Viral Video : "இந்தா செல்லம்.. கூச்சப்படாம சாப்பிடு” : முதலைக்கு ஸ்நாக்ஸா.. வைரலாகும் கெத்து பெண்..
வீடியோவில், மேடி என்ற ஊர்வன கையாளுபவர் தனது கைகளால் முதலைக்கு உணவளிப்பதைக் காணலாம்
டஜன் கணக்கான முதலைகளால் சூழப்பட்டிருப்பது பலருக்கு நரகத்தைப் போன்ற உணர்வை ஏற்படுத்தும். ஆனால் மேடி ஸ்டெபன் என்கிற பெண்ணுக்கோ அது அன்றாடம் நிகழும் செயல்களில் ஒன்று. அவர் அதை மிகவும் எளிதாக செய்கிறார், அது அவருக்கு பெரிய விஷயமில்லை என்பது போலதான் அண்மையில் வெளியான ஒரு வைரல் வீடியோ வழியாகத் தெரிய வருகிறது. இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் ரீல்களில் விலங்குகளை மீட்கும் ‘ஜேன் ஷாபிரோ’ என்பவர் பின்வரும் தலைப்புடன் பகிர்ந்துள்ளார்: “தொல்லை தரும் முதலைகளுக்கு மேடி சில உணவுகளை வழங்குகிறார்!” என அந்த தலைப்பு கூறுகிறது.
வீடியோவில், மேடி என்ற ஊர்வன கையாளுபவர் தனது கைகளால் முதலைக்கு உணவளிப்பதைக் காணலாம். இதற்கிடையில், அந்தப் பெண்ணை சுற்றி 30 முதலைகள் சூழ்ந்துள்ளன, அவை அவருக்கு அருகில் கூட்டமாக உள்ளன மற்றும் சாப்பிடுவதற்கு தங்கள் முறைக்காக காத்திருக்கின்றன. மேடி பயமில்லாமல் இருக்கும்போது, ஒவ்வொரு முறையும் உணவு கொடுத்த பிறகு முதலையின் தலையில் தட்டுவதில் அவர் திறமையானவர் எனத் தெரிய வருகிறது. முதலைகள் தங்கள் கையாளுபவரை நோக்கி ஆக்ரோஷமாக இல்லை. செல்லப்பிராணி போல அமைதியாக அமர்ந்திருக்கின்றன.
View this post on Instagram
இந்த கிளிப் தற்போது 22,000க்கும் அதிகமான பார்வைகள் மற்றும் 650 லைக்குகளுடன் வைரலாகியுள்ளது. முதலைகள் போன்ற ஆபத்தான வேட்டையாடுபவர்களால் சூழப்பட்டபோதும் ஒரு பெண் பயப்படாமல் இருக்கும் அதிர்ச்சிகரமான காட்சியை நம்ப முடியாமல் நெட்டிசன்களை திகைக்க வைததுள்ளது. "அந்த முதலைகள் ஒரு நாள் அவளை சாப்பிடுவார்கள்" என்று ஒரு பயனர் கருத்து தெரிவித்திருக்கிறார். அதற்கு வீடியோவை பதிவிட்ட நபர், "ஒருநாளும் இல்லை" என்று பதிலளித்துள்ளார்.