மூன்றரை நிமிடத்தில் சமைக்கலாம்ன்னு சொன்னீங்க… முடியல! நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்த பெண்!
பாக்கெட்டில் பின்புறத்தில் இதனை செய்து முடிப்பதற்கான படிகளை அடுக்கடுக்காக எழுதியுள்ளனர். அவற்றை குறிப்பிட்டு, "இந்த பல படிகளில் ஒன்றை முடிக்கவே மூன்றரை நிமிடங்கள் ஆகிவிடும்" என்று கூறியுள்ளார்.
அமெரிக்காவில் ஒரு பெண், தனது மைக்ரோவேவ் ஓவனில் மேக் அண்ட் சீஸ் சமைக்க அதில் குறிப்பிடப்பட்டுள்ள நேரத்தை விட அதிக நேரம் ஆனதால், அமெரிக்க உணவு நிறுவனமான கிராஃப்ட் ஹெய்ன்ஸ் மீது 5 மில்லியன் டாலர் நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார்.
மேக்ரூணி சமைக்க 3.5 நிமிடம்
தெற்கு புளோரிடாவைச் சேர்ந்த அமண்டா ரமிரெஸ் நவம்பர் 18 அன்று புளோரிடாவின் மியாமி பிரிவின் தெற்கு மாவட்டத்தில் வழக்கைத் தாக்கல் செய்தார். அந்த வழக்கில், சீஸி மக்ரூணிக்களை உருவாக்கிய கிராஃப்ட் ஹெய்ன்ஸ் கோ., ஏமாற்றுவதாகவும், நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளைக் கொண்டுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். மைக்ரோவேவ் ஓவனில் செய்யக்கூடிய மேக் அண்ட் சீஸ் கப் தயார் செய்ய 3.5 நிமிடங்கள் ஆகும் என்று கூறியதன் மூலம் நிறுவனம் கூட்டாட்சி சட்டத்தை மீறியதாக திருமதி ராமிரெஸ் குற்றம் சாட்டினார். தி வாஷிங்டன் போஸ்ட்டின் படி, நிறுவனம் தவறான விளம்பரங்களில் ஈடுபட்டதாகவும், தவறான தகவல்களை பரப்புவதாகவும் அவர் கூறினார்.
உணவை தயாரிக்க ஆகும் மொத்த நேரம்
"3.5 நிமிடங்களில் தயார்' என்று விளம்பரப்படுத்தப்படுவதை பார்க்கும் நுகர்வோர், தயாரிப்பைத் தயாரிக்க எடுக்கும் மொத்த நேரத்தைக் குறைக்கிறது என்று நம்புவார்கள், அதாவது, பாக்கெட் திறக்கப்படாத தருணத்தில் இருந்து சாப்பிடுவதற்கு தயாராகும் வரை," என்று அவரது புகாரில் வாதிடுகிறார். அதே போல நம் ஊரிலும் ஐந்து நிமிடத்தில் ரெடி ஆகும் நூடுல்ஸ்கள் பல விற்கப்படுகின்றன, அவற்றை செய்யவும் ஐந்து நிமிடங்கள் போதுமானது இல்லை என்று பலர் கூறிவரும் நிலையில் அமெரிக்காவில் இதனை வழக்கு வரை இழுத்து சென்றுள்ளனர்.
அதிக விலை
கிராஃப்ட் ஹெய்ன்ஸ் நிறுவனம் எட்டு கப்களுக்கு $10.99 - பிரீமியம் விலை வசூலிக்கிறார்கள் என்று ரெமிரெஸ் குற்றம் சாட்டினார். அவரது வழக்கில், இந்த தயாரிப்பின் பாக்கெட்டில் பின்புறத்தில் இதனை செய்து முடிப்பதற்கான படிகளை அடுக்கடுக்காக எழுதியுள்ளனர். அவற்றை குறிப்பிட்டு, "இந்த பல படிகளில் ஒன்றை முடிக்கவே மூன்றரை நிமிடங்கள் ஆகிவிடும்" என்று கூறியுள்ளார்.
நுகர்வோரை ஏமாற்றுகிறார்கள்
மைக்ரோவேவ் ஓவனில் இந்த தயாரிப்பை சமைக்க 3.5 நிமிடங்கள் ஆகும் என்று ஒரு உண்மையான லேபிளில் குறிப்பிடப்பட்டதாக புகாரில் கூறப்பட்டுள்ளது. பதிவின் படி, மோசடி, தவறான விளம்பரங்கள், எக்ஸ்பிரஸ் உத்தரவாதத்தை மீறுதல், கவனக்குறைவு, தவறான பிரதிநிதித்துவம், நியாயமற்ற செறிவூட்டல் மற்றும் ஏமாற்றும், நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளைத் தடுக்கும் சட்டங்களை மீறுதல் ஆகியவற்றுடன் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிறுவனத்தின் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மறுபுறம், Kraft Heinz Co., நிறுவனத்தின் ஒரு அறிக்கையில் இந்த அற்பமான வழக்கு பற்றி அறிந்திருப்பதாகவும், "புகாரில் உள்ள குற்றச்சாட்டுகளுக்கு எதிராக வலுவாகப் போராடுவோம்" என்றும் கூறி உள்ளது.