மேலும் அறிய

Ukraine Russia Conflict: நிரந்தர அமைதியா? நீறுபூத்த நெருப்பா? ரஷ்யா- உக்ரைன் போர் மேகத்தின் ஆதியும் அந்தமும்..

Ukraine Russia Conflict Explained: தன் அண்டை நாடான, கலாச்சார ரீதியில் தொடர்பு கொண்ட உக்ரைன் மீது போர் தொடுக்க வேண்டிய அவசியம் ரஷ்யாவுக்கு இருப்பது ஏன்? இதில் பெரியண்ணன் அமெரிக்காவின் தலையீடு சரியா?

உக்ரைன் நாட்டின் கிழக்கு எல்லைப் பகுதியில், ரஷ்யா தனது படையினர் சுமார் 1,50,000 பேரை நிறுத்தியுள்ளது. கூடவே மருத்துவ உபகரணங்கள், அதிநவீன பீரங்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் ஆகியவற்றையும் ரஷ்யா வைத்துள்ளதால் அங்கே போர்ப்பதற்றம் நிலவி வருகிறது. இதைத் தாண்டி அமெரிக்கா, உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தக்கூடாது என்று எச்சரிக்கை விடுத்து வருகிறது. 

இந்த சூழலில், தன்னுடைய அண்டை நாடான, கலாச்சார ரீதியில் தொடர்பு கொண்ட உக்ரைன் மீது போர் தொடுக்க வேண்டிய அவசியம் ரஷ்யாவுக்கு இருப்பது ஏன்? இதில் ’பெரியண்ணன்’? அமெரிக்காவின் தலையீடு சரியா, இவை அனைத்துக்கும் இந்தியாவின் எதிர்வினை என்ன என்று பல கேள்விகள் எழுந்துள்ளன. இவற்றை அறிந்துகொள்ள காலச்சக்கரத்தில் நூற்றாண்டைக் கடக்க வேண்டியது அவசியமாகிறது. 

Ukraine Russia Conflict: நிரந்தர அமைதியா? நீறுபூத்த நெருப்பா? ரஷ்யா- உக்ரைன் போர் மேகத்தின் ஆதியும் அந்தமும்..

இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனி, ஜப்பான் நாடுகள் சரணடைந்த பிறகு, உலக அரசியலில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டன. 1945 வாக்கில் அமெரிக்காவும், சோவியத் ஒன்றியமும் உலகின் வல்லரசு நாடுகளாகின. இதையடுத்து சோவியத் ஒன்றியம், பல கிழக்கு ஐரோப்பிய நாடுகளைக் கைப்பற்றத் தொடங்கியது.  இதற்கு பதிலடியாக 1949-ல் அமெரிக்கா, நேட்டோ எனப்படும் வட அட்லாண்டிக் ஒப்பந்த நாடுகள் கூட்டமைப்பை (North Atlantic Treaty Organization -NATO) உருவாக்கியது. இதில், இங்கிலாந்து, ஃப்ரான்ஸ், கனடா உள்ளிட்ட நாடுகள் இணைந்தன. இதன் தலைநகரம் பெல்ஜியத்தில் அமைக்கப்பட்டது. 

இந்த நேட்டோ அமைப்பில் இணைந்துள்ள நாடுகளின்மீது பிற அந்நிய நாடுகள் படையெடுத்தால், சக உறுப்பு நாடுகள் சம்பந்தப்பட்ட நாட்டுக்கு உறுதுணையாகப் படையெடுப்பை மேற்கொள்ளும். இந்த பாதுகாப்பு அம்சத்தால், நேட்டோ உருவாக்கப்பட்டபோது 12 ஆக இருந்த உறுப்பு நாடுகளின் எண்ணிக்கை அதிகரித்து தற்போது 30 உறுப்பு நாடுகளாக உள்ளது. இதில், கடைசியாக தென் கிழக்கு ஐரோப்பிய நாடான வட மாசிடோனியா இணைந்தது. மேலும் போஸ்னியா, ஹெர்ஸ்கோவினா, ஜார்ஜியா மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகள் இதில் இணைய ஆர்வமாக இருந்தன. இதற்கு நேட்டோவும் இசைந்தது. 

இந்த நிலையில் உக்ரைன் எல்லையில் ரஷ்யா படைகளைக் குவித்தது. இதற்கான காரணத்தை அறிய முதலில், சோவியத் ஒன்றிய வரலாற்றை அறிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது. 1917-ல் ஏற்பட்ட அக்டோபர் புரட்சி, சோவியத் ஒன்றியத்துக்கான முதல் புள்ளியாக இருந்தது. அதையடுத்து1922 முதல் பெரும் வல்லரசாக, 10க்கும் மேற்பட்ட குடியரசுகளை சோவியத் ஒன்றியம் கட்டியாண்டது. இந்த அரசின் அதிகாரம் பரவலாக்கப்படாமல், ஒரே இடத்தில் மையப்படுத்தப்பட்டதாக இருந்தது. இதனால் ஏற்பட்ட பிரச்சினை, பின்னாளில் பெரிதாக வெடித்தது. 

Ukraine Russia Conflict: நிரந்தர அமைதியா? நீறுபூத்த நெருப்பா? ரஷ்யா- உக்ரைன் போர் மேகத்தின் ஆதியும் அந்தமும்..
சோவியத் ஒன்றியத்தில் இருந்த நாடுகள்

1990களில் சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு, அதற்குக் கீழ் இருந்த 10-க்கும் மேற்பட்ட பகுதிகள் பிரிந்து சென்று, சுதந்திரம் பெற்றதாக அறிவித்துக்கொண்டு தனித்தனி நாடுகளாகின. இதில் இரண்டாவது சக்திவாய்ந்த நாடாக இருந்த உக்ரைனும் அடக்கம். வாக்கெடுப்பில் 92.3% பெற்று, சுதந்திரம் பெற்றதாக அறிவித்துக்கொண்டது உக்ரைன். ரஷ்யாவும் பலம்மிக்க தனி நாடானது.

சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்ட பின்னர், அதன் வெளிநாட்டுக் கடன்களைத் தானே முன்வந்து ஏற்றுக்கொண்ட ரஷ்யா, இருந்த சர்வதேச சொத்துகளையும் தனதாக அறிவித்தது. இதற்கு உக்ரைன் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தது. 1991 சட்டத்தின்படி, வெளிநாட்டு சொத்துகளில் தங்களுக்கும் பங்கிருப்பதாக சர்வதேச நீதிமன்றங்களில் அறிவித்தது உக்ரைன். இந்த மோதல் 1991-ல் இருந்தே தொடர்ந்து வருகிறது. 

1990வரை இருந்த சோவியத் ஒன்றியத்தின் பலம், ரஷ்யாவுக்குக் கிடைத்துவிடக் கூடாது என்று அமெரிக்கா நினைத்தது. இங்கிலாந்து, ஃப்ரான்ஸ் உள்ளிட்ட நாடுகளும் அதையே விரும்பின. இதனால் ரஷ்யாவின் ஆளுமையைக் குறைக்கத் திட்டமிட்டன.

சோவியத் ஒன்றியத்தில் இருந்து விலகி, ரஷ்யாவைச் சுற்றிலும் உள்ள சிறிய நாடுகளை நேட்டோவில் இணைக்க ஆரம்பித்தன. இந்த சூழலில் ஆரம்பத்தில் இருந்தே முரண்பட்ட ரஷ்யாவை எதிர்த்து, நேட்டோ அமைப்பில் இணைய உக்ரைன் அதிக ஆர்வம் காட்டியது. இந்தப் போக்கு ரஷ்யாவுக்குப் பிடிக்கவில்லை. தன்னைச் சுற்றிலுமுள்ள பிற நாடுகள் இணைவதையே வெறுப்புடன், கையறு நிலையில் வேடிக்கை பார்த்த ரஷ்யா, உக்ரைன் கண்டிப்பாக நேட்டோவுடன் இணையக் கூடாது என்று கடும் எதிர்ப்பு தெரிவித்தது. 

Ukraine Russia Conflict: நிரந்தர அமைதியா? நீறுபூத்த நெருப்பா? ரஷ்யா- உக்ரைன் போர் மேகத்தின் ஆதியும் அந்தமும்..

கலாச்சார, மொழி ரீதியில் ரஷ்யாவை ஒத்திருக்கும், தன் எல்லையில் இருக்கும் நாடு, அமெரிக்கா உடன் கைகோப்பதும், அமெரிக்கப் படைகள் தங்கள் எல்லையிலும் நிற்பதும் ரஷ்யாவுக்குப் பிடிக்கவில்லை. எனினும் உக்ரைன் மக்கள் ரஷ்யக் கட்டுப்பாட்டின்கீழ் இருப்பதை வெறுத்தனர். ரஷ்ய எதிர்ப்பையும் மீறி, அந்நாட்டு ஆதரவில் அமைந்திருந்த அரசை 2014-ல் போராட்டம் மூலம் பெருமக்கள் திரள் கீழே இறக்கியது. இதனால் வெகுண்டெழுந்த ரஷ்யா, உக்ரைன் மீது போர் தொடுத்தது. 

அந்தப் போரில் சுமார் 14 ஆயிரம் பேர் இறந்ததாகத் தகவல் வெளியானது. முடிவில் உக்ரைனின் தென்பகுதியில் உள்ள க்ரீமியா தீபகற்பத்தை (Crimean Peninsula) ரஷ்யா கைப்பற்றியது. வர்த்தகக் காரணங்களுக்கு இந்தப் பகுதியைப் பயன்படுத்திக்கொள்ளத் திட்டமிட்டே க்ரீமியாவைப் பிடித்தது. இதனால் ரஷ்யா மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டது. எனினும் ரஷ்யா தனது முடிவில் பின்வாங்கவில்லை. 

இதற்கிடையே அதேநேரத்தில் கிழக்கு உக்ரைனில் பிரிவினைவாதிகள் தொடர்ந்து உக்ரைன் அரசுக்கு எதிராகப் போராடினர். உக்ரைனில் தேர்தல் வந்தது. தொலைக்காட்சியில் அதிபராக நடித்த காமெடி நடிகர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி வெற்றி பெற்று நிஜ அதிபரானார். முன்பு தேர்தல் வாக்குறுதியாக, அமைதிப் பேச்சுவார்த்தை மூலம் ரஷ்ய- உக்ரைன் பிரச்சினை தீர்க்கப்படும் என்று அறிவித்திருந்தார்.  

Ukraine Russia Conflict: நிரந்தர அமைதியா? நீறுபூத்த நெருப்பா? ரஷ்யா- உக்ரைன் போர் மேகத்தின் ஆதியும் அந்தமும்..
 விளாடிமிர் ஜெலன்ஸ்கி

2015-ல் உக்ரைன் அதிபர் பெட்ரோ பொரஷென்கோ - ரஷ்யாவின் விளாடிமிர் புதின் இடையில் மின்ஸ்க் ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி, உக்ரைன் மற்றும் ரஷ்யா ஆதரவோடு இருக்கும் பிரிவினைவாதப் படைகளுக்கு இடையிலான பிரச்சனைகள் தீர்க்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த மின்ஸ்க் ஒப்பந்தத்தை மீண்டும் தற்போது கொண்டுவர வேண்டும் என்றும் மேலும் சில நிபந்தனைகளையும் ரஷ்யா விதித்தது. எனினும் இதற்கு, உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி ஒப்புக்கொள்ளவில்லை. 

மின்ஸ்க் ஒப்பந்தத்தை நிறைவேற்றுமாறு ரஷ்யா அழுத்தம் கொடுக்க, மேற்கத்திய நாடுகளிடம் உதவி கோரினார் ஜெலன்ஸ்கி. வெளிப்படையாகவே நேட்டோவில் சேர விரும்புவதாகவும் பேச ஆரம்பித்தார். 

இதனால் வெகுண்டெழுந்த ரஷ்யா, தன்னுடைய படைகளைக் கொண்டு வந்து, உக்ரைன் கிழக்கு எல்லைப் பகுதியில் நிறுத்தியது. சுமார் 1,50,000 பேர் அங்கே குவிக்கப்பட்டனர். கூடவே மருத்துவ உபகரணங்கள், அதிநவீன பீரங்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் ஆகியவற்றையும் ரஷ்யா வைத்துள்ளதால் அங்கே போர்ப் பதற்றம் நிலவி வருகிறது. இதைத் தாண்டி அமெரிக்கா, உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தக்கூடாது என்று எச்சரிக்கை விடுத்து வருகிறது. போர் எதையும் நடத்தவில்லை என்று தொடர்ந்து புடின் கூறிவருகிறார். 

Ukraine Russia Conflict: நிரந்தர அமைதியா? நீறுபூத்த நெருப்பா? ரஷ்யா- உக்ரைன் போர் மேகத்தின் ஆதியும் அந்தமும்..

உக்ரைன் இன்னமும் நேட்டோவில் இணையவில்லை என்பதால், அங்கு நேட்டோ படைகளை அனுப்பமுடியாது. அதனால், நேட்டோ உறுப்பினர்களாக இருக்கும் உக்ரைனுக்கு அண்டை நாடுகளான எஸ்தோனியா, லிதுவேனியா, போலந்து, ருமேனியா உள்ளிட்ட நாடுகளில் அமெரிக்க ஆதரவுப் படைகள் குவிக்கப்பட்டுள்ளன. 

முன்னதாக, ’’ரஷ்ய எல்லைப் பகுதியான உக்ரைனில் அமெரிக்கா எதற்கு தங்களின் நிலைநிறுத்துகிறது? என்று கேட்ட புடின், கனடா அல்லது மெக்சிகோ எல்லையில் ரஷ்ய ஏவுகணைகளை நிலைநிறுத்தினால், அமெரிக்கா வேடிக்கை பார்க்குமா?’’ என்று சரமாரியாகக் கேள்வி எழுப்பியிருந்தார். மேலும் சிலவற்றை வலியுறுத்தினார்.

புடின் கோரிக்கைகள் 

இதுதொடர்பாக 8 அம்சக் கோரிக்கைகளையும் புடின் முன்வைத்தார். அதன்படி,
1997-க்குப் பிறகு நேட்டோவில் இணைந்த நாடுகள் அனைத்தில் இருந்தும் நேட்டோ படைகள் வெளியேற வேண்டும். ஆயுதங்களைத் திரும்பப் பெற வேண்டும். (இதன்மூலம் பெரும்பாலான கிழக்கு ஐரோப்பிய நாடுகளும் சோவியத் ஒன்றியத்தில் இருந்து வெளியேறிய நாடுகளும், நேட்டோவில் இருந்து வெளியேற வேண்டி இருக்கும். )

Ukraine Russia Conflict: நிரந்தர அமைதியா? நீறுபூத்த நெருப்பா? ரஷ்யா- உக்ரைன் போர் மேகத்தின் ஆதியும் அந்தமும்..

ரஷ்யாவின் பாதுகாப்புக்கு சட்டரீதியான உத்தரவாதத்தை மேற்கு நாடுகள் அளிக்க வேண்டும். உக்ரைனில் அமெரிக்காவில் போர்ப் பயிற்சிகளை மேற்கொள்ளக்கூடாது. நேட்டோவில் உக்ரைன், ஜார்ஜியா உள்ளிட்ட நாடுகளை இணைக்கக் கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்தன. 

இதன்மூலம், கிழக்கு ஐரோப்பாவை முழுமையாகத் தன் வசப்படுத்தத் திட்டமிட்டார் புடின். எனினும் இதற்கு நேட்டோ அமைப்பு ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் நிலைமை இன்னும் மோசமானது. இதனால் கிழக்கு உக்ரைன் எல்லைப் பகுதியில் ரஷ்யப் படைகள் குவிக்கப்பட்டுள்ளன. இதனால் அமெரிக்கா, உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தக்கூடாது என்று எச்சரிக்கை விடுத்து வருகிறது. 

அடுத்த சில நாட்களில் உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தலாம் என்று அமெரிக்க அதிபர் ஜோ பிடன் தெரிவித்தது சர்ச்சைக்கு உள்ளானது. உக்ரைனில் ரஷ்யப் படையெடுப்பின் அச்சுறுத்தல் மிக அதிகமாக உள்ளதாகவும், மாஸ்கோ எல்லையில் இருந்து ரஷ்யப் படைகள் பின்வாங்குவதாகக் கூறினாலும், விரைவில் தாக்குதல் உறுதி என்றும் அமெரிக்க அதிபர் கூறியிருந்தார்.

இந்தியா என்ன சொல்கிறது?

போர்க் கருவிகள் வாங்குவதிலும் வர்த்தக் காரணங்களுக்காகவும் அமெரிக்கா, ரஷ்யா ஆகிய இரண்டு நாடுகளையுமே இந்தியா சார்ந்திருக்கிறது. இதனால் ஆரம்பத்தில் இருந்தே நடுநிலையோடு செயல்பட்டு வருகிறது இந்தியா. இரு தரப்பும் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினையைத் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று கூறி வருகிறது. 

Ukraine Russia Conflict: நிரந்தர அமைதியா? நீறுபூத்த நெருப்பா? ரஷ்யா- உக்ரைன் போர் மேகத்தின் ஆதியும் அந்தமும்..

உக்ரைன் நாட்டில் நிலவும் சூழல், இந்தியப் பங்குச் சந்தையில் பலத்த வீழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கச்சா எண்ணெய் விலை ஏற்றத்தை உருவாக்கியுள்ளது. இதனால் இந்தியாவிலும் பெட்ரோல் விலை உயரக்கூடும் என்கின்றனர் நிபுணர்கள். 

போர்ப் பயிற்சி

இந்நிலையில் ரஷ்யா தனது படைகளை திரும்பப் பெறுவதாக செய்தி வெளியானது. சில மணி நேரத்தில் நாளை (பிப்.19) உக்ரைன் எல்லையில் போர்ப் பயிற்சி மேற்கொள்ளப்படும் என்று ரஷ்யா அறிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. எல்லையில் உக்ரைன் ஆயுதப் படைகளும் குவிக்கப்பட்டுள்ளன. எனினும் அவற்றைக் கொண்டு பிரிவினைவாதிகள் மீது தாக்குதல் நடத்தப்படாது என்று அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இதற்கிடையே அமெரிக்க அதிபர் ஜோ பைடன், மேற்கு நாடுகளின் தலைவர்களோடு காணொலிக் கூட்டத்தை இன்று நடத்த உள்ளார். 

இதற்கிடையே போர் மூண்டால் உலக நாடுகள் அனைத்தும் பாதிக்கப்படும் சூழல் உருவாகும். தொழில்நுட்பக் காலகட்டத்தில் பயோ - வார் அபாயத்தையும் புறந்தள்ளுவதற்கில்லை. இதனால் மேற்கு நாடுகளின் தலைவர்கள் அமெரிக்க, ரஷ்ய அதிபர்களிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

உக்ரைன் - ரஷ்யா போர்ப் பதற்றம் தணியுமா அல்லது உலகப் போராக உருவெடுக்குமா என்று கேள்விக்குக் காலம்தான் பதில்சொல்ல வேண்டும். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”மின்சார துறையில் லஞ்சமா? பொய் சொல்லும் அமெரிக்கா” செந்தில் பாலாஜி SUPPORTNellai dmk issue | ”உன் சாதிக்கு பதவியா? கொன்னு போட்ருவோம்” கதறும் திமுக பேரூராட்சி தலைவிGirl Harassment : நடந்து சென்ற இளம்பெண் தவறாக கைவைத்த கயவன் மதுரையில் பட்டப்பகலில் அவலம்Thirumavalavan :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Sabarimala Temple: சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? -  கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? - கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
“என்னை காதலி” ...  பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
“என்னை காதலி” ... பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
Embed widget