Boris Johnson | எளிமையான திருமண நிகழ்வில் காதலியை மணந்தார் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்
கடந்த ஆண்டு குடும்பத்தை நடத்த ஊதியம் போதவில்லை என்பதால் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய போரிஸ் ஜான்சன் முன்வந்தார்.
![Boris Johnson | எளிமையான திருமண நிகழ்வில் காதலியை மணந்தார் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் UK PM Boris Johnson married his fiancee in secret ceremony says Report Boris Johnson | எளிமையான திருமண நிகழ்வில் காதலியை மணந்தார் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/30/7a13ac5432ec34c0eb9a66084f45cd3d_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
இங்கிலாந்து நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன், காதலி கேரி சைமண்ட்ஸ் இடையேயான திருமணம் எளிமையான முறையில் நடைபெற்றது. கடந்த 2019-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், கரீபியன் பகுதியில் அமைந்துள்ள மஸ்டிக் தனியார் தீவில் இருவரும் நிச்சயம் செய்துகொண்டனர். இவர்களுக்கு, வில்பிரட் என்ற ஒரு வயது மகன் உள்ளார். ஆனால், இங்கிலாந்து நாட்டின் பிரதமர் அலுவலகம் இதுகுறித்த முறையான அறிவிப்பை இதுவரை வெளியிடவில்லை.
இலண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் பேராலயத்தில் திருமணம் எளிமையான முறையில் நடைபெற்றது. இந்த திருமண நிகழ்ச்சியில் இருவரின் நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே அழைக்கப்பட்டனர். இங்கிலாந்து நாட்டில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. திருமண சார்ந்த நிகழ்வுகளில் 30 நபர்களுக்கு மேல் கலந்துக்கொள்ள அங்கு அனுமதியில்லை. இந்த தகவல் உண்மையாக இருந்தால், 1822-ஆம் வருடத்திற்குப் பிறகு, நாட்டின் பிரதமர் பதவியில் இருக்கும் போது திருமணம் செய்துகொண்ட முதல் நபர் என்ற பெருமையை போரிஸ் ஜான்சன் பெறுவார்" ஏன டெய்லி மெயில் நாளிதழ் தெரிவித்தது.
1822-ஆம் ஆண்டு பிரட்டன் நாட்டின் பிரதமராக இருந்த லிவர்பூல் பிரபு (Lord Liverpool) மேரி செஸ்டர் (Mary Chester) என்பவரை திருமணம் செய்து கொண்டனர். வெஸ்ட்மின்ஸ்டர் பேராலய செய்தித் தொடர்பாளர் இந்தத் தகவலை உறுதிபடுத்தியுள்ளார். இதுகுறித்து, சண்டே டைம்ஸ் நாளிதழிடம் கூறுகையில், "மே 29 சனிக்கிழமையன்று, போரிஸ் ஜான்சன், கேரி சைமண்ட்ஸ் ஆகியோரின் திருமணம் வெஸ்ட்மின்ஸ்டர் பேராலயாலத்தில் நடந்தது உண்மைதான்" என்று தெரிவித்தார்.
”கோவா மக்களிடம் மன்னிப்பு கேட்க அவசியமில்லை” - கோவா அமைச்சருக்கு நிதியமைச்சர் பிடிஆர் விளக்கம்
போரிஸ் ஜான்சன்:
2019 ஜூலை முதல் இங்கிலாந்து நாட்டின் பிரதமராகவும், கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராகவும் உள்ளார். 2016-ஆம் ஆண்டில் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேற வேண்டும் என்ற "பிரெக்சிட்" இயக்கப் பரப்புரையில் முக்கிய பங்காற்ற ஆரம்பித்தார். 2019 ஆம் ஆண்டில் தெரேசா மே பிரதமர் பதவியில் இருந்து விலகியதை அடுத்து, ஜான்சன் கட்சித் தலைமைப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு, பிரதமராக நியமிக்கப்பட்டார். 2019 டிசம்பரில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்லில், ஜான்சன் தலைமையிலான பழமைவாதக் கட்சி மகத்தான வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. போரிஸ் ஜான்சன் வாழ்க்கையை முறையாக கணிக்க முடியாத ஒன்று என்றே சொல்லலாம். இதுவே, அவரின் வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைந்து விட்டது.
கடந்தண்டு குடும்பத்தை நடத்த ஊதியம் போதவில்லை என்பதால் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய போரிஸ் ஜான்சன் முன்வந்தார். பிரதமர் பதவிக்கு வருவதற்கு முன்பு, ஆண்டு வருமானம் போதியளவில் இருந்ததாகவும், தற்போது ஆண்டு வருமானம் குறைந்து விட்டதாகவும் தெரிவித்தார்.
மேலும், வாசிக்க:
தோழியிடம் சீன் போடுவதற்காக 100 டாலர் டிப்ஸ்.. திரும்பி வந்து பணத்தைக் கேட்டபோது பாகம் புகட்டிய பெண்!
‛டைட் ஜீன்ஸ் கிடையாது; ஸ்பைக் கூடவே கூடாது’ வடகொரியாவில் அதிபர் கிம் விதித்த தடைகள்!
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)