மீட்பதே எங்களின் நோக்கம். உக்ரைன் ராணுவம் சண்டையிடுவதை நிறுத்தினால் பேச்சுவார்த்தைக்குத் தயார்'' என்று செர்கி லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.





















