Ukraine - Russia Crisis: “உன்னை மறக்க முடியாது, அவர்களை மன்னிக்க முடியாது” - காதலியை இழந்த உக்ரைன் எம்.பி வருத்தம்
தலைநகரை சுற்றியுள்ள பல பகுதிகளில் தாக்குதல் கடுமையாக உள்ள நிலையில் அங்குள்ள மக்கள் பிற நாடுகளில் தஞ்சம் புகுந்து உள்ளனர். பலர் பதுகிடங்களில் பாதுக்காப்புக்காக தங்கியுள்ளனர்.
உக்ரைன் நாட்டின் இளம் எம்.பி ஸ்வியட்டோஸ்லேவ் யுராஷ், ரஷ்ய தாக்குதலால் கொல்லப்பட்ட தனது காதலியின் புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார். இது பார்ப்பவர்களின் மனதை மிகவும் பாதித்திருக்கிறது.
ரஷ்யா - உக்ரைன் போரானது நாளுக்கு நாள் தீவிரமடைந்துகொண்டே செல்கிறது. உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய வான்வழி தாக்குதலால், உக்ரைனில் உள்ள மருத்துவமனை, குடியிருப்புகள் உள்ளிட்டவை உருகுலைந்து காணப்படுகின்றன. உக்ரைனை சுற்றி வளைத்திருக்கும் ரஷ்யா தற்போது தலைநகர் கீவை நெருங்கி இருக்கிறது. தலைநகரை சுற்றியுள்ள பல பகுதிகளில் தாக்குதல் கடுமையாக உள்ள நிலையில் அங்குள்ள மக்கள் பிற நாடுகளில் தஞ்சம் புகுந்து உள்ளனர். பலர் பதுகிடங்களில் பாதுக்காப்புக்காக தங்கியுள்ளனர்.
இந்நிலையில், உக்ரைனின் இளம் எம்.பி, 26 வயதேயான ஸ்வியட்டோஸ்லேவ் யுராஷ் ட்விட்டர் பக்கத்தில் புகைப்படங்களின் பகிர்ந்து ட்வீட் செய்திருக்கிறார். ரஷ்ய படைகளால் கொல்லப்பட்ட தனது காதலி அலெக்ஸாண்டிராவின் புகைப்படத்தை பகிர்ந்த அவர், ”கீவ் நகரின் அழகு இதுதான். ரஷ்ய படைகளால் இளம் பத்திரிக்கையாளர் அலெக்ஸாண்டிரா கொல்லப்பட்டுள்ளார். நான் அவளை மிகவும் நேசித்தேன். 10 ஆண்டுகளாக மகிழ்ச்சி, சோகம், வலி என அனைத்தையும் பகிர்ந்து கொண்டுள்ளோம். இப்போது மரணம் எங்களை பிரித்துவிட்டது. இப்போது நான் வெறுக்க கற்றுக்கொண்டிருக்கிறேன். உன்னை நான் மறக்க மாட்டேன். அவர்களை மன்னிக்க மாட்டேன்” என பதிவிட்டிருக்கிறார்.
The beauty of Kyiv
— Sviatoslav Yurash (@SviatoslavUA) March 16, 2022
Alexandra Kuvshynova, young journalist was murdered by the Russians.
Her I loved.Decade of happiness and sadness, joy and pain, meaning and loss. Only death could have parted us.
Now I learn to hate. You shall never be forgotten.They shall never be forgiven. pic.twitter.com/avipg7CeGX
கடந்த 22 நாட்களாக தொடர்ந்து வரும் ரஷ்யாவின் தாக்குதலில், உக்ரைனில் பலர் உயிரிழந்து வருகின்றனர். இதுவரை 103 குழந்தைகளும், 100-க்கும் மேற்பட்ட பெரியவர்களும் உயிரிழந்துள்ளனர். இதனால், உக்ரைன் நாட்டில் தொடர்ந்து பரபப்பு நிலவி வருகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்