watch video : நீங்க மட்டும்தான் ரெயின் கோட் போடுவீங்களா? - வைரலாகும் நாய்க்குட்டி வீடியோ!
இதே போலத்தான் மனிதர்கள் நடமாடும் இடத்தில் நாய் ஒன்று படுத்துக்கொண்டு இறந்ததை போன்று பாசாங்கு செய்கிறது.
இணையதளங்களில் சில வீடியோக்கள் நம்மை சிரிக்க வைக்கும் , சில வீடியோக்கள் அழவும் வைக்கும் , சில வீடியோக்கள் எரிச்சலடையவும் வைக்கும் ஆனால் எப்போதுமே ரசிக்க வைப்பதாக அமைகிறது விலங்குகள் செய்யும் குறும்புத்தனமான வீடியோக்கள் . அதிலும் வீட்டில் செல்ல பிராணிகளாக வளர்க்கப்படும் நாய்க்குட்டிகள் , பூனைக்குட்டிகள் என்றால் சொல்லவே வேண்டாம் . அப்படித்தான் இணையத்தில் ரெயின் கோட் அணிந்து செல்லும் நாய்க்குட்டி ஒன்று வைரலாகி வருகிறது.
நாய்க்குட்டியானது மஞ்சள் நிறத்தால் , அதற்காகவே செய்யப்பட்ட பிரத்யேக ரெயின் கோட்டில் வாக்கிங் போய்விட்டு வீட்டிற்கு வருவதை பார்க்கலாம் . வீட்டிற்குல் நுழையும் நய்க்குட்டியானது உடலை சிலிர்த்து தனது குடை ஆடையில் இருக்கும் நீரை வெளியேற்றுவதை பார்க்கும் பொழுது க்யூட்டாக இருக்கிறது. இந்த வீடியோவை ‘வாவ் சோ க்யூட்’ என நாய் பிரியர்கள் கொண்டாடி வருகின்றனர்.
View this post on Instagram
இதே போலத்தான் மனிதர்கள் நடமாடும் இடத்தில் நாய் ஒன்று படுத்துக்கொண்டு இறந்ததை போன்று பாசாங்கு செய்கிறது. இதனை கண்ட அவ்வழியாக சென்ற சிலர் இறந்துவிட்டதா என கேட்க , வீடியோ எடுத்தவர் இல்லை, இறந்து போல நடித்து என்னுடன் விளையாடுகிறது என்றார். இந்த வீடியோவும் பலரையும் கவர்ந்துள்ளது.
View this post on Instagram