Kamala vs Trumph Debate: கமலா ஹாரீஸ் - டிரம்ப் பேசிய அந்த முக்கிய 3 பிரச்னைகள்
USA Presidential Candidate Debate: கமலா ஹாரீஸ் மற்றும் டிரம்ப் இடையேயான விவாதத்தில், பேசப்பட்ட முக்கிய 3 பிரச்னைகள் குறித்தும், அவர்களது நிலைப்பாடு குறித்தும் தெரிந்து கொள்வோம்.
உலக அளவில் மிகவும் எதிர்ப்பார்க்கப்படுகிற தேர்தலாக அமெரிக்க அதிபர் தேர்தலானது பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலானது வரும் நவம்பர் மாதம் 5 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக வயது மூப்பு உள்ளிட்ட காரணங்களால் அதிபர் பைடன் விலகியதையடுத்து, துணை அதிபர் கமலா ஹாரீஸ் களம் காண்கிறார். குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார்
நேருக்கு நேர் விவாதம்:
அமெரிக்காவில் அதிபர் தேர்தலையொட்டி, வேட்பாளர்கள் நேருக்கு நேர் தொலைக்காட்சி விவாதத்தில் கலந்து கொண்டு, பல்வேறு திட்டங்கள் மற்றும் அவர்களின் வியூகங்கள் விவாதிப்பது வழக்கம். இதனால், வேட்பாளர் இடையே விவாதங்களானது அனல் பறக்கும் என்றே சொல்லலாம். சில மாதங்களுக்கு முன்பு ஜோ பைடன் , டிரம்ப் இடையிலான விவாதத்தில், டிரம்ப் ஆதிக்கம் செலுத்தினார். வயது மூப்பு மற்றும் உடல்நிலை உள்ளிட்ட காரணங்களால் பைடனால் விவாதத்தில் திறம்பட கையாள முடியவில்லை. இந்நிலையில், தேர்தல் கருத்து கணிப்பு முடிவுகளும் டிரம்ப்-தான் வெற்றி பெற அதிக வாய்ப்புகள் உள்ளது எனவும் தெரிவித்தன.
இதையடுத்து, வேட்பாளரை மாற்ற ஜனநாயக கட்சி முடிவு செய்த நிலையில், அதிபர் பைடன், முன்னாள் ஒபாமா உள்ளிட்ட பலரின் தேர்வாக கமலா ஹாரிஸ் இருந்த நிலையில், அவரே வேட்பாளராக களம் காண்கிறார். கமலா ஹாரீஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு, கணிப்புகள் அவருக்கு சாதகமாக மாறியது.
கமலா ஹாரீஸ் - டிரம்ப்
இந்த தருணத்தில், பலரும் எதிர்பார்த்த கமலா ஹாரீஸ் மற்றும் பைஅடன் இடையிலான முதல் நேருக்கு நேருக்கு விவாதமானது இந்திய நேரப்படி காலை நடைபெற்றது.
அப்போது, பேசுவதற்கு முன்பு இருவரும் கை குலுக்கி விவாதத்தை தொடங்கினர். இந்த நடைமுறை வேட்பாளர்களிடையே இல்லாமல் இருந்தது. இருவருக்கிடையே விவாதத்தில் பல பிரச்னைகள் குறித்து பேசியிருந்தாலும், அவர்கள் பேசியதில் முக்கிய மூன்று பிரச்னைகள் குறித்து பார்ப்போம்.
இஸ்ரேல் - பாலஸ்தீன் போர்:
”இஸ்ரேல் நாடு, தங்களை பாதுகாத்துக் கொள்ள உரிமை இருக்கிறது. ஆனால், எப்படி போரை கையாள்கிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த போர் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்” என கமலா ஹாரீஸ் தெரிவித்தார்.
டிரம்ப் தெரிவிக்கையில் ” நான் அதிபராக இருந்திருந்தால், இந்த போரே தொடங்கியிருக்காது. கமலா ஹாரீஸ் இஸ்ரேல் நாட்டுக்கு எதிரான மனப்பான்மை கொண்டுள்ளார். அவர் அதிபரானால் 2 ஆண்டுகளில் இஸ்ரேல் நாடே இருக்காது” என டிரம்ப் தெரிவித்தார்
இந்த கருத்தை மறுத்து பேசிய கமலா ஹாரீஸ் “ டிரம்ப் பிளவுப்படுத்த முயல்கிறார். அவர் சர்வாதிகாரி மனப்போக்கை கொண்டுள்ளார் என்றும் தெரிவித்தார்.
கருக்கலைப்பு:
அமெரிக்காவில் முக்கிய பிரச்னைகளாக பேசப்பட்டு வரும் கருக்கலைப்பு உரிமைகளில்” கருக்கலைப்புக்கு எதிரான கருத்தியலை கொண்டுள்ள டிரம்ப் கருத்து தெரிவித்ததாவது 9வது மாத கருவைக்கூட கலைக்க அனுமதி வேண்டும் எனவும், பிறந்த குழந்தையை கூட கொல்ல வேண்டும் எனவும் ஜனநாயக கட்சி விரும்புகிறது என டிரம்ப் தெரிவித்தார்.
இதையடுத்து பேசியபின் கருக்கலைப்புக்கு ஆதரவான கருத்தியலை கொண்டுள்ள கமலா ஹாரீஸ்” தெரிவித்ததாவது “ அமெரிக்காவில் , பிறந்த குழந்தையை கொள்வதற்கான சட்டம் எங்கேயும் அனுமதி வழங்கவில்லை என தெரிவித்தார்.
ரஷ்யா – உக்ரைன் போர்:
ரஷ்ய அதிபர் புதின் மற்றும் உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி ஆகிய இருவரையும் எனக்கு தெரியும் என டிரம்ப் தெரிவித்தார். நான் போரை நிறுத்த விரும்புகிறேன். யுக்ரைனுக்கு , தற்போதைய ஆட்சியில் இருக்கும் அரசு அதிக அளவு நிதியை அளிக்கிறது என டிரம்ப் பேசியிருந்தார்.