Viral Video : கீ-போர்ட் வாசிக்கும் குதிரை! இசை மழையில் நனைய தயாரா? வைரல் வீடியோ!
அந்த வீடியோ தற்போது மில்லியன் கணக்கான பார்வையாளர்களை கடந்துள்ளது.
இசைக்கு மயங்காத ஜீவன் உண்டோ அப்படினு ஒரு பொன்மொழியை கேள்விப்பட்டுருப்பீங்க. அதை நிரூபிக்கும் விதமாக தற்போது இணையத்தில் வீடியோ ஒன்று வைரல் ஆகி வருகிறது. விலங்குகள் சில நேரங்களில் மனிதர்களை போலவே புத்திசாலியாக செயல்படும் . மனிதர்களை நேசிப்பதை தாண்டி , மனிதர்களுக்கு இருக்கும் அசாத்திய திறமைகளை விலங்குகளும் பெற்றிருக்கும் .குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் கிரிக்கெட் விளையாடுவது , நடனமாடுவது என பல வீடியோக்களை பார்த்திருக்கிறோம். அப்படிதான் இங்கு குதிரை ஒன்று தனது தனித்திறமையை வெளிப்படுத்தியுள்ளது.
வைரல் வீடியோ :
இணையத்தில் வெளியான வீடியோவின் அடிப்படையில் குதிரை ஒன்று தனித்துவமான பாணியில் பியானோ வாசித்துக்கொண்டிருக்கிறது. எலெக்ட்ரானிக் கீபோர்டில் மூக்கு மற்றும் வாயை பயன்படுத்தி , அந்த குதிரை க்யூட்டாக பியானோ வாசிப்பதை நெட்டிசன்கள் ரிபீட் மோடில் பார்த்துக்கொண்டிருக்கின்றனர். அந்த வீடியோ தற்போது மில்லியன் கணக்கான பார்வையாளர்களை கடந்துள்ளது. வீடியோ கிரியேச்சர் நேச்சர் என்ற கணக்கில், "அது அற்புதமான குதிரை" என்ற தலைப்புடன் பகிரப்பட்டுள்ளது.
வீடியோ :
That's amazing Horus.. pic.twitter.com/xTbVETpNQQ
— Creature Nature (@CreatureNature_) July 6, 2022
இதே போல மற்றுமொரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் கடற்கரை அருகே 24 அடி கப்பல் கப்பல் ஒன்று சென்று கொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டை இழந்து சுழலில் சிக்க நேர்ந்தது. செவ்வாய்கிழமை காலை நடந்த சம்பவத்தை நேரில் பார்த்த Fishing Vessel Finest Kind என்ற கப்பலின் கேப்டன் டானா பிளாக்மேன் இதை பார்த்து மார்ஷ்ஃபீல்ட் ஹார்பர்மாஸ்டர் அலுவலகத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். கப்பல் வட்டமிட்டு கொண்டிருப்பதை கவனித்த பின்னர் இரண்டு பேரை கடலில் இருந்து காப்பாற்றியதாகவும் கேப்டன் தெரிவித்தார். முன்னதாக, கடலில் சிக்கிய ஒருவர் தங்களை காப்பாற்றும்படி வெள்ளை நிற சட்டையை அசைத்து உதவி கேட்டுள்ளார். பின்னர் கடலோர காவல்துறையினர் இருவரை பத்திரமாக மீட்டுள்லனர்.கப்பலில் இருந்து வெளியே குதித்த இருவர் லைப் ஜாக்கெட்டை அணிந்திருக்கவில்லை என்றும் நல்வாய்ப்பாக அவர்கள் காயமடைவில்லை என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
2 people rescued after being ejected from boat out at sea! https://t.co/80jXkDFEPJ pic.twitter.com/52SN6AQv3j
— Marshfield Police Department (@Marshfield_PD) July 5, 2022
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்