Guillain-Barre syndrome : கொரோனா தடுப்பூசியின் விளைவு? பிரிட்டன் பெண்மணிக்கு நேர்ந்த பரிதாபம்!
Guillain-Barre syndrome : கொரோனா தடுப்பூசியால் பாதிக்கப்பட்ட பெண்மணி.
![Guillain-Barre syndrome : கொரோனா தடுப்பூசியின் விளைவு? பிரிட்டன் பெண்மணிக்கு நேர்ந்த பரிதாபம்! UK woman alleges coma, painful rare disorder after receiving AstraZeneca vaccine last year Guillain-Barre syndrome : கொரோனா தடுப்பூசியின் விளைவு? பிரிட்டன் பெண்மணிக்கு நேர்ந்த பரிதாபம்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/07/85b908d3dd8e1bbff7b590420027bd461670397340240333_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கொரோனா தொற்று பெருங்காலம் என்பது அனைவரின் வாழ்விலும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது என்றே சொல்லலாம். இதனை கட்டுப்படுத்த கொரோனா தடுப்பூசி நல்ல பலனளிக்கும் ஒன்றாக பார்க்கப்பட்டது. மேலும், கொரோனா தொற்று பரவலை தடுப்பதில் தடுப்பூசிகள் பெரும் உதவியாக இருந்ததையும் பார்க்க முடிந்தது. இருப்பினும், கொரோனா தடுப்பூசி எல்லாரையும் நோய் தொற்றில் இருந்து காப்பாற்றவில்லை என்று சொல்லும் அளவிற்கு நிலமை இருக்கிறது. ஆம், கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டதால் ஒருவர் கோமா நிலைக்கு சென்றுள்ளார். அந்த அளவுக்கு பின்விளைவு மோசமாக உள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.
சாரா பிர்ச் (Sarah Birch) என்பவர் இங்கிலாந்தைச் சேர்ந்தவர். ’Staffordshire’ பகுதியில் வசித்து வருபவர் ’AstraZeneca' கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார். கடந்த 2021 ஆம் ஆண்டு மே மாதம் 46 வயதான பெண்மணி கொரோனாவுக்கு தடுப்பூசி எடுத்து கொண்டார். இதனை தொடர்ந்து அவருக்கு முதுகுவலி, அடிக்கடி மயக்கம் ஏற்படுவது, நாக்கு மற்றும் பாதத்தில் டிங்க்ளிங் (tingling in toes) ஆகிய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. நாளுக்கு நாள் பின்விளைவுகள் அதிகமானதை தொடர்ந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சாராவின் உடல்நிலை மிகவும் மோசமாகியுள்ளது. அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். நான்கு நாட்கள் கழித்து அவர் சுயநினைவை (கோமா) முற்றிலும் இழந்துள்ளார். நான்கு நாட்கள் கழித்து அவரது உடல்நிலை சீராகியுள்ளது. பின்னர், அவருக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து மெடிக்கல் ஆய்வுகளில் அவருக்கு ’Guillain-Barré syndrome’ என்ற நோய் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
வைரஸ் நோய்தொற்று, வயிற்றுப்போக்கு, சுவாசம் தொடர்பான பிரச்சினைகள் ஆகியவை சில வராங்களுக்கு நீடிக்கும். பின்னர், அது Guillain-Barre சிண்ட்ரோம் ஏற்பட வழிவகுக்கும். மேலும், தடுப்பூசி செலுத்திக்கொண்ட சில நாட்களிலேயே சிலருக்கு Guillain-Barre சிண்ட்ரோம் ஏற்பட்டுள்ளதற்கான பதிவுகளும் உண்டு. ஆனால், தடுப்பூசி காரணமாக Guillain-Barre சிண்ட்ரோம் ஏற்படுவது மிகவும் அரிதாகவே நடந்துள்ளது.
தடுப்பூசி நிறுவனத்திற்கு எதிராக வழக்கு:
பிரிட்டனின் ’Vaccine Damage Payment Scheme (VDPS)’ திட்டத்தின்படி, AstraZeneca நிறுவனத்தின் மீது சாரா வழக்குத் தொடர்ந்துள்ளார்.
தனக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து சாரா கூறுகையில், “கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பின்னர், என் வாழ்க்கை முற்றிலுமாக மாறிவிட்டது. என்னால் தூங்க முடியவில்லை. எப்போதும் வலியோடு வாழ்ந்துகொண்டிருக்கிறேன். தடுப்பூசி செலுத்தி கொள்ளாமல் இருந்திருந்தால் என் வாழ்க்கை பிரச்சினையின்றி இருந்திருக்கும். நரக வேதனையை அனுபவித்து வருகிறேன். நான் சற்று கவனமாக இருந்திருக்க வேண்டும். மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளேன். என் வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவதற்கு சிரமப்படுகிறேன். தடுப்பூசி செலுத்தி கொள்ளாமல் இருந்திருக்கலாம் என்று நினைக்கிறேன். என்னால் பணி செய்ய முடியவில்லை. அரசு எனக்கு இழப்பீடு தொகையை வழங்க வேண்டும்.
’Guillain-Barre’ சிண்ரோம் பாதிக்கப்பட்ட நபர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். தீவிர சிகிச்சை அளிக்கும் நிலமையும் ஏற்படும். இது ஏற்படுவதற்கான காரணம் என்ன என்று இதுவரை கண்டறியப்படவில்லை. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் ஆறு வாரங்களுக்கு மேல் நோய் தொற்றின் அறிகுறிகள் தெரிவதாக கூறியுள்ளனர்.
இந்த சிண்ரோமில் இருந்து குணமாக சில ஆண்டுகள் கூட ஆகலாம். குணமடைந்த சிலர் ஆறு மாதங்களுக்கு பிறகு இதே நோய்தொற்று ஏற்பட்டுள்ளதாக மீண்டும் சிகிச்சைக்கு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்திகளும் உண்டு.
சிலர் இந்தப் பாதிப்பில் இருந்து மீளமுடியாமல் வலியோடும் வாழ்ந்து வருகின்றனர்.
Guillain-Barre சிண்ட்ரோம்- க்கான அறிகுறிகள்:
- கைவிரல்கள், பாதங்கள், கணுக்கால் ஆகிய பகுதிகளில் ஊசி குத்துவது போன்ற உணர்வு.
- கால் மற்றும் கைகளில் தெம்பு இல்லாமல் போவது.
- நடப்பதற்கு சிரமம். படிக்கட்டுகள் ஏறும்போது வலி ஏற்படும்.
- பேசுவதற்கு, உணவு சாப்பிடுவது அல்லது முக பாவனைகள் செய்ய முடியாம் போகும்.
- கைகள் மற்றும் கால்களில் கடுமையான வலி ஏற்படும்.
- சிறுநீர், மலம் கழித்தல் நிகழ்வுகளில் சிரமம்
- உடலின் வெப்பநிலை கடுமையாக உயரும்.
- திடீரென இரத்த அழுத்தத்தில் மாறுபாடு ஏற்படும்.
- சுவாசம் தொடர்பான சிக்கல்கள் ஏற்படும்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)