காரை திருட வந்த நபர்.. ஹீரோவாகி மாறி பெண்ணையும் குழந்தையையும் காப்பாற்றிய ஹோட்டல் பணியாளர்.. வைரல் வீடியோ
அமெரிக்காவில் உணவக ஊழியர் ஒருவர் காரை திருட முயன்ற திருடனிடம் இருந்து ஒரு பெண்ணையும் அவரது குழந்தையையும் காப்பாற்றி ஹீரோவாகியுள்ளார்.
அமெரிக்காவில் உணவக ஊழியர் ஒருவர் காரை திருட முயன்ற திருடனிடம் இருந்து ஒரு பெண்ணையும் அவரது குழந்தையையும் காப்பாற்றி ஹீரோவாகியுள்ளார். புளோரிடாவில் உள்ள ஃபோர்ட் வால்டன் கடற்கரையில் புதன்கிழமை அன்று இந்த சம்பவம் நடந்துள்ளது. ஒகலூசா மாவட்ட ஷெரிப் அலுவலகம் இந்த தகவலை ட்விட்டரில் பகிர்ந்துள்ளது.
In reference to the FWB Chick-fil-A employee who ran to help a woman with a baby who was being carjacked, we want to say a sincere thank you to Ms. Kelner for providing video of a portion of the encounter. (see prior post). A major shout-out to this young man for his courage! pic.twitter.com/2Lcwe46azv
— OkaloosaSheriff (@OCSOALERTS) September 14, 2022
உணவக ஊழியர் திருடனுடன் சண்டையிடுவதையும், அவரைக் கீழே இழுத்து தள்ளுவதையும் மாவட்ட ஷெரிப் வெளியிட்ட பதிவில் காணலாம். அந்த ஒரு நிமிட வீடியோவில், திருடன் காரை நோக்கிச் செல்வதையும் ஊழியர் அவரை தடுத்து நிறுத்துவதையும் அந்தப் பெண் தன் குழந்தையைப் பிடித்துக் கொண்டிருப்பதையும் காணலாம். அந்த பெண் உதவி கேட்டு அலறுவது வீடியோவில் பதிவாகியுள்ளது.
இந்த வீடியோ அருகில் இருந்த வாகனத்தில் இருந்து எடுக்கப்பட்டது. குற்றம் நடந்த இடத்தில் திடீரென மக்கள் திரண்டனர். இதையடுத்து, திருடன் பிடிபட்டான்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி 7.9 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை ஈர்த்துள்ளது. இது 34,000 க்கும் மேற்பட்ட லைக்குகளையும், 5,000 க்கும் மேற்பட்ட ரீ-ட்வீட்களையும் பெற்றுள்ளது. உணவக பணியாளரின் துணிச்சலைப் ட்விட்டர் பயனர்கள் பாராட்டியுள்ளனர்.
வீடியோ குறித்து பயனர் குறிப்பிடுகையில், "நூறு முறை சொல்வேன்: Chic Fil a உணவகம், சிறந்த வாடிக்கையாளர் சேவையைக் கொண்டுள்ளது". இன்னொரு பயனர், "ஆஹா!!! என்ன ஹீரோ" எனக் குறிப்பிட்டுள்ளார்.
காரை திருட முயன்ற அந்த நபர் DeFuniak Springs-இன் Wilkliam கிளையில் பணியாற்றி வருகிறார். சிக்-ஃபில்-ஏ-உணவகத்திற்கு வெளியே இருந்த பெண்ணிடம் இருந்து கார் சாவியைப் பிடுங்க முயற்சித்துள்ளார். ஆயுதத்துடன் வந்த திருடனை பார்த்து பெண் சத்தம் போட்டார். இதையடுத்து, ஊழியர் உதவிக்கு ஓடினார்.
இந்த சம்பவத்திற்குப் பிறகு, சிக்-ஃபில்-ஏ உணவகத்தின் பேஸ்புக் பக்கத்தில் பணியாளரின் படத்துடன் ஒரு பதிவு வெளியிடப்பட்டுள்ளது. "இவர் தான் ஹீரோ! இது மைக்கேல் கார்டன்! சிக்-ஃபில்-ஏ-வில் எங்கள் பணி சேவை செய்வதாகும். இன்று, மைக்கேல் அதை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றுள்ளார்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.