இந்தியை ஊக்குவிக்கும் வகையில் ஐநாவில் தீர்மானம்...இந்தியாவின் பிளான் இதுதான்..!
இந்தி உள்பட அதிகாரப்பூர்வமற்ற மொழிகளிலும் ஐநாவின் முக்கிய தகவல்களை வெளியிடக் கோரும் தீர்மானம் ஐக்கிய நாடுகள் பொது சபையில் நிறைவேற்றப்பட்டது.
முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கையாக, இந்தியா கொண்டு வந்த பன்மொழி பற்றிய தீர்மானம் ஐக்கிய நாடுகள் பொது சபையில் நிறைவேற்றப்பட்டது. அதில், இந்தி குறித்து முதல்முறையாக குறிப்பிடப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை நிறைவேற்றப்பட்டுள்ள அந்த தீர்மானத்தில், அலுவல் சார்ந்த முக்கியமான தகவல்களை இந்தி உள்பட அதிகாரப்பூர்வமற்ற மொழிகளில் வெளியிட வேண்டும் என கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி டி.எஸ். திருமூர்த்தி கூறுகையில், "இந்த ஆண்டு, முதன்முறையாக, தீர்மானத்தில் இந்தி மொழி பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. தீர்மானத்தில் முதன்முறையாக பங்களா மற்றும் உருது மொழி குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை வரவேற்கிறோம்.
பன்மொழி என்பது ஐநாவின் முக்கிய விழுமியமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. பன்மொழிக்கு முன்னுரிமை அளித்ததற்காக பொதுச்செயலாளருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். செய்திகள் மற்றும் மல்டிமீடியா உள்ளடக்கத்தை இந்தி மொழியில் வெளியிட கூடுதல் பட்ஜெட் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்காக, இந்தியா கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் ஐநா உலகளாவிய தகவல் தொடர்புத் துறையுடன் கூட்டு சேர்ந்துள்ளது" என்றார்.
संयुक्त राष्ट्र 🇺🇳 में पहली बार Multilingualism resolution में #हिन्दी भाषा का उल्लेख है.भारतीय राजदूत @ambtstirumurti ने कहा यह अनिवार्य करना चाहिए कि बहुभाषावाद को @UN में सही मायने में अपनाया जाए और भारत इसका हमेशा समर्थन करेगा@PTI_News की मेरी रिपोर्टhttps://t.co/GhgzzWqIhh
— Yoshita Singh योषिता सिंह (@Yoshita_Singh) June 11, 2022
இந்த முயற்சிகளின் ஓர் அங்கமாக கடந்த 2018ஆம் ஆண்டு, ஐக்கிய நாடுகள் பற்றிய தகவல்களை பொது மக்களுக்கு எடுத்து செல்ல ஐநாவில் இந்தி என்ற திட்டம் தொடங்கபட்டது. உலகம் முழுவதும் உள்ள இந்தி பேசும் மக்களுக்கு உலகளாவிய விவகாரங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இத்திட்டம் வழிவகை செய்கிறது.
இதுகுறித்து விரிவாக பேசிய அவர், "இச்சூழலில், 1946ஆம் ஆண்டு, பிப்ரவரி 1ஆம் தேதி முதல் அமர்வில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஐநா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் 13(1) ஐ நினைவுபடுத்த விரும்புகிறேன். உலக மக்களுக்கு அதன் நோக்கங்கள் மற்றும் செயல்பாடுகள் பற்றி முழுமையாக தெரிவிக்கப்படாத வரையில் ஐக்கிய நாடுகள் சபையால் அதன் நோக்கங்களை அடைய முடியாது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையில் பல மொழி பேசும் தன்மையை உண்மையாக ஏற்றுக்கொள்வது மிகவும் அவசியமானது. இந்த நோக்கத்தை அடைய செய்ய இந்தியா ஐநாவை ஆதரிக்கும். மக்களிடையே இணக்கமான தகவல்தொடர்புக்கு பன்மொழிவாதம் ஒரு இன்றியமையாத காரணியாகும். இது பலதரப்பு இராஜதந்திரத்தை செயல்படுத்த உதவுகிறது. இது நிறுவனத்தின் பணிகளில் அனைவரின் திறமையான பங்கேற்பையும் அதிக வெளிப்படைத்தன்மை மற்றும் செயல்திறன் மற்றும் சிறந்த விளைவுகளையும் உறுதி செய்கிறது.
ஐநா பொதுச் சபை அமைப்பின் முக்கிய மதிப்பாக பன்மொழியை அங்கீகரித்துள்ளது. எனவே, அனைத்து ஐக்கிய நாடுகளின் செயலக நிறுவனங்களும் இந்த கூட்டு முயற்சியில் தீவிரமாக பங்களிப்பதோடு தங்கள் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறோம். பன்மொழி தன்மையை செயலகம் மூலம் பரவலாக்க வேண்டும்" என்றார்.
அரேபியம், சீனம், ஆங்கிலம், பிரேஞ்சு, ரஷிய, ஸ்பானியம் ஆகியவை ஐநைவினே அதிகாரப்பூர்வ மொழியாக உள்ளது. ஐநா செயலகத்தின் செயல் மொழிகளாக ஆங்கிலம் மற்றும் பிரேஞ்சு உள்ளது.