மேலும் அறிய

உக்ரைன் பகுதிகளை இணைத்துக்கொண்ட ரஷ்யா...அதிபர் ஜெலன்ஸ்கி எடுத்த அதிரடி முடிவு

ரஷியாவின் கட்டுப்பாட்டில் உள்ள நான்கு பகுதிகளை ரஷியா இன்று இணைத்து கொண்டுள்ள நிலையில், நேட்டோ அமைப்பில் விரைவாக சேர்த்து கொள்ளுமாறு உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

உக்ரைனில் ரஷியாவின் கட்டுப்பாட்டில் உள்ள நான்கு பகுதிகளை ரஷியா இன்று இணைத்து கொண்டுள்ள நிலையில், நேட்டோ அமைப்பில் விரைவாக சேர்த்து கொள்ளுமாறு உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி கோரிக்கை விடுத்துள்ளார்.

சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்ட வீடியோ பதிவு ஒன்றில் பேசிய அவர், "நேட்டோ கூட்டு படையில் இணைவதற்கான பொருந்தக்கூடிய தன்மையை நாங்கள் ஏற்கனவே நிரூபித்துள்ளோம்.

நேட்டோவில் விரைவாக இணைத்து கொள்வதற்கான உக்ரைனின் விண்ணப்பத்தில் கையெழுத்திடுவதன் மூலம் நாங்கள் ஒரு தீர்க்கமான நடவடிக்கையை எடுக்கிறோம். விளாடிமிர் புதின் அதிகாரத்தில் இருக்கும் வரை ரஷியாவுடன் உக்ரைன் பேச்சுவார்த்தை நடத்தாது. புதிய அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்துவோம்" என்றார்.

ரஷியா ஆக்கிரமித்துள்ள உக்ரைன் பகுதிகளை இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ரஷியா அதிகாரப்பூர்வமாக இணைத்து கொண்டது. இதை, ரஷிய அதிபர் புதினின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் உறுதி செய்துள்ளார். ரஷிய நேரப்படி, வெள்ளிக்கிழமை மதியம் 3 மணிக்கு இந்நிகழ்ச்சி நடைபெற்றது.

இதுகுறித்து டிமிட்ரி பெஸ்கோவ் நேற்று கூறுகையில், "புதிய பகுதிகளை ரஷிய கூட்டமைப்புடன் இணைப்பது தொடர்பான ஒப்பந்தம் நாளை கையெழுத்தாகிறது. ரஷியாவுடன் இணைவது தொடர்பாக வாக்கெடுப்பு நடத்திய நான்கு பிரதேசங்களுடனும் நாளை ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. இது தொடர்பாக ரஷிய தரப்பிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது" என்றார்.

கிரெம்ளினின் செயின்ட் ஜார்ஜ் மண்டபத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியின் போது நான்கு பிராந்தியங்களின் தலைவர்கள் ரஷியாவுடன் இணைவதற்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர். இந்த வாக்கெடுப்புக்கு உக்ரைன் மற்றும் மேற்கத்திய நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

டொனெட்ஸ்க், லுஹான்ஸ்க், கெர்சன் மற்றும் ஓரளவுக்கு ரஷியாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஜபோரிஜ்ஜியா பகுதிகள் வெள்ளிக்கிழமை பொதுவாக்கெடுப்பை அறிவித்தன. வாக்கெடுப்பு நடத்துவதன் அவசியத்தை ரஷிய அதிபர் புடின் தெரிவித்ததை அடுத்து நான்கு பகுதிகள் ரஷியாவுடன் இணைய உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டது.

போர் தொடங்கி ஏழு மாதங்களுக்குப் பிறகு, ரஷியா பின்னடைவை சந்தித்து வரும் நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

முன்னதாக, முன்னாள் ரஷிய அதிபர் டிமிட்ரி மெட்வடேவ், கிழக்கு உக்ரைன் பகுதிகளை ரஷியாவுடன் இணைப்பது மற்றும் அவற்றின் எல்லைகளை மறுவரையறை செய்யும் முடிவை மாற்ற முடியாது என்றும், அதை பாதுகாக்க ரஷியா எந்த நடவடிக்கையும் எடுக்கும் என்றும் கூறினார்.

அத்தகைய வாக்கெடுப்பு ரஷியாவிற்கு ஆதரவாக செல்லும் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. ஆனால் உக்ரைனின் ராணுவத்தை ஆதரிக்கும் மேற்கத்திய அரசுகள் அதை அங்கீகரிக்காது. போரில் உக்ரைன் ராணுவம் முன்னிலை வகிக்கும் நேரத்தில் ரஷியாவிற்கு சண்டையை தீவிரப்படுத்த இந்த வாக்கெடுப்பு மேலும் வாய்ப்பாக அமையும்.

டான்பாஸ் பிராந்தியத்தின் பெரும்பகுதியாக லுஹான்ஸ்க் மற்றும் டொனெட்ஸ்க் பகுதிகள் விளங்குகின்றன. இது 2014 முதல் பிரிவினைவாதிகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியிலிருந்தே, ரஷிய தாக்குதல் நடத்தி வருகிறது.

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

PBKS vs MI: பல்தான்சை பஞ்சராக்கிய பஞ்சாப்.. கெத்தா குவாலிஃபயருக்குச் சென்ற ஸ்ரேயாஸ் பாய்ஸ்! எலிமினேட்டரில் மும்பை!
PBKS vs MI: பல்தான்சை பஞ்சராக்கிய பஞ்சாப்.. கெத்தா குவாலிஃபயருக்குச் சென்ற ஸ்ரேயாஸ் பாய்ஸ்! எலிமினேட்டரில் மும்பை!
Annamalai Vs Nainar: அண்ணாமலைக்கு கல்தா; ஆட்டத்தை ஆரம்பித்த பாஜக தமிழ்நாடு - அப்போ தேர்தலுக்கு எப்படி பாஸ்.?
அண்ணாமலைக்கு கல்தா; ஆட்டத்தை ஆரம்பித்த பாஜக தமிழ்நாடு - அப்போ தேர்தலுக்கு எப்படி பாஸ்.?
IPL MI Vs PBKS: 185 ரன்கள் வெற்றி இலக்கு; மும்பையை வீழ்த்தி முதலிடம் பிடிக்குமா பஞ்சாப்.?
185 ரன்கள் வெற்றி இலக்கு; மும்பையை வீழ்த்தி முதலிடம் பிடிக்குமா பஞ்சாப்.?
சென்னையிலே மிகவும் ஆபத்தான சாலை எது தெரியுமா? ஒரே ஆண்டில் இத்தனை விபத்துகளா?
சென்னையிலே மிகவும் ஆபத்தான சாலை எது தெரியுமா? ஒரே ஆண்டில் இத்தனை விபத்துகளா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

நெருங்கும் பீகார் தேர்தல் பாஜகவுக்கு சவால் விடும் INDIA 4 மாநிலங்களில் இடைத்தேர்தல் | Bihar Electionரவியால் ஏற்பட்ட பிரச்சனைகெனிஷாவின் அதிரடி முடிவுஷாக்கான ஆர்த்தி | Kenishaa vs Aartiஓய்வை அறிவித்த தோனி?” ஒவ்வொரு வருஷமும் சவால்..” குழப்பத்தில் ரசிகர்கள் | MS Dhoni Retirementதமிழ்நாட்டில் பவன் போட்டி? அதிமுக கூட்டணியில் ஜனசேனா! பாஜக பக்கா ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PBKS vs MI: பல்தான்சை பஞ்சராக்கிய பஞ்சாப்.. கெத்தா குவாலிஃபயருக்குச் சென்ற ஸ்ரேயாஸ் பாய்ஸ்! எலிமினேட்டரில் மும்பை!
PBKS vs MI: பல்தான்சை பஞ்சராக்கிய பஞ்சாப்.. கெத்தா குவாலிஃபயருக்குச் சென்ற ஸ்ரேயாஸ் பாய்ஸ்! எலிமினேட்டரில் மும்பை!
Annamalai Vs Nainar: அண்ணாமலைக்கு கல்தா; ஆட்டத்தை ஆரம்பித்த பாஜக தமிழ்நாடு - அப்போ தேர்தலுக்கு எப்படி பாஸ்.?
அண்ணாமலைக்கு கல்தா; ஆட்டத்தை ஆரம்பித்த பாஜக தமிழ்நாடு - அப்போ தேர்தலுக்கு எப்படி பாஸ்.?
IPL MI Vs PBKS: 185 ரன்கள் வெற்றி இலக்கு; மும்பையை வீழ்த்தி முதலிடம் பிடிக்குமா பஞ்சாப்.?
185 ரன்கள் வெற்றி இலக்கு; மும்பையை வீழ்த்தி முதலிடம் பிடிக்குமா பஞ்சாப்.?
சென்னையிலே மிகவும் ஆபத்தான சாலை எது தெரியுமா? ஒரே ஆண்டில் இத்தனை விபத்துகளா?
சென்னையிலே மிகவும் ஆபத்தான சாலை எது தெரியுமா? ஒரே ஆண்டில் இத்தனை விபத்துகளா?
PBKS vs MI: குவாலிஃபயருக்கு மல்லுகட்டு! ரன்மழை பொழியுமா பல்தான் பாய்ஸ்? பந்துவீச்சில் மிரட்டுமா பஞ்சாப்?
PBKS vs MI: குவாலிஃபயருக்கு மல்லுகட்டு! ரன்மழை பொழியுமா பல்தான் பாய்ஸ்? பந்துவீச்சில் மிரட்டுமா பஞ்சாப்?
Nilgiris Heavy Rain: மூடப்பட்ட சுற்றுலா தளங்கள்.. மிதக்கும் ஊட்டி.. தத்தளிக்கும் மக்கள்! விடாமல் அடிக்கும் மழை
Nilgiris Heavy Rain: மூடப்பட்ட சுற்றுலா தளங்கள்.. மிதக்கும் ஊட்டி.. தத்தளிக்கும் மக்கள்! விடாமல் அடிக்கும் மழை
Corona Cases in India: ‘மக்களே உஷார்‘ இந்தியாவில் 1000-த்தை கடந்த கொரோனா பாதிப்பு - எத்தனை பேர் பலி தெரியுமா.?
‘மக்களே உஷார்‘ இந்தியாவில் 1000-த்தை கடந்த கொரோனா பாதிப்பு - எத்தனை பேர் பலி தெரியுமா.?
CM Stalin Salem Visit: இரண்டு நாள் சுற்றுப்பயணமாக முதல்வர் சேலம் வருகை... ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை திறந்து வைக்கிறார்
இரண்டு நாள் சுற்றுப்பயணமாக முதல்வர் சேலம் வருகை... ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை திறந்து வைக்கிறார்
Embed widget